Pandian Stores Serial: அந்த சீனைப் பார்த்தபோது... குபுக்கென்று கண்ணீர் பெருகியதே...!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முழுக்க முழுக்க எமோஷனல் தொடர்புடையதுதான். அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளின் ஒவ்வொரு எமோஷனல் காட்சிகளும் இயக்குநர், கதாசிரியர் நினைத்தபடியே மக்களின் மனதில் தாக்கத்தை உண்டுபண்ணி வருகிறது.
சில காட்சிகள் இழுவையாகப் போய்விடுமோ என்கிற அச்சம் கூட இந்த சீரியலை காட்சிகளாக்கும்போது வந்திருக்கும். ஆனால், மிக கவனமாக ஷூட் செய்து வெற்றி கண்டு வருகிறார்கள்.
ஒரு குடும்பத்துக்காக மூத்த மருமகளாக வருகிறவர் என்னென்ன தியாகம் செய்து இருக்கார். இந்த தியாகத்தின் மூலம் அந்த மூத்த மருமகள் இழந்தது என்ன என்று பார்க்கும்போது உண்மையில் நெஞ்சம் பதறித்தான் போகிறது.

அம்மா தனம்
தனத்தின் வீட்டில் அவள் அம்மாவுக்கும், அண்ணனுக்கும் தனத்துக்கு என்று ஒரு குழந்தை பிறக்கவில்லையே என்கிற வருத்தம். இதனால் தனத்தின் மீது அவள் அண்ணனுக்கு கோவம். குழந்தை இல்லை என்றால் தனத்தின்மீது எதற்காக கோபப்பட வேண்டும் என்று நினைத்தால், தனத்தின் புருஷன் மூர்த்திதான் இதற்கு காரணம் என்று தெரிய வருகிறது.

தனம் மூர்த்தி
மாப்பிள்ளை மூர்த்தியை தனத்தின் அம்மா திட்டறாங்க. என் பொண்ணுக்கு இவ்ளோ அநீதி செய்துட்டீங்க. உங்க தம்பிங்க ஒவ்வொருத்தருக்கும் பார்த்து பார்த்து செய்யறவ தனம். அவளுக்கு கெடுதல் நினைச்சுட்டீங்களே.. ஏன் இப்படி செய்தீங்கன்னு அழுதுகிட்டே திட்டறாங்க. இதை கேட்ட கதிர். அத்தை எப்படி அண்ணனை இப்படித் திட்டலாம்னு கோபப்படறான்.

தம்பிங்க பெரிசாகட்டும்
எழுந்து கோபமாக இரு கேட்டுட்டு வரேன்னு சொல்லும் கதிரைத் தடுத்து நிறுத்தும் முல்லை, கல்யாணம் ஆன புதிசில், என் தம்பிங்க வளர்ந்து பெரிசாகும் வரை நாம் குழந்தை பெத்துக்க கூடாதுன்னு அக்காகிட்ட மாமா சத்தியம் வாங்கிட்டாகளாம்னு சொல்றா. இதைக் கேட்டு அதிர்ந்து போவது முல்லை மட்டும் அல்ல, பார்க்கும் சீரியல் ஆர்வலர்களும்தான். இந்த காலத்துக்கு இது போல சீரியல்கள் தேவைப்படுது.

பகீர் காட்சி
இந்த சீனைப் பார்க்கும்போதே, அந்த டயலாக் காதில் விழும்போதே பகீர்னு நெஞ்சு துடிக்குது. குபுக்குன்னு கண்ணில் தண்ணீர் பெருகுது. இந்த காலத்துக்கு இப்படி ஒரு சீரியல், அதில் மனதை திடுக்கிட வைக்கும் இந்த காட்சி வசனம் என்று எல்லாமே ரொம்ப எமோஷனல். முழுக்க முழுக்க இப்படிப்பட்ட காட்சிகளை வைத்து போரடிக்காமல் கொண்டு சென்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழு வெற்றி கண்டு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications