முகத்துல மட்டும்தான் அசைவு தெரியுது... லிஃப்ட் வேலை செய்யுமா?
சென்னை: சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடிகர் பாண்டு வந்திருந்தார்.பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
ரஜினி சாருக்கு முன்னால் தாம் திரையுலகுக்கு வந்துவிட்டதாக கூறினார். நாட்டாமை படத்தில் மட்டும் தான் காமெடி செய்யாமல், கணக்குப் பிள்ளையாக நடித்த அனுபவத்தை கூறினார்.
மலேசியாவில் தான் பிசினெஸ் செய்துகொண்டு இருப்பதால், ஷூட்டிங் செய்வதற்கு ஏற்ற பல நல்ல லொக்கேஷன்களை தன்னால் காண்பிக்க முடியும்... இதுவரை அப்படிப்பட்ட இடங்களில் யாரும் ஷூட்டிங் நடத்தியதே இல்லை என்றும் இதற்கு முன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

காதல் கோட்டை
அஜீத்துடன் அவரது முதல் படமான ஆசை படத்தில் நடிச்சுருக்கேன். காதல்கோட்டை படத்தில் அவருடன் நடிச்சது நல்ல அனுபவம். ஜெய்ப்பூரில் ஷூட்டிங் நடத்தினாங்க. அங்க இருக்க ஹிந்தி பொண்ணுங்க அஜீத் மேல் காதல் கொண்டு டயலாக் பேசுவது போல காட்சி வரும், ஹிந்தி டயலாக்கை நீங்க எழுதுங்கன்னு டைரக்டர் சொன்னார். அந்த படம் ஒரு வருஷம் ஓடி சாதனை படைச்சுது

மாண்புமிகு மாணவன்
விஜய் முதல் படம் மாண்புமிகு மாணவன் படத்துலயே நடிச்சுருக்கேன். பிரபுதேவா கூட மனதைத் திருடி விட்டாய் படத்துல நடிக்கும்போது ஹாஸ்டல் வார்டனா நடிச்சுருப்பேன். பிரபுதேவா வடிவேலு எல்லாரும் ஸ்டூடண்டா இருப்பாங்க. இண்டியன் கிரிக்கெட் ஜெயிச்சுருச்சுன்னு ராக்கெட் விடுவாங்க.என்னை பார்த்ததும் ராக்கெட்டை வச்சுட்டு ஒளிஞ்சுக்குவாங்க. அதுக்கு நடுவுல நான் நிக்கற மாதிரியும் ராக்கெட் என்னை தூக்குவது போலவும் எடுத்த காட்சி உண்மையா எடுத்தது.பயத்துலதான் நான் நின்னுகிட்டு இருப்பேன்.

பிரபு தேவா வசனம்
பிரபு தேவா டைரக்ட் பண்ணிய போக்கிரி படத்தில் லிஃப்ட் நின்னுரும். ஒரு கோஷ்டி என்னை சரிசெய்ய வேணாம்னு சொல்லும். அதனால, நான் முகத்தை மட்டும் கோணலாக்கி சரி செய்வது போல வடிவேலுவுக்காக நடிப்பேன். அப்போ பிரபு தேவா, என்ன முகம் மட்டும் அசைஞ்சு நடிக்குது, உடம்புல ஒரு அசைவையும் காணோம்னு சொன்னார். அதையே டயலாக்கா வடிவேலு பேசினார்.

விளக்கேத்தி வச்ச கமல்
நடிகர், நடிகைகளுக்கு, டெக்னீசிஷியன்களுக்கு ஷீல்டு குடுக்க, நீங்க ஷீல்டு தயாரிக்கலாமேன்னு ஆலோசனை சொன்னதும், சட்டம் என் கையில் படம் முதல் தேவர் மகன் முதல் ஷீல்டுகள் தயாரிக்க வாய்ப்பு கொடுத்ததும் கமல்தான்.அவர்தான் என்னோட பிசினெஸ்க்கு விளக்கேத்தி வச்சவர்னு சொல்லலாம்.
சிவாஜி சார் கூட ஒரே ஒரு படத்தில் நடிச்சேன்.. அது வாழ்நாள் பெருமைன்னு சொல்லலாம் என்று நடிகர் பாண்டு கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications