Pandavar Illam Serial: இது ஆடி மாசம் கூட இல்லையே.. வரிசை கட்டிட்டாங்க!
சென்னை: சன் டிவியின் பாண்டவர் இல்லம், நிலா ஆகிய இரண்டு சீரியல்களிலும் மஞ்சள் புடவை கட்டி வேண்டுதல்... பரிவட்டம் கட்டி முதல் மரியாதை என்று ஆடி மாசம் மாதிரி அம்மன் கோயில்...பக்தி மயம்!
பாண்டவர் இல்லம் சீரியலில் மல்லிகா, கயல், ரேவதி மூணு பேரும் குழந்தை வரம் வேண்டி அம்மனுக்கு மாலை போட்டு விரதம் இருக்கிறார்கள். இத்தனைக்கும் கல்யாணம் ஆகி மூவருக்குமே இன்னும் முழுசா ஒரு வருஷம் ஆகலை!
நிலா சீரியலில் நிலாவுக்கு பரிவட்டம், முதல் மரியாதை பூஜை, பரிகாரம் என்று அம்மன் பக்தி மயம். இதில் ஒரு சாமியாடி அம்மா அருள் வேறு வந்து வேலை எடுத்துக்கொண்டு நிலவை குத்த வரும் விபரீதம் நடக்குது.

குழந்தை வரம் வேண்டி
பாண்டவர் இல்லத்துக்கு வாரிசு வேண்டும் என்று வீட்டுக்கு வந்த மருமகள்கள் ரேவதி, கயல், மல்லிகா மூன்று பேரும் அம்மனிடம் குழந்தை வரம் வேண்டி மாலை போட்டு விரதம் இருக்கிறார்கள். மஞ்சள் சேலை, கழுத்தில் மாலை என்று பக்தி பரவசமா இருக்கும் .கயல், மல்லிகா விரதத்தை கலைக்க மூத்த மருமகள் ரேவதி போடும் சதித் திட்டம், வழக்கமாக சீரியல்களில் நான் இருக்கிறேன் என்று பிரசன்ட் போடும் கெட்ட விஷயங்கள்தான்....

மண்ணெண்ணெய் விளக்கு
கயல், மல்லிகா விரதத்தை கலைக்க, ரேவதி அவங்க ரெண்டு பேரும் ஏற்றும் விளக்கில் மண்ணெண்ணெய் ஊற்றி வைக்கிறாள். மண்ணெண்ணய் விளக்கு பத்திக்குமா, பத்தாதா...இங்கே பத்திக்கிச்சு. கயல் முந்தானை தீப்பிடித்து எரிகிறது. உடனே விரதம் வேண்டாம்.. மாலையை கழட்டிடுங்கன்னு தாத்தா சொல்றார். நாங்க எந்த தப்பும் செய்யலை தாத்தா.. நாங்க எதுக்கு விரதத்தை கைவிடணும்னு ரெண்டு பேரும் கேட்கறாங்க.

நிலா சீரியல் நீலாம்பரி
நிலா சீரியலில் நீலாம்பரி அழகிய இளம் வில்லியா வர்றாங்க.. தினம் மதியம் இவங்க அழகை பார்க்கவே நிறைய பேர் சீரியல் பார்க்கறாங்க. மருமகள் நிலாவுக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதையை செய்யணுன்னு கோயிலில் ஏற்பாடு செய்யறாங்க நீலாம்பரி. முன்னாள் வில்லின்னு கூட இவங்களை சொல்லலாம். இப்போ திருந்தி மருமகளுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கறாங்க.

வேலால் குத்து
நிலாவின் அத்தை நிலாவை கோயிலில் வைத்து ஒரு பெண் சாமியாடி மூலம் கொல்ல சதி செய்யறாங்க. சாமியாடியும் முதல் மரியாதை பரிவட்டம் என்று பூஜையில் இருக்கும் நிலாவை சாமி வந்த பின் வேலால் குத்தி கொலை செய்யப் போறாங்க. அந்த நேரம் பார்த்து அந்த வேலை நீலாம்பரி தாங்கிப் புடிச்சு அவங்க கையில் காயம் பட்டுடுது. இப்படி அம்மன் பக்தி மயம் சன் டிவியின் சீரியல்களில் வரிசை கட்ட ஆரம்பித்து இருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications