Pandian Stores 2: சுகன்யாவின் மனமாற்றம்! செந்திலால் குடும்பத்தில் வரும் பிரச்சனை! மீனா கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல், குடும்ப உறவுகளின் சிக்கல்கள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகளுடன் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இன்றைய எபிசோடில் நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கு காணலாம்.

சுகன்யாவின் பயம்
நேற்று எபிசோடில், உறவினர் வீட்டு விசேஷத்திற்கு பைக்கில் வந்த பழனி, சுகன்யா இருவரும் டிராபிக்கில் சிக்கிக் கொண்டனர். அப்போது, சுகன்யாவின் முன்னாள் கணவரைப் பார்த்தவுடன், பயந்துபோன சுகன்யா, வண்டியை உடனடியாக அங்கிருந்து எடுத்துச் செல்லுமாறு பழனியிடம் கூறினார். இன்றைய எபிசோடில், இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக, இரவில் பழனி குறட்டை விட்டுத் தூங்க, சுகன்யா பயத்தில் உட்கார்ந்திருக்கிறார். இதைக் கண்ட பழனி, என்னாச்சு என்று கேட்க தன்னுடைய முன்னாள் கணவர் பற்றி சுகன்யா பயந்து சொல்கிறார். அதற்கு பழனி சுகன்யாவை சமாதானப்படுத்தித் தூங்க வைக்கிறார்.
கதிர் - ராஜியின் உறவு
அடுத்ததாக லோன் விஷயமாக ராஜி கஷ்டப்படுவதைக் கண்ட கதிர், அவளைக் கோபமாகத் திட்டி, இனி தன் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று கூறியிருந்தார். இதனால் ராஜி கோபத்தில் இருந்தார். இன்றைய எபிசோடில், இருவரும் கிரவுண்டுக்கு பிராக்டிஸ் செய்யும்போது, கதிர், "நீ எனக்காகக் கஷ்டப்பட வேண்டாம். நீ உன்னுடைய படிப்பில் மட்டும் கவனம் செலுத்து. உன்னால் முடியும், நீ சீக்கிரம் டிராவல்ஸ் ஆரம்பிப்பாய் என்று என்னை என்கரேஜ் பண்ணு. அதுவே போதும்" என்று அன்பாகச் சொல்ல, ராஜி அமைதியாகிறார்.
செந்திலின் கனவுகள்
இன்னொரு பக்கம், செந்தில் தனது முதல் மாத சம்பளத்தில் என்னெல்லாம் வாங்கலாம் என்று லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறார். அதை பார்த்த மீனா கோபப்படுகிறார். முதல் மாதத்தில் இவ்வளவு பணத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம், இருப்பதை வைத்து, அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டும் பணத்தை கொஞ்சம் சேவ் பண்ண கத்துக்க வேண்டும் என்று சொல்ல நீயும் எங்க அப்பா மாதிரி சொல்லாத, உனக்கு டிரஸ் எடுக்கணும் எனக்கு டிரஸ் எடுக்கணும் வீட்டில் இருப்பவர்களுக்கு எல்லாம் அது வாங்கணும் என்று செந்தில் லிஸ்ட் போட்டுக் கொண்டே போகிறார். இதனால் பாண்டியன் மற்றும் செந்திலுக்கு இடையே பிரச்சனை வரப்போகிறது என்று தெரிகிறது. இப்படியாக இன்றைய எபிசோடு நிறைவு பெறுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications