பாண்டியன் ஸ்டோர்ஸ்: டைவர்ஸ் கேட்ட சரவணனுக்கு செக் வைத்த தங்கமயில்! கோமதியின் அதிரடி பதில்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 பிப்ரவரி 13ஆம் தேதிக்கான எபிசோடில், தங்கமயில் மற்றும் சரவணன் இருவருக்குமான டைவர்ஸ் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது தங்கமயில் தன்னுடைய அம்மா பேச்சைக் கேட்டு மீண்டும் நீதிபதியிடம் அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயிலை விவாகரத்து செய்யும் முடிவில் இருக்கும் சரவணன், தனது முன்னாள் காதலியான அஞ்சலியை மீண்டும் பேச தொடங்கியுள்ளார். கோவிலில் ஏற்பட்ட திடீர் சந்திப்பின் போது, அஞ்சலி தான் ஏற்கனவே விவாகரத்து பெற்றுவிட்டதாக கூற, சரவணன் அவளின் போன் நம்பரை வாங்கிக் கொண்டார். அதன் பிறகு இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொள்ளும் நிலை உருவாகி, மீண்டும் பழைய காதல் நினைவுகள் கிளம்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சரவணன்-தங்கமயில் விவாகரத்து வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

கோர்ட்டுக்கு கிளம்பும் சரவணன்
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், பழனி கோமதி வீட்டிற்கு வந்திருக்கிறார் அப்போது சரவணனிடம் டைவர்ஸ் வழக்கு பற்றி விசாரித்துக் கொண்டிருக்கும் போது, கோமதி சரவணனிடம் பேசாம நீ காதலிச்சே கல்யாணம் பண்ணி இருக்கலாம் இப்போ இவ்ளோ கஷ்டப்படுற என்று சொல்ல, அதற்கு பழனி அதான் அவன் காதலிச்சானே என்று உண்மையை சொல்ல வருகிறார். அந்த நேரத்தில் பாண்டியன் வந்து விடுகிறார். இதனால் பழனி பேச்சை நிறுத்தி விடுகிறார்.
அப்போது பாண்டியனுக்கு கடையில் முக்கியமான வேலை இருப்பதால், பழனியிடம் சரவணனோடு கோர்ட்டுக்கு சென்று வரச் சொல்ல நினைக்கிறார். அப்போது கோமதி, "நீ சரவணன் கூட கோர்ட்டுக்கு போனேன்னா, உன் அண்ணன்கள் என்னென்ன பேசுவாங்கன்னு எனக்கு தெரியும். அதனால் நீ போக வேண்டாம். நானே போயிட்டு வர்றேன்" என்கிறார். பாண்டியனும் அதற்கு ஒத்துக் கொள்கிறார்
தங்கமயில் குடும்பமும் கோர்ட்டில்
மறுபக்கத்தில் தங்கமயிலின் குடும்பத்தாரும் கோர்ட்டுக்கு கிளம்புகிறார்கள். சரவணனும் கோமதியும் கோர்ட்டுக்கு போனபோது, அவர்களுக்கு முன்னதாகவே செந்தில் வக்கீலுடன் அங்கு காத்திருக்கிறார். சிறிது நேரத்தில் தங்கமயில் தனது அப்பா, அம்மாவுடன் கோர்ட்டுக்கு வருகிறார். சரவணன் அருகில் சென்று நிற்கிறார் தங்கமயில். ஆனால் சரவணன் எந்த வார்த்தையும் பேசாமல் நேரடியாக கோர்ட்டுக்குள் சென்று விடுகிறார்.
நீதிபதி முன் விசாரணை
வழக்கு விசாரணைக்கு வந்ததும், இதுவரை நடந்த சம்பவங்கள் குறித்து நீதிபதி இரு தரப்பினரிடமும் கேட்டு தெரிந்து கொள்கிறார். தங்கமயிலின் குடும்பம் இதுவரை அடுக்கடுக்காக கூறிய பொய்கள் கோர்ட்டில் நிரூபணமாகியுள்ள நிலையில், சாட்சியங்களின் அடிப்படையில் அவர்களின் வாதம் பலவீனமாகிறது. இதனால், தங்கமயில் தரப்பிற்கு இந்த வழக்கில் வெற்றி கிடைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.
விவாகரத்துக்கு 'நோ' சொல்லும் தங்கமயில்
இந்த நிலையிலும் சரவணனுடன் தான் சேர்ந்து வாழ்வேன் என்ற முடிவில் தங்கமயில் உறுதியாக இருக்கிறார். ஆனால் தங்கமயில் தரப்பு வக்கீல், சரவணன் வீட்டில் அவரை ரொம்ப கொடுமைப்படுத்தியதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டுகிறார். அதற்கு நீதிபதி, " கொடுமைப்படுத்துறாங்கன்னு சொல்றீங்களே, அப்புறம் தங்கமயில் அவங்க புருஷனோட சேர்ந்து வாழணும்னு சொல்றீங்க?" எனக் கேள்வி எழுப்புகிறார்.
சரவணனுக்கு காத்திருந்த அதிர்ச்சி
தங்கமயில் தரப்பு வக்கீல், "சரவணன் நல்லவர் தான். அவருடைய குடும்பத்தார் தான் தங்கமயிலை கொடுமைப்படுத்தினார்கள்" என்று வாய்கூசாமல் பொய் சொல்கின்றனர். இதையடுத்து சாட்சி சொல்ல வந்த சரவணன், "இவ வாயைத் திறந்தாலே பொய் தான் பேசுறா. இவ கூட என்னால வாழ முடியாது. எனக்கு டைவர்ஸ் தான் வேணும்" என்று தெளிவாக கூறுகிறார். மறுபுறம் தங்கமயில், "நான் அவர் கூட தான் வாழுவேன்" என்று ஒரே முடிவில் நிற்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கதிரை காப்பாற்ற வந்த முத்துவேல்... ஆனால் அதற்குள் நடந்த கொடூரம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications