Pandavar Illam Serial: மச்சான் சாமி... மாமா சாமி... ஆத்தாடியாத்தா...!
சென்னை: சன் டிவியின் பாண்டவர் இல்லம் சீரியல் குடும்ப ஒற்றுமையை உணர்த்தும் கதை. அந்த கிராமத்தில் பாண்டவர் இல்லம் என்றால், தனி மதிப்பு.. மரியாதை. குடும்பம் என்றால்...திருமணம்... பிள்ளை பேறு..குடும்பம் என்பார்களே அப்படி இல்லை.
பேரப் பசங்க அஞ்சு பேரும் தாத்தாவிடம் வளர்க்கிறார்கள். இந்த வீட்டில் பெண்கள் வாசனையே இல்லை. பசங்களும் பிரம்மச்சாரிகளாகவே வாழ்கின்றனர். குடும்பத்துக்கு பெண்கள் வந்தால் குடும்பத்தை பிரித்து விடுவார்களாம்.
இப்படியான குடும்பத்தில்தான் ரேவதி, கயல், மல்லிகா என்று மூன்று மருமகள்கள் வருகிறார்கள். ரேவதி மட்டும் குடும்பத்தை பிரிக்க திட்டமிட்டு வீட்டில் நுழைகிறாள்.

ரேவதி கயல் மல்லிகா
முதலில் கயல் கடைசி பையன் குட்டி சுந்தரத்தை காதலிச்சு பாண்டவர் இல்லத்துக்கு மருமகளாக வருகிறாள். இவள் பாண்டவர் குடும்பம் நல்லா இருக்கணும்னு நினைக்கறவ. அடுத்து நான்காவது பேரன் அன்பு சுந்தரத்தை காதலிச்சு கல்யாணம் செய்துக்கொண்டு வீட்டுக்கு வரும் மல்லிகாவும் நல்ல மருமகள். மூத்த பேரன் ராசு சுந்தரத்துக்கு மனைவியாக வரும் ரேவதி குடும்பத்தை பிரிக்கணும்னு வீட்டுக்குள் காலடி எடுத்து வச்சவ.

ரேவதியின் திட்டங்களை
ரேவதியின் சதித் திட்டங்களை முறியடிப்பதுதான் கயல், மல்லிகாவின் வேலை. பாண்டவர் இல்லத்தில் இருக்கும் பணத்தை திருடும் எண்ணத்தில் அடிக்கடி வீட்டுக்கு வர்றாங்க ரேவதியின் அம்மா.. இப்படி போகிறது வாழ்க்கை. இதில் இரண்டவது பேரன் நல்ல சுந்தரம்தான் வீட்டில் சமைப்பது...சமையலில் வித்தியாசம் வித்தியாசமாக மெனுக்களை சொல்லி அசர அடிப்பவர் இவர்.

இலந்தை கொட்டை பகோடா
இலந்தை கொட்டை பகோடா.. பனங்கொட்டை பாயாசம்...என்று விருந்தாளிகளை அதிர வைக்கும் சமையல்காரர் நல்லான். இதற்கு நடுவில் கவிதை வேறு எழுதி அதை இரண்டு முறை சொல்லி.. என்று தனி டிராக்கில் இவர் கதை போகும். தாத்தா பேரன்கள் என்று பாசக்கதையை பாண்டவர் இல்லம் சீரியலில் சொல்லி இருப்பது நன்றாக இருக்கிறது.

குழந்தை வரம் வேண்டி
குழந்தை வரம் வேண்டி மூன்று மருமகளும் அம்மனுக்கு மாலை போட்டு விரதம் இருக்கிறார்கள். அப்போது ரேவதியின் அம்மா வந்து நீ எதுக்குடி குழந்தை வேணும்னு மாலை போட்டு விரதம் இருக்கே.. உனக்குத்தான் கருப் பையே இல்லையே.. ஒரு ஆபரேஷனில் எடுத்தாச்சு இல்ல.. விரதமிருந்தா குழந்தை பிறக்குமான்னு கேட்கறாங்க.

ராசு மேல் பழி
என்னம்மா கத்தறே.. எனக்கு குழந்தை பிறக்காதுன்னு சொன்னால், அந்த வீட்டில் என்னை வச்சு இருப்பாங்களா.. எல்லாரும் ஏன் குழந்தை பிறக்கலேன்னு என்னை கேட்டால் நான் என்ன சொல்ல முடியும். மாலை போட்டு விரதம் இருந்தும் எனக்கு குழந்தை இல்லேன்னு கேட்டால், அந்த பழியை அவர் மேல தூக்கிப் போட்டுடலாம் இல்லே..அதுகுத்தான்.. நான் விரதம் இருக்கேன்னு ரேவதி சொல்றதை கயலும் மல்லிகாவும் கேட்டுட்டாங்க.

மாமா சாமி மச்சான் சாமி
கயலும், மல்லிகாவும் ரேவதிகிட்டே கேட்க, அவள் காலில் விழுந்து மன்றாடி இப்போ யார்கிட்டேயும் சொல்லாதீங்க. இந்த விரதம் முடியட்டும்னு அழறா. இதை பார்த்துட்ட அன்பு மச்சானும், குட்டி மாமாவும் கயலிடமும், ரேவதியிடமும் உண்மை என்னன்னு கேட்கும்போதுதான் மாமா சாமி.. மச்சான் சாமின்னு பேசுறாங்க கயலும், மல்லிகாவும். மஞ்சள் புடவையில் மாரியாத்தா அவதாரம் எடுத்தது போல இரு பெண்களும் நிற்கிறார்கள். மாலை போட்டுட்டா சாமி சாமின்னுதானே பேசணும்.. அதனால.. மாமா சாமி.. மச்சான் சாமி...












Click it and Unblock the Notifications