Pandian Stores 2: பாண்டியனை மீண்டும் ஏமாற்றும் கோமதி! இதற்கு மயில் பரவாயில்லை போல! மீனா போட்ட குண்டு
சென்னை: (Pandian Stores 2 serial today episode) விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 பிப்ரவரி இரண்டாம் தேதிக்கான எபிசோடில் பாண்டியன் மனதை மாற்றுவதற்காக கோமதி புது நாடகம் போடுகிறார். அதை நேரத்தில் ராஜியின் வாழ்க்கைக்காக கதிரும் முக்கிய முடிவெடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், சென்னை வந்த கதிர், ராஜி இருவரும் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். ராஜி கோச்சிங் சென்டருக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருக்க, கதிர் வெளியில் காத்திருக்கிறார். குளித்து விட்டு வந்த ராஜியை பார்த்த கதிர், அவளின் அழகில் மயங்கி, "இன்னைக்கு என்ன இவ்வளவு அழகா இருக்க?" என்று கேட்கிறார். இதை சற்றும் எதிர்பாராத ராஜி வெட்கத்தில் நிற்கிறார்.

ராஜி வெட்கப்பட்டு விலக முயன்றபோது, அவளின் கையை பிடித்து இழுத்து கட்டியணைக்கிறார் கதிர். எதிர்பாராத இந்த செயலில் ராஜி இன்பதிர்ச்சி அடைகிறார். பின்னர் "கிளாஸுக்கு டைம் ஆகுது" என்று சொல்ல, கதிர் சுயநினைவுக்கு வந்து கிளம்பலாம் என்கிறார். இருவரும் ஆட்டோவில் கோச்சிங் சென்டருக்குச் செல்கிறார்கர்.
அங்கு ராஜியை கிளாஸில் விட்டுவிட்டு, அவளுக்கு ஒரு பேனா கொடுத்து, "நீ படிப்பில் மட்டும் கவனம் வை. மற்ற விஷயங்களை நான் பார்த்துக்குறேன்" என்று கதிர் சொல்ல ராஜி சந்தோஷத்தில் இருக்கிறார்.
இந்தப் பக்கம், கோபத்தில் இருக்கும் பாண்டியனை சமாதானப்படுத்த கோமதி பல முயற்சிகள் செய்கிறார். கடைக்கு போனால் பாண்டியன் டென்ஷன் ஆகிறார் என்பதால், வீட்டிலேயே தன்னை கவனிக்க ஒரு நாடகம் போட திட்டமிடுகிறார். திடீரென உடம்பு சரியில்லை என்று நடித்துக் காட்டுகிறார். இதைக் கேட்ட சரவணன் பயந்து போய், "நேத்தே சொல்லியிருக்கலாமே அம்மா, ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போயிருப்பேனே" என்று கவலைப்படுகிறார்.
கோமதி, "என்னை பார்த்துக்க இங்க யாரு இருக்கா? உடம்பு சரியில்லைன்னா நானே என்னை பார்த்துக்கணுமா?" என்று மேலும் நாடகம் போடுகிறார். இதையெல்லாம் பாண்டியன் அமைதியாக கவனித்துக் கொண்டிருக்கிறார். கோமதியின் நாடகம் அரசிக்கு புரிந்துவிடுகிறது.
அப்போது பாண்டியன், சரவணனை கடைக்கு கிளம்பச் சொல்கிறார். சரவணன், "அம்மாவுக்கு உடம்பு சரியில்லைப்பா" என்கிறான். அதற்கு பாண்டியன், "அதுக்காக கடையை பூட்டி வைக்க முடியுமா? பக்கத்துல ஆட்டோ இருக்கு. வேண்டும்னா ஹாஸ்பிட்டல் போயிட்டு வரட்டும். நீ கடைக்கு கிளம்பு" என்று சொல்லி, சரவணனை அழைத்து செல்கிறார்.

இதைக் கேட்ட கோமதி கடும் அதிர்ச்சியில் உறைந்துபோகிறார். பின்னர் அரசி, "நீ நாடகம் போடுறது எனக்கே தெரியும். அப்பாவுக்கு தெரியாதா? இதெல்லாம் விட்டுட்டு ரொமான்டிக்கா ஏதாவது பண்ணு" என்று அம்மாவுக்கு அட்வைஸ் கொடுக்கிறார்.
மற்றொரு பக்கம், மீனா ஆபீஸுக்கு கிளம்ப தயாராக இருக்க, செந்தில் வந்து "உன் புருஷன் பேச மாட்டேன் சொன்னதுக்கப்புறம் என்னோட பேச முயற்சி பண்ணினியா?" என்று கேட்கிறார். அதற்கு மீனா, "அத்தை செய்தது சரிதான். அங்க நான் இருந்தது தான் பிரச்சனை. அதற்கான காரணத்தையும் உங்களிடம் சொல்லிட்டேன். இதற்கு மேல நான் எதுவும் செய்ய முடியாது" என்று பதில் சொல்கிறார்.
இதனால் கடுப்பான செந்தில், மீனா செய்த சாப்பாட்டை வேண்டாம் என்று தள்ளி வைக்கிறார். ஆனால் அதற்கு மீனா கவலைப்படாமல், "என்னோட வேலை பார்க்குறவங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு போறேன்" என்று சொல்லி கிளம்புகிறார். இதனால் செந்தில் கோபம் ஆகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications