OTT: சாண்டி ஆவி! திகில் கொலைகள்.. ZEE 5 ஓடிடியில் மிரட்டும் கிஷ்கிந்தாபுரி எப்படின்னு பாக்கலாமா?
சென்னை: இப்போலாம் ஒரு படம் நல்லா இருக்கா இல்லையான்னு தெரியாம தியேட்டருக்குப் போறதே பெரிய ரிஸ்க் ஆயிடுச்சு. ஆனா, சமீபத்துல தெலுங்குல ரிலீஸாகி, இப்போ தமிழ்ல டப் ஆகி வந்திருக்கிற 'கிஷ்கிந்தாபுரி' ஹாரர் த்ரில்லர் படத்தை பற்றித்தான் இப்போ பயங்கரமாக பேசிட்டு இருக்காங்க. அரைகுறை பயம்தான் இருக்குன்னாலும், சாண்டி மாஸ்டர் உட்பட நடிகர்களோட நடிப்பு தீயா இருக்காம்!

ஆவியை எழுப்பிவிட்டாங்க
பொதுவாவே இந்த பேய் படங்கள்ல பாத்தா, தேவையில்லாதக் காமெடி, பல்லு இளிச்ச பேய்ன்னு சலிப்பூட்டும். ஆனா, இந்த படத்தோட இயக்குநர் கௌஷிக் பெகள்ளப்பட்டி, அதையெல்லாம் கொஞ்சம் தவிர்த்துட்டு, கதையில உண்மையா இருக்க முயற்சி பண்ணியிருக்காராம்.
வேலை என்ன? ஹீரோ ராகவ் (பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ்) மற்றும் ஹீரோயின் மைதிலி (அனுபமா பரமேஸ்வரன்) ரெண்டு பேரும் ஒரு 'பேய் வாக் டூர்' கம்பெனில வேலை பார்க்குறாங்க. அதாவது, பேய் இருக்குற இடத்துக்கு மக்களை கூட்டிட்டு போய் பயமுறுத்துறதுதான் இவங்க வேலை. அப்படி ஒரு டூர் போகும்போது, சுவர்ணமாயா ரேடியோ நிலையம்னு ஒரு கைவிடப்பட்ட இடத்துக்கு போக நேரிடுது. அங்கதான் விபரீதமே நடக்குது!
நிஜ பேய்
அங்க, நிஜமான ஒரு ஆவி விழித்தெழுந்து, டூருக்கு வந்தவங்களை ஒவ்வொருத்தராத் தூக்கத் தொடங்குது. இந்த கொலைகளுக்கு பின்னால் என்ன மர்மம் இருக்கு? ராகவ்வும் மைதிலியும் இந்த ஆவியை எப்படிச் சமாளிச்சாங்க? என்பதே இந்தப் படத்தோட மெயின் கதை.
விமர்சனம் எப்படி இருக்கு
விமர்சனம் சொல்றவங்க என்ன சொல்றாங்கன்னா, கதையோட மூலக்கரு (Core Subject) நல்லா இருக்கு. பழசான ஹாரர் டெம்ப்ளேட்டுகளைத் தவிர்த்து, புதுசா ஏதோ சொல்ல முயற்சி பண்ணியிருக்காங்க. முக்கியமா, பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பு, குறிப்பா சாண்டி மாஸ்டரோட வில்லன் அவதாரம் செம அனல் பறக்கும் நடிப்பை கொடுத்திருக்காரார்.
ஓட்டை என்னன்னா? முதல் பாதியில் நல்ல பயமும், சஸ்பென்ஸும் இருந்தது. ஆனா, இரண்டாம் பாதியில கொஞ்சம் வேகம் குறைஞ்சு, சில காட்சிகள் சும்மா அவசர அவசரமாக காட்டப்பட்டதால, எமோஷன்ல கனெக்ட் ஆக முடியல. முக்கியமா, திகில் படத்துல சிலக் காதல் பாடல்கள் வந்துத் தொந்தரவு கொடுத்திருக்குன்னு பலரும் குறைபட்டுக்குறாங்க. மொத்தத்துல, சும்மா ஒரு 'ஹாரர் த்ரில்லர்' பார்க்கணும், நடிப்பு நல்லா இருக்கணும்னு நினைச்சா, ஒரு தடவை பார்க்கலாம்!
ஓடிடியில் வரவேற்பு எப்படி
இந்த படம் தியேட்டர்ல ரிலீஸ் ஆனதைத் தொடர்ந்து, இப்போ ஓடிடியிலயும் வந்திருக்கு. 'கிஷ்கிந்தாபுரி' படம் ZEE5 தளத்துல, தமிழ், கன்னடம், மலையாளம்னு பல மொழிகள்ல ரிலீஸ் ஆயிருக்கு தெலுங்குல அக்டோபர் 17ஆம் தேதியும், மத்த மொழிகள்ல அக்டோபர் 24ஆம் தேதியிலும். திகில் மற்றும் மர்மம் நிறைந்த இந்தக் கதைக்கு, ZEE5 தளத்துல 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, நல்ல வரவேற்பை பெற்றிருக்காம்! இது ஒரு பெரிய வெற்றிதான்!
அதனால, தியேட்டருக்கு போய் அரைகுறையா பயப்படுறதை விட, வீட்ல நிதானமா பார்க்கணும்னு நினைக்குற ஆட்களுக்கு, ஓடிடியில இந்த 'கிஷ்கிந்தாபுரி' ஒரு டீசன்ட்டான சாய்ஸ்னு சொல்லலாம்!












Click it and Unblock the Notifications