மன்னிப்பு கேட்ட தனம்.. அடிக்க கை ஓங்கிய முல்லை..அதிர்ச்சியில் மூர்த்தி செய்த செயல்.. கண்ணனின் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணனை மூர்த்தி அடித்ததற்காக ஐஸ்வர்யா கேள்வி கேட்கிறார்.

தனம் கண்ணனை அவமானப்படுத்தியதை தட்டி கேட்ட ஐஸ்வர்யாவை முல்லை திட்டி தீர்க்கிறார்.

முல்லை, கதிருக்கு எதிராக ஐஸ்வர்யா மொத்த பிரச்சனையும் திருப்பி விடுகிறார்.

 செண்டிமெண்டாக பேசும் தனம்

செண்டிமெண்டாக பேசும் தனம்

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மார்ச் 25ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் வீட்டுக்கு வந்த தனம் கண்ணனை திட்டுகிறார். உன்னால தானே இப்படி ஆச்சு ஏன்டா தனியா மொய் வெச்சா என்று கேட்டு உனக்கு அறிவில்லையா? என்று கடுமையான வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருக்க அதைக் கேட்டு கடுப்பான ஐஸ்வர்யா நிறுத்துங்க எப்ப பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்கிறது தான் உங்க வேலையா? என்று கேட்க, தனம் அதிர்ச்சியாகிறார். பிறகு கோபமான தனம் நான் கண்ணனை இந்த வீட்டுக்கு வரும்போது குழந்தையாக தான் பார்த்தேன். அதற்குப் பிறகு என்னுடைய குழந்தையாக தான் அவனை வளர்த்து வந்தேன். அவன் என்னுடைய கொழுந்தன் மட்டுமல்ல என்னுடைய குழந்தையும் தான்.

கை ஓங்கிய முல்லை

கை ஓங்கிய முல்லை

ஆனால் எனக்கு இருந்த உரிமை எல்லாம் நீ வந்த பிறகு பறிக்கப்பட்டு விட்டது என்பது எனக்கு தெரியாமல் ஆகிவிட்டது என்ன மன்னிச்சிடு என்று தனம் மன்னிப்பு கேட்கிறார். பிறகும் ஐஸ்வர்யா எதிர்த்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்த முல்லை உன்னை அடிச்சிடுவேன். அடிச்சா தான் சரி வருவேன்னு நினைக்கிறேன் என்று மிரட்ட, இவ்வளவு நாளா கல்யாணம் அடிச்சி என்னையும் அடிக்க துணிஞ்சிட்டீங்களா? என்று ஐஸ்வர்யா மேலும் கோபமாக கேள்வி கேட்கிறார்.

போட்டுக் கொடுத்த ஐஸ்வர்யா

போட்டுக் கொடுத்த ஐஸ்வர்யா


பின்னர் முல்லை ஐஸ்வர்யாவை திட்ட ஐஸ்வர்யா நீங்களும் தானே தனியா மொய் வச்சீங்க, அதுக்கு பதில் சொல்லுங்க எங்களை மட்டும் கேள்வி கேட்காதீர்கள் என்று கூற கதிரும் அதிர்ச்சி அடைகின்றார். அப்போது கண்ணனும் ஆமா இதுவும் சரியான கேள்வி தானே? இதற்கு பதில் சொல்லவே இல்லையே? என்னை மட்டும் எல்லாரும் குறை சொல்லிக்கிட்டே இருக்கீங்களே என்று கேட்க பின்னர் முல்லை மல்லி என்னோட சொந்த அக்கா தனியா மொய் வைக்க சொல்லி அம்மா சொல்லுச்சு அதை உங்ககிட்ட சொல்லத்தான் நான் மறந்துட்டேன் அக்கா என்று சமாளிக்கிறார்.

நல்லா சமாளிக்கிறீர்களே

நல்லா சமாளிக்கிறீர்களே

அடுத்த ஐஸ்வர்யாவும் இதே போலத்தான் நானும், மல்லி உங்களுக்கு அக்கானா? எனக்கும் அவங்க அத்தை பொண்ணு தானே, நானும் செய்யணும் தானே? அது மட்டுமில்லாமல் மீனா அக்காவோட அப்பா நாங்க எங்க ரெண்டு பேரையும் மதிச்சதே கிடையாது. அதனாலதான் நாங்க தனியா போய் வெச்சோம். நீங்க சொன்ன மாதிரி தான் நாங்களும் அக்கா சொல்ல மறந்துட்டோம் என்று சொல்கிறார். இதனால் கோபமான முல்லை நீ பிரச்சனையை எங்க பக்கம் திரும்ப பார்க்காத நீங்க மட்டும் ரொம்ப நல்லவங்களா? கண்ணன் சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா என்று கேட்க எல்லோரும் முழித்துக் கொண்டிருக்கின்றனர்.

மாட்டிக்கொண்ட கண்ணன்

மாட்டிக்கொண்ட கண்ணன்

பிறகு முல்லை, கண்ணன் 40,000 கிட்ட சம்பளம் வாங்கிட்டு உங்ககிட்ட 17,000 தான் தருகிறான் என்று சொல்ல ஐஸ்வர்யா ₹40,000 இல்ல 35 ஆயிரம் தான் என்று சொல்கிறார். இதனால் அதிர்ச்சியான தனம் ஏன்டா கண்ணா பொய் சொன்ன சம்பளத்தை தர வேணாம் எவ்வளவு தந்தாங்க என்று சொல்லலாம் தானே என சொல்ல ஐஸ்வர்யா நடிக்காதீங்க அக்கா என்று கூறி திட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவு வருகிறது.

இனி கண்ணனின் முடிவு தான்

இனி கண்ணனின் முடிவு தான்

அடுத்து வரும் எபிசோட்டில் நாங்க மொத்த சம்பளத்தையும் உங்ககிட்டயே தந்துட்டா ஒவ்வொரு செலவும் கையேந்தி நிற்கணுமா? அது மீனா அக்காவும், முல்லை அக்காவும் வேணா செய்வாங்க என்னால் செய்ய முடியாது. நான் இந்த வீட்டில் நிறைய அட்ஜஸ்ட்மென்ட் செய்துவிட்டு தான் இருக்கேன் என்று சொல்ல, இங்கே யாரும் அப்படி கஷ்டப்பட்டு இருக்க வேண்டாம் என்று மூர்த்தி கோபத்தில் கத்துகிறார். வீட்டை விட்டு வெளியே போகும் ஐஸ்வர்யா, கண்ணனிடம் மதிக்காத இந்த குடும்பம் வேணுமா? இல்லை நான் வேணுமா? எது வேணும் என்று நீயே முடிவு பண்ணிக்கோ என்று சொல்கிறார். அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+