17-ஆவது போட்டியாளர் என அறிவிக்கப்பட்டு வெண்ணிற ஆடையில் வந்திறங்கிய ஓவியா... ஆனால்?
பிக்பாஸ் 2 சீசனில் ஓவியா வந்துள்ளார்.
Recommended Video

சென்னை: பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் அனைவராலும் போற்றப்பட்ட ஓவியா 17-ஆவது போட்டியாளர் என கமல்ஹாசன் அறிவித்தார். ஆனால் 16 போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரத்தான் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டார் ஓவியா. அவர் போட்டியாளர் அல்ல.
பிக்பாஸ் சீசன் 2 இன்று தொடங்கியது. இதற்காக நேற்றைய தினமே போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுவிட்டனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பொரணி பேசுவதற்கென்றே ஏராளமான திண்ணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சி இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.
#பிக்பாஸ் வீட்டிற்க்குள் மீண்டும் #ஓவியா! 😍😍 #VivoBiggBoss - இன்று இரவு 7 மணிக்கு உங்கள் விஜயில். @ikamalhaasan @OviyaaSweetz #BiggBossTamil @Vivo_India #TheGrandOpening pic.twitter.com/WZkosrYVUF
— BiggBossTamil (@BiggbossTamil) June 17, 2018

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
பிக்பாஸ் சீசன் 2 போட்டியில் யார் யார் கலந்து கொள்கின்றனர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. அவரவர் தங்களது அபிமான நட்சத்திரங்கள் வருவரா என எதிர்பார்த்து காத்து இருந்தனர்.

ஒளியவும் முடியாது
இந்த நிகழ்ச்சியில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற வாசகம் மிகவும் பிரபலமாகும். யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்ற ப்ரோமோவும் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் தொற்றியது.

பிக்பாஸ் நிகழ்ச்சி
பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் ஓவியா, பரணி, சுஜா ஆகியோர் நல்ல பெயரும், ஜூலி, காயத்ரி, சக்தி, நமீதா ஆகியோர் வில்லிகளாகவும் செயல்பட்டனர். இதில் ஓவியா மிகவும் பிரபலமானார். அவர் ஆரவ்வுடனான காதல் முறிந்ததால் மனம் உடைந்து பிக்பாஸ் நிக்ழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

ஓவியாவை முன்வைத்து..
முதல் சீசனில் ஓவியாவுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே ஏற்பட்டது. ஓவியா ஆர்மி செயல்பட தொடங்கியது. இந்நிலையில் 17-வது போட்டியாளர் என ஓவியாவை அறிவித்து ஆர்மியை குஷிப்படுத்தியது விஜய் டிவி. ஆனால் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துவிட்டு திரும்பி வந்துவிடுவார் என கமல் அறிவித்தார்.

வெண்ணிற ஆடை ஓவியா
வெள்ளை நிற ஆடையில் ஓவியா நிகழ்ச்சிக்கு வந்தார். அதுவும் 17 வது போட்டியாளர் என அறிவிக்கப்பட்டு அப்போது ஓவியாவை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதையெல்லாம் வேண்டாம் என்று விட்டு விட்டு சென்று வீட்டீர்களே என்று கமல் கூறும் போது கள்ளம் கபடம் இல்லாத குழந்தை போல் தோள் பட்டையை ஷேக் செய்தார் ஓவியா. ஆனால் ஓவியா பிக்பாஸ் குடும்பத்தின் அங்கம்; அவர் வீட்டுக்குள் சென்று போட்டியாளர்களுக்கு டிப்ஸ் கொடுத்துவிட்டு வந்துவிட வேண்டும் என்றார். மேலும் ஒரு போட்டியாளரைப் போல உள்ளே சென்று இன்ப அதிர்ச்சி கொடுங்கள் எனவும் கமல் சொல்ல ஓவியாவும் அதேபோல் உள்ளே நுழைந்தார். பிக்பாஸ் 2-ல் ஓவியாவும் இருப்பதாக புரோமாவை போட்டு போட்டு காட்டி கடைசியில் 'ஆண்டவர்' ஏமாற்றிவிட்டார் என ஏமாந்தனர் 'ஆர்மி'க்காரர்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications