அடேங்கப்பா என்னா மிரட்டல்.. ஆபரேஷன் பரிந்தே.. வெப் ஃபிலிம் பாருங்க மக்களே!
சென்னை: ஆபரேஷன் பரிண்டே ஜீ5 வெப் ஃபிலிம் தமிழில் அழகாக டப் செய்யப்பட்டு பார்க்க மிரட்டலாக இருக்கிறது. தியாகம் என்கிற ஒரு சொல்லை வைத்து தீவிரவாதிகள் கோரச் செயல்களை செய்யத் துணிந்த விஷயத்தை மிக அழகாக சொல்லி இருக்கிறார்கள்.
தீக்குச்சி விளக்கு ஏற்றவும் பயன்படும்.. வீட்டை எரிக்கவும் பயன்படும் என்று இரத்தின சுருக்கமாக புரியும்படி சொல்வது போலத்தான் இருக்கிறது தியாகம் என்கிற இந்த வார்த்தையும்.
என்றைக்கு உனக்கு வேண்டியவங்களுக்காக நீ உன்னைத் தியாகம் செய்ய நினைக்கிறாயோ.. அன்றைக்கு உன்னை யாராலும் அடிச்சுக்க முடியாது என்கிற டயலாக் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
|
பறவைகள் தப்பிக்க
பறவைகள் தப்பிக்க முடியாத சிறையில் 6 கைதிகள் தப்பிச்சு போயிடறாங்க. இதில் தலைசிறந்த சூத்திரதாரியாக பார்க்கப்படும் ஜெயில் கைதி மோன்டி சிங். இவர் தப்பித்து வெளிநாட்டுக்கு போய் இந்தியாவை தாக்க சதித் திட்டம் தீட்டுகிறார். இவர்தான் இந்தியாவில் குண்டுவெடிப்பின் பின்னணியில் முக்கியமாக சந்தேகிக்கப்படும் நபர். இவரை சிறப்பு பணிக்குழு அதிகாரி அபிநவ் மாத்தூர் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் எப்படி பிடிப்பார் என்பதுதான் படம்.

மாநிலங்கள் அலர்ட்
மும்பை, ஹைதராபாத், டெல்லி முதலிய மாநிலங்கள் இந்த கைதிகள் தப்பிப்பின் பின்னணியில் அலர்ட் செய்யப்படுகின்றன. எப்போதும் தீவிர கண்காணிப்பில் போலீசார், உளவுத்துறை ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றனர். இதற்கு நடுவில் அக்டிவேட்டட் வெயிட்டிங்னு ஒரு தகவல்...

24 மணி நேரம்
24 மணி நேரத்துக்குள் கிடச்சாகணும் என்று காலக்கெடு... அப்படி கிடைக்காவிடில் என்னவாகும் என்கிற பரபரப்பு.. காக்காக்கள்.. புறாக்கள் பிரிந்து விட்டன என்கிற கோட் வார்த்தைகள் என்று இந்த வெப்ஃபிலிம் படத்தை பார்க்கும் எதிர்பார்ப்பைத் தூண்டி இருக்கிறது. படப்பிடிப்பும் பரபர என்று இருக்கிறது.

கதை உண்மை நிகழ்வு
ஆபரேஷன் பரிண்டே வெப்ஃபிலிம் கதை உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு பின்னப்பட்ட கதை என்றாலும், முற்றிலும் உண்மை சம்பவம் என்றும் கூறிவிட முடியாது. உண்மை சம்பவத்தை ஆதாரமாகக் கொண்ட கற்பனை கதை. படப்பிடிப்பு முழுக்க முழுக்க பஞ்சாப் மாநிலத்தின் சில பகுதிகளில் எடுக்கப்பட்டு இருப்பதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லாக் டவுனால் போரடித்துக் கிடக்கும் மக்களுக்கு இப்படிப்பட்ட வெப் சீரிஸ், வெப் பிலிம்கள்தான் நல்ல பொழுது போக்கு.. அதில் இது பார்க்க வேண்டிய படம்தான்.
ஆபரேஷன் பரிண்டே வெப்ஃபிலிம் கதை உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு பின்னப்பட்ட கதை என்றாலும், முற்றிலும் உண்மை சம்பவம் என்றும் கூறிவிட முடியாது. உண்மை சம்பவத்தை ஆதாரமாகக் கொண்ட கற்பனை கதை. படப்பிடிப்பு முழுக்க முழுக்க பஞ்சாப் மாநிலத்தின் சில பகுதிகளில் எடுக்கப்பட்டு இருப்பதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லாக் டவுனால் போரடித்துக் கிடக்கும் மக்களுக்கு இப்படிப்பட்ட வெப் சீரிஸ், வெப் பிலிம்கள்தான் நல்ல பொழுது போக்கு.. அதில் இது பார்க்க வேண்டிய படம்தான்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications