அவமானப்படுத்திய மல்லி.. சப்போர்ட்டுக்கு வந்த தனம்..கதறி அழுத ஐஸ்வர்யா.. பிரிந்த குடும்பம்
சென்னை: முல்லை வளைகாப்பு பங்க்ஷன் முடிவடைந்ததும் ஜீவாவும் மீனாவும் வீட்டிற்கு கிளம்பி விடுகின்றனர்.
ஐஸ்வர்யாவுக்கு யார் டெலிவரி பார்ப்பார்கள் என்று மல்லி அவமானப்படுத்துகிறார்.
ஆதரவாக பேசிய தனத்தை ஐஸ்வர்யா அவமானப்படுத்துகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் ஏப்ரல் 24ஆம் தேதி எபிசோடு ஆரம்பத்தில் மண்டபத்தில் பங்க்ஷன் எல்லாம் சிறப்பாக நடந்து முடிந்ததும் ஜீவாவும் மீனாவும் மண்டபத்தை விட்டு கிளம்புகின்றனர். தனம் சமாதானப்படுத்தி கொஞ்ச நேரம் இருக்க சொல்ல, முடியாது வீட்டில் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி மீனாவும் கிளம்பி விடுகிறார்.
கிளம்புவதற்கு முன்பு ஜீவாவிடம் தனம் பேச போக ஜீவா தயவுசெய்து மீண்டும் வீட்டுக்கு வாங்க என்று என்னை கூப்பிடாதிங்க என்று சொல்ல, அதற்கு தனம் நான் அப்படி சொல்ல வரலை. நீ நல்லா சாப்பிடுறதானே என்று கேட்டு விசாரித்து விட்டு அனுப்பி விடுகிறார்கள். பிறகு ஜீவா போன பிறகு, அழுது கொண்டிருந்த தனத்தை பார்த்து முல்லையின் அம்மா என்ன தனம் கொழுந்தனை காணவில்லை என்று அழுத, கொழுந்தன் வந்ததுக்கு அழுத, இப்போ போயிட்டானு அழுத, எப்ப பாத்தாலும் எதுக்கு அழுதுகிட்டே இருக்கிற என்று திட்டுகிறார்.

பிறகு குடும்பத்தில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்போது ஐஸ்வர்யாவுக்கு யார் பேருகாலம் பார்ப்பது என்று கேட்க கண்ணன் அதிர்ச்சி ஆகிறார். ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, இப்போ குடும்பத்தை வெட்டும் பிரிஞ்சி போயிட்ட, இனி யாரு இவங்களுக்கு பேருகாலம் பாப்பாங்க என்று மல்லி மீண்டும் பேசிக் கொண்டிருக்க தனம் ஏன் நாங்க பார்க்கிறோம் என்று சொல்ல, யாரும் பரிதாபப்பட்டு எனக்காக பார்க்க வேண்டாம் என்று ஐஸ்வர்யா தனத்தை திட்டுகிறார்.
பிறகு ஜீவாவும் முல்லையும் போட்டோ எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அனைவரும் கலகலப்பாக இருந்து, கண்ணனும் ஐஸ்வர்யாவும் மண்டபத்தை விட்டு கிளம்புகின்றனர். தனம் அப்போதும் கண் கலங்கி அவர்களை வழி அனுப்பி வைக்க, அங்கே வரும் மூர்த்தி நீ என்னவோ சொன்ன, எல்லாரும் இங்கேயே இருப்பாங்க என்று, ஆனால் எல்லோரும் கிளம்பிட்டாங்க என்று சொல்ல, மண்டபத்திற்கு எல்லோரும் வந்தார்கள் எல்லோரும் ஃபங்ஷனை சிறப்பாக செய்து முடித்துவிட்டார்கள் என்று சொல்கிறார்.

பிறகு மூர்த்தியிடம் தனத்தின் அம்மா என் பொண்ண பாத்தீங்களா? எப்ப பார்த்தாலும் அவ உங்க குடும்பத்துக்காகவே அழுதுகிட்டு வாழ்க்கையை தொலைத்துக்கொண்டு இருக்கிறார் என்று திட்டுகிறார். பிறகு எல்லோரும் கதிரின் வீட்டிற்கு வந்து விடுகின்றனர். முல்லை நான் இங்கேயே இருக்கிறேன் உங்க கூட வரல என்று கூறுகிறார்.
முல்லையின் அம்மா எப்படியாவது கூட்டி விட்டு போய்விடலாம் என்று சமாதான படுத்த பார்க்க அதற்கு நானெல்லாம் உங்களுக்கு உதவ வரமாட்டேன் என்று ஐஸ்வர்யாவின் அத்தாட்சி கூறிவிடுகிறார். பிறகு ஐஸ்வர்யா வீட்டில் மண்டபத்தில் நடந்ததை நினைத்து பார்த்து அழுது கொண்டே இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications