பிடிக்காதவங்க இத்தனை பேரு? கதையில் ஏமாத்திட்டாங்க..சீரியலை விட்டு விலக காரணம்! சாய் காயத்ரி விளக்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து சமீபத்தில் சாய் காயத்ரி விலகி இருந்தார்.
சாய் காயத்ரி ஏற்கனவே அந்த சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் தான் எதற்காக அந்த சீரியலை விட்டு விலகினேன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சுமார் 4 வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அடுத்தடுத்து பல நடிகைகள் மாறிக்கொண்டே இருக்கின்றனர். இது ஆரம்பத்தில் இருந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் பல மாதங்களுக்குப் பிறகு இப்போது தான் விறுவிறுப்பான கதை வந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வந்த சாய் காயத்ரி திடீரென்று தனக்கு கதை பிடிக்கவில்லை என்று கூறி வெளியேறி இருந்தார்.
சாய் காயத்ரி விலகியதும் அவருக்கு பதிலாக, அவருக்கு முன்பாக நடித்து வந்த விஜே தீபிகா தற்போது அதே கேரக்டரில் தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய விலகல் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் சாய் காயத்ரி பேசி இருக்கிறார். அதில்
தன்னிடம் சொன்ன கதை இந்த சீரியலில் இல்லவே இல்லை ஏற்கனவே நடித்து வந்த நடிகை விலகியதும், என்னிடம் வேறு மாதிரி கதை சொன்னார்கள். இது 2கே கிட்ஸ் போன்ற தான் ஐஸ்வர்யாவின் கேரக்டர் தனக்கு என்ன வேண்டுமோ அதை பெற்றுக்கொள்வதில் குறியாக இருப்பார் என்று கூறினார்கள்.
ஐஸ்வர்யா கேரக்டர் பாசிட்டிவாக போய்க்கொண்டிருக்கும் என்றும் பாண்டியன் ஸ்டோர் குடும்பமே பண பிரச்சனையால் தவிக்கும்போது ஐஸ்வர்யா பியூட்டி பார்லர் வைத்து தனக்கு வரும் வருமானத்தால் குடும்பத்தை தலை நிமிர செய்வார் என்றும் கூறினார்கள். ஆனால் என்னிடம் சொன்ன மாதிரி வரவே இல்லை. சில மாதங்களுக்கு முன்பு அந்த மாதிரி ஒரு டிராக் வர ஆரம்பித்தது. ஆனால் டக் என்று கதையை மாற்றி அனைவரும் அடுத்தடுத்து கர்ப்பமாக இருப்பது போன்று கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள்.

சீரியலை பொறுத்தவரை ஆன்லைன் தான் சொல்வார்கள். அந்த கதையை முழுமையாக சொல்ல மாட்டார்கள். கதையை பற்றி நான் கேட்க முடியாது, கேட்கக்கூடாது. பல ஆர்டிஸ்ட்கள் தங்களுடைய கதாபாத்திரம் மாறும்போது பரவாயில்லை என்று தங்கள் கதாபாத்திரம் மாறினாலும் தொடர்ந்து நடிப்பார்கள். சில ஆசிரியர்களுக்கு தங்களுடைய கதாபாத்திரம் மாறும்போது அதை பண்ணுவதற்கு யோசிப்பார்கள். அது தன்னுடைய எதிர்காலத்திற்கு சரியா இருக்காது என்று கருதி அந்த மாதிரி தான் நான் முடிவு எடுத்தேன்.
அது மட்டுமல்லாமல் இந்த சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் நான் நடிக்கும் போது, எனக்கு அதிகமான நெகட்டிவர்ஸ் தொடங்கி விட்டார்கள். நான் இந்த சீரியலை விட்டு விலகிய பிறகு கூட பலரும் என்னை வைத்து சமூக வலைத்தளத்தில் பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர். நான் அடுத்தவர்களுக்காக வாழ முடியாது. எனக்கு பிடித்தது தானே செய்ய முடியும். அதனால் தான் இந்த சீரியலில் நான் விலகினேன் என்று கூறி இருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications