Pandian Stores Serial: ப்ரோமோவா போட்டு போட்டுத் தாக்கறாய்ங்க...!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ப்ரோமோவே ஒரு வாரத்துக்கு தாங்கும் போல!
முல்லையின் பொறந்த நாளுக்கு கதிர் வாழ்த்து சொல்ற ப்ரோமோ ஒரு வாரத்துக்கு போட்டுத் தாக்கறாய்ங்க...
இன்னும் எபிசோட் வந்த பாடுல்ல... கடந்த ஒரு வாரமா 8 மணிக்கு சீரியல் ஆர்வலர்கள் பார்த்து பார்த்து நொந்து போறாங்க.

கதிர் முல்லை
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கதிர் முல்லை சேர்ந்துட மாட்டாய்ங்களானு அவங்க குடும்பம் மட்டுமில்லைங்க... சீரியல் ஆர்வலர்கள் குடும்பமும் போட்டி போட்டுக்கிட்டு, பந்தயம் கட்டிக்கிட்டு பார்க்கறாங்க. முல்லை கதிர் ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் கொள்ளை ஆசை வச்சி இருக்காங்க.

ஆசையை சொல்லிக்கலை
ஒருத்தர் மீது ஒருத்தர் ஆசை வச்சு இருந்தாலும் ஒருத்தர் ஒருத்தருக்கு பிடிக்கலையோன்னு சந்தேகம் வந்திருது. அதனால் முல்லை நான் பொறந்த வீட்டுக்கு போறேன்னு சொல்ல, கதிரும் தன்னை பிடிக்கலையோன்னு நினைச்சு சரி போன்னு சொல்லிடறான்.

கொண்டு விட்டுட்டு
அண்ணன் சொல்றார் அதென்னடா தனியா போறது கொண்டு போயி விட்டுட்டு வா.. அம்மா வீட்டுல இருந்துட்டு வரட்டும்னு.. அதனால் கதிர் விட்டுட்டு வர்றான். இதுக்கு நடுவுலதான் பொறந்த நாள் வருது முல்லைக்கு. சரி பொறந்த நாள் கிஃப்ட் தருவோம்னு இவன் யோசிச்சுக்கிட்டு இருக்கும்போதே இவன் அண்ணன் போயி வீட்டுக்கே அழைச்சுக்கிட்டு வந்துடறார்.

முல்லை நினைவில்
கதிர் முல்லை நினைவில் வீட்டுக்கு வர வீட்டு வாசலில் இவள் இருப்பது போல இருக்கிறது. வந்துட்டியான்னு கேட்கறான் காணாமல் போகிறாள். கனவான்னு கேட்டுக்கறான் கதிர். கட்டிலில் ஜடம் போல உட்கார்ந்து இருக்க. இன்னிக்கு என்னடா எங்கே பார்த்தாலும் இவ இருக்கான்னு நினைச்சுக்கறான்.

12 மணிக்கு
இருந்தாலும் 12 மணிக்கு உள்ளே வாழ்த்து சொல்லிடணும்னு நினைச்சு முல்லை பொறந்த நாள் வாழ்த்துக்கள்னு சொல்ல அவள் சந்தோஷமாக கையை நீட்டுகிறாள், இந்த காட்சி இன்று இரவு 8 மணிக்காவது ஒளி பரப்பாகுமா என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications