பாண்டியன் ஸ்டோர்ஸ்: சரவணனிடம் சிக்கிய அரசி.. காதலிப்பதை சொன்ன குமார்.. பாண்டியன் கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வின் 2025 மார்ச் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் அரசி மற்றும் குமார் காதலிக்கும் விஷயம் சரவணனுக்கு தெரிய வந்திருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த தருணம் இப்போது நடக்க தொடங்கிவிட்டது. இதுவரைக்கும் தங்கமயில் எப்போது பாண்டியன் குடும்பத்திடம் சிக்குவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு இன்று வெளியான ப்ரோமோ இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்கள்.

காதல் வலை
பாண்டியன் மற்றும் கோமதியின் மகளான அரசியை காதலிப்பதாக கோமதியின் அண்ணன் மகன் குமார் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தெரியாத அரசி தன்னுடைய மாமா குடும்பமும் தன் குடும்பமும் சேர வேண்டும் என்பதற்காக குமாரை காதலிக்க தொடங்கி இருக்கிறார். அதுபோல பழனியின் மனைவி சுகன்யா பாண்டியன் குடும்பத்தை பழி வாங்குவதற்காக அரசியை பயன்படுத்திக் கொள்கிறார்.

ஏமாறும் சுகன்யா
ஆனால் இது அரசிக்கு தெரியாமல் நம்முடைய காதலுக்கு தான் சுகன்யா சப்போர்ட் செய்கிறார் என்று நம்பிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் அரசி படம் பார்க்க போவதற்காக தியேட்டருக்கு கூப்பிட்டு இருந்தார் அதற்கு அரசி முடியாது என்று சொல்லி இருந்தார். ஆனால் சுகன்யா நீங்க ரெண்டு பேரும் காதலித்து திருமணம் செய்தால் இந்த இரண்டு குடும்பமும் மீண்டும் ஒன்றாக சேரும் என்று உசுப்பேத்தி விட்டிருந்தார்.

உண்மை தெரியாத பாண்டியன்
அதோடு உன்னை கட்டிக்க போறவன் தானே உன்ன தியேட்டருக்கு கூப்பிடுறான் நீ தைரியமா போயிட்டு வா. அவன் ரொம்ப... நல்ல பையன் என்று சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார். அதுபோல அரசியும் மனம் மாறி குமாருக்காக தியேட்டருக்கு போவதற்கு கிளம்புகிறார். அப்போது வீட்டில் எனக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு என்று கிளம்புகிறார். அதற்கு கோமதி, ஏ அரசி உனக்கு சனிக்கிழமை என்னைக்குமே காலேஜ் இருந்ததில்லையே என்று கேட்க, அதற்கு பாண்டியன், இப்போ என்ன அரசி காலேஜுக்கு போறேன்னு சொல்லிக்கிட்டு வேற எங்கேயாவது போக போகுதா? நீ பார்த்து போயிட்டு வாம்மா என்று அனுப்பி வைக்கிறார்.
சுகன்யாவின் சூழ்ச்சி
சுகன்யா நானும் எங்க வீட்டுக்கு போயிட்டு வரேன் மாமா என்று பாண்டியனிடம் சொல்லிவிட்டு அரசியை தியேட்டரில் கொண்டு வந்து விடுகிறார். அங்கு காத்திருந்த குமார் அரசியை கூட்டிக்கொண்டு உள்ளே போகப் போகிறார். அப்போது சுகன்யாவிடம் கண்ணை காட்டி விட்டு அரசியோடு சேர்ந்து போட்டோஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

சட்டையை பிடித்த கதிர்
அரசி போட்டோ எடுக்க வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் குமார் போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் சரவணன் தியேட்டருக்கு எதிரில் இருக்கும் டீ கடைக்கு டீ குடிக்க வருகிறார். அங்கு வைத்து அரசியை பார்த்து விடுகிறார். இதனால் குமாரிடம் என் தங்கச்சியை என்ன சொல்லி ஏமாற்றி போட்டோ எடுக்கிற என்று சட்டையை பிடிக்கிறார்.

குழப்புறாங்களே
அதற்கு குமார் நானும் உன் தங்கச்சி அரசியும் காதலிக்கிறோம் மச்சான் என்று சொல்ல, சரவணன் அதிர்ச்சியாகி நிற்கிறார். இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் இந்த ப்ரோமோவில் சில காட்சிகளை பார்த்து ரசிகர்களுக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதாவது பழனி பாண்டியனின் மனைவியின் தம்பி. பழனியின் மனைவி சுகன்யா பாண்டியனுக்கு தங்கை முறைதான் வரும். ஆனால் சுகன்யா நான் போயிட்டு வரேன் மாமா என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். இதனால் சுகன்யாவுக்கு பழனி எப்படி மாமா முறை வரும் என்று ரசிகர்கள் பாய்ண்ட் பிடித்து கேள்விகளாக கமெண்டில் தட்டி விட்டிருக்கிறார்கள்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications