Pandian Stores 2: சுகன்யாவால் பாண்டியன் குடும்பத்துக்கு வரும் பிரச்சனை! மயிலை அசிங்கப்படுத்திய கோமதி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில், யாரும் எதிர்பார்க்காத சில சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது. சுகன்யா பற்றிய ரகசியங்கள் குடும்பத்திற்கு இதுவரைக்கும் தெரியாமல் இருந்த நிலையில் இப்போது அவருடைய பிளாஷ்பேக் கதையை சொல்ல தொடங்கி இருக்கிறார். முன்னாள் கணவரை இன்று சுகன்யா பார்த்திருக்கிறார். அதே நேரத்தில் மயில் கர்ப்பமாக இல்லாததை வைத்து கோமதி பிரச்சனை செய்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், தன்னுடைய அம்மா வீட்டில் இருந்து தங்கமயில் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருக்கும்போது சரவணன் ஒரு இடத்தில் நிற்கிறார். அவரிடம் சென்று மயில் பேசுகிறார். ஆனால் மயிலிடம் பேசாமல் அங்கு வரும் ஆட்டோவில் சரவணன் மயிலை அனுப்பி வைக்கிறார். மயில் சரவணன் மாமா பொய் சொன்னப்ப எல்லாம் நம்பிட்டு உண்மை சொல்லும் போது நம்பாமல் இருக்கீங்க என்று சொல்லி அழுது கொண்டுஆட்டோவில் வருகிறார். மேலும் கஷ்டமோ நஷ்டமோ இவங்களோட தான் வாழ்ந்தாகணும் என்று சொல்லிப் புலம்புறார். இதனை அடுத்து ராஜி டியூஷன் கொடுக்கிற இடத்தில் அங்கு இருக்கும் பெண் தன்னுடைய அண்ணன் பைனான்ஸ் கம்பெனி தொடங்கப் போவதாக சொல்கிறார் அவரிடம் தனக்கு லோன் கிடைக்குமா என்று ராஜி விசாரிக்கிறார்.

ராஜி எடுத்த முடிவு
அதுக்கு அந்த வீட்டுப் பொண்ணு நான் பேசிட்டு சொல்லுறேன் என்கிறார். அதைக் கேட்ட ராஜி சந்தோஷப்படுகிறார். மறுபக்கத்தில் கதிர் தன் friend கிட்ட எல்லா பேங்க்லையும் போய் பணம் கேட்டேன் ஆனா யாருமே தரமாட்டேன் என்று சொல்லிட்டாங்க என்று கவலைப்படுறார். அதைக் கேட்ட friend இனி என்ன செய்யுற பிளான் என்று கேட்கிறார். அதுக்கு கதிர் என்ன செய்யுறது முயற்சி பண்ணிக்கொண்டிருக்க வேண்டியது தான் என்கிறார்.
கதிர் ராஜி சண்டை
அதைத் தொடர்ந்து ராஜி கதிரை ரோட்டுல பார்த்ததும் நானும் வீட்டுக்கு தான் போறேன் ரெண்டு பேரும் சேர்ந்து போவமா என்று கேட்கிறார். அதுக்கு கதிரும் ஆமா சேர்ந்து போலாமே என்று சொல்லுறார்.இதனை அடுத்து மயில் வீட்டில் வேலை பார்த்து விட்டு டயர்டாக இருப்பதாக சொல்ல அதற்கு கோமதி மயிலைப் பார்த்து கர்ப்பமா இல்ல என்ற விசயத்தை சொல்லி குத்திக் காட்டுறார். அதைக் கேட்ட மீனா கோமதியைப் பார்த்து எதுக்காக இப்புடி எல்லாம் கதைக்கிறீங்க என்று சொல்லிப் பேசுறார்.
சுகன்யாவின் ஃப்ளாஷ் பேக்
மறுபக்கத்தில் ராஜியும் கதிரும் வந்து கொண்டிருக்கும் போது கதிருக்காக ராஜி லோனுக்கு ரெடி பண்ணியது பற்றி சொல்ல, அதற்கு கதிர் நெகட்டிவாக பேசுகிறார். இதனால் ராஜி கோபமாக அங்கிருந்து கிளம்புகிறார். அதை தொடர்ந்து சுகன்யா பழனியிடம் தன்னுடைய உறவுக்கார வீட்டு பங்க்ஷனுக்கு போகணும் என்று சொல்ல முதலில் பழனி மறுக்கிறார். அதற்கு கோமதி போயிட்டு வர சொல்கிறார் பிறகு இருவரும் பங்ஷனுக்கு போயிட்டு வரும் வழியில் சுகன்யாவின் முன்னாள் கணவரை பார்த்ததும் சுகன்யா பயப்படுகிறார். இந்த இடத்தில் இருக்க வேண்டாம் போகணும் என்று பதட்டமாகி சொல்கிறார். அதை பார்த்ததும் பழனி என்ன நடந்தது என்று விசாரிக்க தன்னுடைய பழைய திருமண வாழ்க்கையில் நடந்த கஷ்டங்கள் குறித்து சுகன்யா சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications