Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chinna Thambi Serial: சின்னதம்பி பிரஜன்... தங்கம் சான்ட்ரா... மறுபடியும் வந்த ஓல்டுகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் பிரஜன் நடித்த சின்ன தம்பி சீரியலும், சன் டிவியின் இவரது மனைவி சான்டரா நடித்த தங்கம் சீரியலும் மறு ஒளிபரப்பாகி வருகின்றன. இருவரும் காதல் திருமணம் செய்துக்கொண்டவர்கள்.

சன் மியூசிக் சானல் மூலம் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பிரபலம் ஆனவர் பிரஜன். இவர் நிகழ்ச்சித் தொகுப்பாளர் மற்றும் டான்சரான சான்ட்ராவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இருவரும் வெவ்வேறு சானல்களில் நடித்த முந்தைய சீரியல்கள் இப்போது கோவிட் 19 லாக்டவுன் அமலில் உள்ள நேரத்தில் மறு ஒளிபரப்பாகி வருகிறன.

சின்ன தம்பி சீரியல்

சின்ன தம்பி சீரியல்

கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சின்ன தம்பி சீரியலில் நடிகர் பிரஜன் மற்றும் நடிகை பாவனி இருவரும் ஜோடி சேர்ந்து நடித்து இருந்தனர். கோவிட் 19 லாக்டவுன் அமலில் உள்ள இந்த நேரத்தில் விஜய் டிவியில் பிரஜன் நடிப்பில் வெளிவந்த சின்ன தம்பி சீரியல் மறு ஒளிபரப்பாகி வருகிறது.

தங்கம் சீரியல்

தங்கம் சீரியல்

சன் டிவியில் தங்கம் சீரியல் இன்று முதல் மறு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் நாயகி நடிகை ரம்யா கிருஷ்ணன். சீரியலில் இவரின் தங்கையாக இரண்டு நடிகைகள் நடித்து உள்ளனர். அதில் ஒருவர் பிரஜனின் மனைவி சான்ட்ரா.இவர் இப்போது சீரியல்களில் நடிப்பதை விடுத்து முழு நேர குடும்ப தலைவியாக இருக்கிறார்.இந்த நேரத்தில் இவர் நடிப்பில் வெளியாகி வந்த சீரியல் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அன்புடன் குஷி

அன்புடன் குஷி

பிரஜன் விஜய் டிவியின் நடிகர் என்று சின்ன தம்பி சீரியலுக்கு பின்னர் முத்திரை குத்தப்பட்ட நடிகராக இருந்தார். சின்ன தம்பி சீரியல் முடிவடைந்து ஒரு வருடம் ஆன நிலையில் எந்த சீரியலிலும் நடிக்காமல் வீட்டில் தனது ட்வீன்ஸ் குழந்தைகளை கவனிப்பதில் மனைவிக்கு உறுதுணையாக இருந்தார். இவருக்கு மீண்டும் விஜய் டிவி அன்புடன் குஷி என்கிற சீரியல் மூலம் வாய்ப்பு கொடுத்து இருந்தது.

இப்போது வீட்டில்

லாக்டவுன் நேரத்தில் அன்புடன் குஷியும் இல்லை.. பிரஜன் - சான்ட்ரா தம்பதி தங்களது இரட்டை குழந்தைகளுடன் வீட்டில் பொழுதை கழித்து வருகின்றனர். இவர்கள் நடிப்பில் சீரியல்கள் மட்டும் விஜய் மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில் குழந்தைகளின் பிறந்த நாளைக் கொண்டாடிய மகிழ்வில் இருக்கின்றனர் தம்பதியர். பிரஜன் குழந்தைகளின் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+