வேண்டா வெறுப்புக்கு புள்ளைய பெத்து காண்டாமிருகம்னு பேரு வச்சமாதிரி.. படையப்பா டிரைலர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை (டிசம்பர் 12) திரையரங்குகளில் மீண்டும் வெளியாகவுள்ள 1999-ஆம் ஆண்டு வெற்றிப் படமான 'படையப்பா'வின் 8K டால்பி அட்மாஸ் ரீ-ரிலீஸ் டிரெய்லர் நேற்று வெளியானது. ஆனால் இந்த 2 நிமிட 50 வினாடி டிரெய்லர் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

"இது பிலிம் ஸ்கூல்களில் எப்படி டிரைலர் கட் எடுக்க கூடாது என்று கற்றுக்கொடுக்க எடுக்கப்பட்டது" என்று பல நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர். குறிப்பாக, வேகமாக ஓடும் கட்-டு-கட் எடிட்டிங் ,பிரமாண்ட டயலாக்குகளை "கிளைமாக்ஸ்" இல்லாமல் தூக்கி எறிந்தது, - "இது சும்மா டிரெய்லர் தான் மா..." டயலாக்கை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இறுதியில் அந்த பஞ்ச் டயலாக்கே இல்லாதது ஆகியவை பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. டிரெய்லர் 1080p தரத்தில் மட்டுமே வெளியிடப்பட்டதும், "8K படத்துக்கு இது என்ன கேலிக்கூத்து?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

rajinikanth movie

இருப்பினும், மறுபக்கம் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் "தலைவர் என்ட்ரி, நீலாம்பரி என்ட்ரி, பின்னணி இசை... இதுவே போதும், மாஸ்!" என்று கொண்டாடி டிக்கெட் புக் செய்து வருகின்றனர். பல திரையரங்குகளில் முதல் நாள் ஷோக்கள் ஏறக்குறைய ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டதாகத் தகவல்.

"26 வருஷமாச்சு... இன்னும் இந்த மாஸ் எப்படி இருக்கு பாரு!" என்று ஒரு ரசிகர் உருக்கமாகக் கமெண்ட் போட்டிருக்க,
"எடிட்டிங் யாரு பண்ணது? இவ்வளவு ஹர்ரி-ல எடிட்டிங் பண்ணியிருக்காங்க" என்று மற்றொருவர் கிண்டல் செய்திருக்கிறார். சில ரசிகர்கள் அவர்களாக எடிட் செய்த டிரைலர் கூட சவுந்தர்யா ரஜினிகாந்த் நேற்று ஷேர் செய்த டிரைலரைவிட நன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எப்படியிருந்தாலும், நாளை காலை முதல் தமிழகம் முழுவதும் 'படையப்பா' மீண்டும் திரையரங்குகளில் அதிரப் போவது உறுதி!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+