குடும்பத்தை பிரித்த ஐஸ்வர்யா செய்த அடுத்த செயல்.. குவியும் அறிவுரைகள்.. கண்ணன் சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் விஜே தீபிகா ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வருகிறார்.
தான் ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் விஜே தீபிகா பதிவிட்டு இருக்கிறார்.
அவரிடம் அதிகமான ரசிகர்கள் நல்லா இருந்த குடும்பத்தை பிரிச்சிட்டீங்களே என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

என்ன ஒரு கொண்டாட்டம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல்தான் தற்போது சின்னத்திரையின் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருக்கிறது. இத்தனை வருடங்களாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தாலும் இதுவரைக்கும் இல்லாத பரபரப்பும் மீம்ஸ்களும் தற்போது இந்த சீரியலுக்கு வலம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு குடும்பம் பிரிந்து போனால் இத்தனை பேர் சந்தோஷப்படுவார்களா? என்று பாண்டியன் ஸ்டோர் சீரியலின் பிரிவை பார்த்து தான் பலருக்கும் தெரிந்து கொள்ள முடிகிறது.

ஜீவாவிற்கு பாராட்டு
கடந்த வாரத்தில் ஜீவா மூர்த்தியிடம் கேள்வி மேலே கேள்வி கேட்ட விதம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து சமூக வலைதளத்தில் ஜீவாவை அதிகமானோர் பாராட்டி வந்தனர். இத்தனை நாட்கள் ஆக நாங்கள் மனதில் நினைத்து வைத்திருந்ததை எல்லாம் ஜீவா மூர்த்தியிடம் கேட்டு விட்டார். தனம் கதிர் முல்லை என அனைவருக்கும் சரியான பதிலடி ஜீவா கொடுத்திருக்கிறார். இந்த வீட்டில் அடிமையாக ஜீவா நடத்தப்பட்டதற்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த முடிவு நல்லது என்று பலரும் பாராட்டி வந்தனர்.

இதை மறந்துட்டாங்களோ
இந்த நிலையில் இந்த வாரம் இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமாக இருந்த கண்ணன் ஐஸ்வர்யா மூர்த்தியோடு சண்டை போட்டு வருகிறார். அதுவும் கண்ணன் எல்லாவற்றிருக்கும் பொறுமையாக இருப்பது போன்று சும்மா இரு ஐஸூ என்று பின்னாடி இருந்து ஐஸ்வர்யாவை தடுத்துக் கொண்டிருந்தாலும், ஐஸ்வர்யா தான் ஒரு 2கே கிட்ஸ் என்பதை நிரூபித்து மூர்த்திக்கு மற்றும் தனத்திற்கு செம டோஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இத்தனை நாளாக தான் சந்தித்த சோதனைகளை எல்லாம் ஐஸ்வர்யா பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் இருவரின் செயலால் குடும்பத்தில் நடந்த கஷ்டங்களை யாரும் சொல்லிக் காண்பிக்கவில்லை. ஒருவேளை அவர்களுக்கே மறந்து விடும் போல!? குறிப்பாக கண்ணனின் அம்மா இறந்தது கண்ணன் திடீர் திருமணம் செய்து கொண்டு வந்ததால் ஆனால் அதை யாரும் சொல்லவில்லை.

இது புது வேலையா இருக்கு
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் கண்ணனை தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யாவை அதிகமான ரசிகர்கள் திட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஐஸ்வர்யாவாக நடிக்கும் தீபிகா தற்போது ஒரு வொர்க் அவுட் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் தான் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்து கொண்டிருக்கிறார். அந்த வீடியோவிலும் அதிகமான ரசிகர்கள் நல்லா இருந்து குடும்பத்தை பிரிச்சிட்டீங்க, இப்ப நீங்க ஒர்க்அவுட் செய்துகிட்டு இருக்கீங்களா? அடுத்து என்ன பிரச்சனை ஏற்படப்போகிறது. என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் கண்ணனாக நடிக்கும் சரவணனும் தீபிகாவின் வீடியோவிற்கு ஓ என்கிற மாதிரி அதிர்ச்சியாகவும் சிம்பிள் கமெண்ட் ஆக கொடுத்து இருக்க, அதற்கு ஐஸ்வர்யா நல்லா இரு என்கிற மாதிரி கண்ணனை ஆசீர்வாதம் செய்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications