பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் பற்றிய உண்மையை குடும்பத்திடம் சொல்லும் சரவணன்! இனி நடக்கும் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சரவணனுக்கும் தங்க மயிலுக்கும் இடையேயான குழப்பம் ஒரு வழியாக இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது! மயிலை சந்தேகிக்கத் தொடங்கிய சரவணன், அவளின் ஆதார் கார்டை வைத்து, அவள் சொல்லிய அனைத்துப் பொய்களையும் உடைத்துப் போட்டு, பெரிய ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார்!

Pandian Stores serial vijay tv

மயிலின் பொறாமை

பழனி தனியாக கடை ஆரம்பிக்க போகும் விஷயம் தெரிந்ததும், பாண்டியன் அவனை வாழ்த்தி, "வாழ்க்கையில் பெரிய இடத்துக்குப் போனால் எனக்குச் சந்தோசம் தான். எப்பவும் நான் உனக்குச் சப்போர்ட்டா தான் இருப்பேன்" என்று ஆதரவு தெரிவிக்கிறான். அப்போதுதான் சரவணனுக்கும் இந்த விஷயம் தெரிய வருகிறது. இதற்கிடையில், கடையில் யாரும் இல்லாத சமயத்தில் சரவணனைத் தூண்டி விடுகிறாள் தங்க மயில். "பார்த்தீங்களா சித்தப்பா தனியா பிசினஸ் ஆரம்பிச்சட்டாரு. நீங்கதான் பொழக்கத் தெரியாத ஆளா இருக்கீங்க" என்றுச் சொல்லி, சரவணனைத் தூண்டி விடுகிறாள்.

சரவணனின் மார்னிங்

இதனால் கடுப்பான சரவணன், "என்னடி என்னை முட்டாளுன்னு சொல்றியா?" என்று கேட்கிறான். "நீ முட்டாளுன்னு சொல்றதுக் கூடப் பிரச்சனை இல்லை. ஆனால் ஏமாத்துற ஆளா மட்டும் இருக்கக் கூடாது" என்று குத்திக் காட்டுவதைப்போல்ப் பேசுகிறான். அப்போது, தங்கமயிலிடம் ஆதார் கார்டைக் கேட்கிறான். அதிலிருந்து எஸ்கேப் ஆகிறாள் மயில்.

மயில் அப்பாவால் சிக்கிய ஆதாரம்

மயிலை சர்ப்ரைஸாக வெளியில் அழைத்துச் செல்ல ID தேவை என்று பொய்சொல்லி, அவளுடைய ஆதார் கார்டை பெற ஒரு திட்டம் தீட்டுகிறான் சரவணன். சரவணன், மயிலின் அப்பாவிடம் சென்று, "மாமா, தங்க மயிலை நான் சர்ப்ரைஸாக வெளிய அழைச்சுட்டுப் போறேன். அதுக்கு ID கேட்குறாங்க. மயிலோட ஆதார் கார்டு இருந்தால் கொடுங்க மாமா" என்று கேட்கிறான்.

அவரும் இதனை நம்பி, "வீட்டு ஆளுங்க எல்லாரோட ஆதாரும் நான் கையிலயே வைச்சுருக்கேன் மாப்பிள்ளை" என்று சொல்லி எடுக்கிறார். அப்போது, கரெக்ட்டாக மயில் அங்கு வர, அவளுக்குத் தெரியாமல் சரவணன் கையில் ஆதாரைத் திணிக்கிறார் அப்பா.

வயது வித்தியாச பொய்

சரவணன் தனியாக வந்து ஆதாரை எடுத்துப் பார்க்கும்போது, மயில் அவனை விட மூன்று வயதுப் பெரியவள் என்பது தெரிந்து ஆடிப்போகிறான். "வயசு விஷயத்துலயும் பொய் சொல்லி இருக்காளே" என்று உடைந்து போகிறான். உடனடியாகக் கடையில் இருக்கும் மயிலை வெளிய போய்ட்டு வரலாம் எனச் சொல்லி அழைத்துச் செல்கிறான். நம்ம எங்க மாமா போறோம் என்று சந்தோஷத்தில் அவள் கேட்க, யாரும் இல்லாத ஓரிடத்தில் வண்டியை நிறுத்துகிறான்.

கேள்வி மேல் கேள்வி

"படிப்பு விஷயம், கர்ப்பம் தவிர என்கிட்ட வேறேதும் பொய் சொல்லி இருக்கியா?" என்று சரவணன் கேட்க, மயில் இல்லை மாமா என்று நடிப்பைப் போட, சரவணன் ஆதார் கார்டை எடுத்து காண்பித்து ஷாக் கொடுக்கிறான்!பேரதிர்ச்சி அடையும் மயில், அப்போதும் கூட, "என்னை மாட்டிவிட நீங்க இப்படி ஆதார் கார்டு‌ ரெடி பண்ணி கொண்டு வந்திருக்கீங்களா?" என்றுப் பச்சையாக நடிக்கிறாள்.

இதனைக் கேட்டு மேலும் கோபமடைந்த சரவணன், "இது உன் அப்பா கொடுத்ததுடி. எவ்வளவு பெரிய ஆளா இருக்க நீ!" என்று கன்னாபின்னாவென்று திட்டித் தீர்க்கிறான். இனிமேலும் உன் பொய்யை எல்லாம் என்னால ஏத்துக்க முடியாது. "எல்லா விஷயத்தையும் வீட்ல சொல்றேன். அவங்க என்ன முடிவு எடுக்குறாங்களோ, அதுதான் என்னோட முடிவு"என்று சொல்லி அழைக்கிறான். மயில் காலில் விழுந்து கெஞ்சியும் சரவணன் கேட்கவில்லை.

சரவணன் இந்த உண்மைகளை வீட்டில் சொன்னால், மயிலின் நிலை என்னவாகப் போகிறது என்பதை அடுத்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோடில் பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+