பங்கு பிரிப்பதில் ஐஸ்வர்யாவின் முடிவு? கதிருக்கு அதிர்ச்சி கொடுத்த மூர்த்தி..எதிர்த்து பேசும் கண்ணன்
சென்னை: சொத்து விஷயத்தில் கஸ்தூரி ஐஸ்வர்யாவை ஏற்றி விட ஐஸ்வர்யா கதிரிடம் கேள்வி கேட்கிறார்.
கதிர் சமாதானம் செய்ய வந்த இடத்தில் கண்ணன் கதிருக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.
ஹோட்டல் பணத்தை இனி தனத்திடம் தர வேண்டாம் என்று மூர்த்தி விரக்தியில் பேச அதற்கு கதிர் மறுக்கிறார்.

போட்டுக் கொடுக்கும் கஸ்தூரி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஏப்ரல் ஆறாம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் பாண்டியன் ஸ்டோர் வீட்டிற்கு போயிட்டு வந்த கஸ்தூரி ஐஸ்வர்யா மற்றும் கண்ணனிடம் சொத்தை பிரித்து கேட்ட விஷயத்தை பற்றி சொல்கிறார். இதனால் கோபமான கண்ணன் யாருகிட்ட போய் இதெல்லாம் கேட்டீங்க. இனிமே இந்த மாதிரி வேலை எல்லாம் பார்க்க பார்க்காதீங்க என்று திட்டுகிறார்.
இதுதான் உண்மை கண்ணா
அதற்கு கஸ்தூரி அந்த வீட்டில் உனக்கு உரிமை இருக்கு தானே என்று சொல்ல, இப்ப கட்டி இருக்கிற வீடு அண்ணனோட சம்பாத்தியத்தில் வந்தது என்று கண்ணன் கூற, அது உங்க பூர்வீக வீட்டை விற்று தானே இந்த இடத்தை வாங்கி இருக்கு என்று கஸ்தூரி சொல்ல, பூர்வீக வீடு அப்பா இறக்கும்போது கடனில் இருந்தது. அதற்கு பிறகு அண்ணனின் சொந்த உழைப்பினால் மட்டும்தான் அந்த வீட்டை மீட்டுக் கொண்டு வந்து இருந்தார். அதற்கு பிறகு அண்ணன்கள் இருவரும் வேலைக்கு போறாங்க ஆனால் நான் எதுவுமே செய்யல. என்ன படிக்க வச்சிருக்காங்க. எனக்கு ஒரு வேலையும் எடுத்து தந்திருக்காங்க நான் அந்த வீட்டில் பங்கு கேட்பதில் எந்த உரிமையும் இல்லை என்று கூறுகிறார்.

இப்போதைக்கு பங்கு வேண்டாமாம்
பின்னர் இது குறித்து பேச கதிர் கண்ணன் வீட்டுக்கு வந்து கண்ணனிடம் ஏன் இப்படி பண்ணுற? எதுக்காக இப்படி எல்லாம் பேசிகிட்டு இருக்க? என்று கேட்க அதற்கு கண்ணன் யார் என்ன சொன்னாலும் நம்பிருவீங்களா? கண்ணன் இப்படித்தான் என்று உங்களுக்கு யாருக்குமே தெரியாதா? என்று கேட்டு பிறகு எனக்கு சொத்து வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு அப்போது ஐஸ்வர்யா சொத்தில் பங்கு இருக்கு தானே? எப்படியும் அந்த வீடு நாலு பேருக்கும் பங்கு உண்டு? ஆனால் இப்போதைக்கு வேண்டாம் தனியா இருப்பதுதான் எங்களுக்கு நிம்மதி என்று சொல்கிறார். தொடர்ந்து இனிமேல் வீடு கட்டினாலும் நாம ஒன்றாக ஒரே வீட்டில் இருக்கப் போவது கிடையாது. நாங்க தனியா இருந்து பழகிட்டோம் என்று ஐஸ்வர்யா சொல்ல, கண்ணனும் ஆமாம் நாங்க இனி அங்க வர மாட்டோம். அங்க வந்தா மூர்த்தி அண்ணன் தட்டி தட்டி எங்களை தலை நிமிர விட மாட்டார் என்று சொல்ல, அதை கேட்டு கதிர் அதிர்ச்சியாகிறார்.
மகிழ்ச்சியில் மீனாவின் குடும்பம்
பிறகு மீனா வீட்டில் ஜீவா மாமனார் குடும்பத்தோடு பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கயல் பாப்பாவிற்கு ஸ்கூலில் நடந்த விஷயங்களை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். கயல் பாப்பாவுக்கு ஸ்கூலில் என்ன சொல்லிக் கொடுத்தாங்க என்று ஜனார்த்தனன் கேட்டு கொண்டு இருக்க, அதையெல்லாம் இப்பவே சொல்லிக் கொடுக்க மாட்டாங்க என்று மீனா சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது கயல் பாப்பா ரைம்ஸ் சொல்ல அங்கிருக்கும் அனைவரும் சந்தோஷமாக கயலை பாராட்டி மகிழ்ச்சியோடு இருக்கின்றனர்.

பயந்து போய் மூர்த்தி எடுத்த முடிவு
அப்போது மூர்த்தி வீட்டில் தனத்திடம் பேசிக் கொண்டிருக்கிறார். அங்கே கதிர் வர ஏன் இவ்வளவு லேட் ஆயிட்டு என்று கேட்டுக்கொண்டிருக்க, கதிர் கடையில் கூட்டம் அதிகம் ஆகிவிட்டது என்று சொல்லி, கையில் இருக்கும் பணத்தை கொடுக்க இவ்வளவு பிரச்சனைக்கும் பணம்தான் காரணம் அதனால் நீயே இந்த பணத்தை வச்சுக்க என்று மூர்த்தி சொல்ல, நான் ஜீவாவும் கண்ணனும் செய்த மாதிரி நான் செய்ய மாட்டேன் என்று கூறி கதிர் அந்த இடத்தை விட்டு செல்கிறார். முல்லையும் மூர்த்தியிடம் அவரை கஷ்டபடுத்தாதீங்க என்று சொல்ல மூர்த்தி கவலை அடைகிறார். அத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications