பாண்டியன் ஸ்டோர்ஸ்: முத்துவேல் கேட்ட கேள்வி! பாவம் பாண்டியன்.. பழனியால் வெடிக்கும் பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 2025 டிசம்பர் 17ஆம் தேதிக்கான எபிசோடில், மயில் குடும்பம் செய்த துரோகத்தால் வேதனையில் இருக்கும் பாண்டியனை கோமதியின் அண்ணன் முத்துவேலும் தன் பங்குக்கு அசிங்கப்படுத்துகிறார். இனி பாண்டியன் என்ன முடிவு எடுக்க போகிறார் என்று விரிவாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மயில் குடும்பம் செய்த துரோகத்தால் பாண்டியனின் மொத்த குடும்பத்தினரும் சோகத்தில் இருக்கின்றனர். அனைவரையும் சாப்பிட வைத்துவிட்டு நான் வெளியே போயிட்டு வரேன் என்று பாண்டியன் கிளம்புகிறார். கோமதியிடம் எப்பவும் நீதான் கோயிலுக்கு போயிட்டு இருப்ப. இப்போ நான் போறேன் என்று சொல்லிவிட்டு போகிறார். அதோடு தன்னுடைய மகன் சரவணனை கவனிச்சுக்கோ என்றும் கோமதியிடம் சொல்லிவிட்டு போகிறார்.

மறுபக்கத்தில் மயில் தன்னுடைய தங்கச்சியிடம் நீ கல்யாணம் பண்ணாம கூட இரு ஆனா இவங்க பேச்சைக் கேட்டு மட்டும் பொய் சொல்லி கல்யாணம் பண்ணிடாத என்று சொல்கிறார். அதற்கு பாக்கியம் இவ்வளவு பொய் சொல்லி கல்யாணம் பண்ணி வச்ச எனக்கு மறுபடியும் சேர்த்து வைக்க தெரியாதா? இன்னும் இரண்டு நாளில் மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்து உன்னை கூட்டிட்டு போவாங்க... இல்ல நான் அவங்களை வர வைப்பேன் என்று சவால் விடுகிறார். இத்தனை பிரச்சனைக்கு காரணமே பாக்கியம் தான். அவருக்கு தான் செய்தது தவறு என்று இப்போதும் தெரியவில்லை.
மறுபக்கத்தில் பாண்டியன் கோவிலில் சோகமாக உட்கார்ந்து இருக்கிறார். அங்கு முத்துவேலுவும் கோவிலுக்கு வருகிறார். தன்னுடைய தம்பியை பாண்டியன் எட்டி உதைத்தது ஞாபகத்திற்கு வருகிறது. உடனே பாண்டியன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து அந்த குடும்பத்தை பத்தி பக்கத்துல இருக்கவங்க கிட்ட விசாரிச்சாலே அவ்வளவு விஷயம் தெரியுது. அவங்களுக்கு இருக்க வீடு இல்லாம, வாடகை கொடுக்க வக்கு இல்லாம முன் வாசல் கதவை பூட்டிட்டு இருக்காங்க.
அது மட்டும் இல்லாம சுத்தி இருக்கிறவங்க எல்லார்கிட்டயும் கடன் வாங்கி இருக்காங்க. எதையும் விசாரிக்காமல் எப்படி பொண்ணு எடுத்த? நீ உன் மத்த பசங்க மாதிரி இவனையும் ஏதாவது பணக்கார வீட்டு பொண்ணுங்களை பார்த்து இழுத்துட்டு ஓடி வர சொல்லி இருக்க வேண்டியதுதானே என்று அசிங்கப்படுத்தி பேசுகிறார். அது மட்டும் இல்லாம நீயே அப்படி பணக்கார வீட்டு பொண்ணை பார்த்து இழுத்துட்டு ஓடினவன் தானே என்று அசிங்கப்படுத்த பாண்டியன் எதுவும் சொல்லாமல் இருக்கிறார்.
உன்னை நான் தலைகுனிய வைக்கணும்னு நினைச்சேன். ஆனால் இன்னைக்கு அந்த கடவுளே உன்னை தலை குனிய வச்சுட்டான் என்று மேலும் முத்துவேல் வெறுப்பேத்துகிறார். மறுபக்கத்தில் காந்திமதி தன்னுடைய மருமகளிடம் சரவணன் நிலைமையை பற்றி புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் பழனி மற்றும் சுகன்யா இருவரும் என்னாச்சு என்று கேட்க இருவரிடமும் நடந்த பிரச்சனையை சொல்கின்றனர்.
சரவணன் நிலைமையை கேட்டதும் பழனி ரொம்பவும் வருத்தப்படுகிறார். சரவணனுக்கா இந்த நிலைமை? நல்ல பையனுடைய வாழ்க்கை இப்படி ஆயிடுச்சு என்று சரவணனை போய் பார்க்க போவதாக கிளம்புகிறார். வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் தடுக்க பழனி அக்கா வீட்டுக்கு போகிறார். அங்கு பழனியை பார்த்ததும் நீங்க எதுக்கு இங்க வந்தீங்க? என்று குழலி கேட்டு அம்மாவை கூப்பிடுகிறார்.
கோமதி வந்து உங்க அண்ணன் உன்னை இங்க என்ன நடக்குதுன்னு வேவு பாக்க அனுப்புனாங்களா என்று ஷாக் கொடுக்கிறார். அதோடு உன் அண்ணன் சக்திவேலு மயில் அம்மா கிட்ட எங்க மேல போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்க சொல்லி எங்க எல்லாரையும் தூக்கி வைக்க சொல்லுறான். இப்போ நாங்க உயிரோட இருக்குறோமா? இல்லையான்னு நீ பார்க்க வந்திருக்க என்று திட்டி அசிங்கப்படுத்துகிறார்.
அதற்கு பழனி நான் சரவணனை பார்க்க வந்தேன் என்று சொன்னாலும் கேட்காமல் பேசிக்கொண்டே இருக்க, அந்த நேரத்தில் அந்த பக்கமாக வந்து சக்திவேல் இப்பவாவது இவங்களை பத்தி உனக்கு தெரிஞ்சுதா? வா வீட்டுக்கு என்று பழனியை கூட்டிக்கொண்டு போகின்றனர். அதோடு முத்துவேலும் சக்திவேலும் பாண்டியனே அவனுக்கான ஆப்பை தேடி வச்சுக்கிட்டான் இனிமே நமக்கு சந்தோஷம்தான் என்று மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications