பாண்டியன் ஸ்டோர் தனம் சுஜிதா திடீர் உடல் குறைப்பு!
சென்னை: சேதி கேட்டீகளா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி தனம் அதாங்க நம்ம சுஜிதா சூப்பராக உடம்பைக் குறைத்து படு ஸ்லிம்மாக காட்சி தருகிறார்.
சின்னத்திரையை பொருத்தவரையில் தற்போது யாருக்கும் வேலை இல்லாததால் சின்னத்திரை நடிகைகள் எல்லாம் வீட்டில் இருந்து தன்னுடைய புகைப்படங்களை இணைய தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் இப்போ பாண்டியன் ஸ்டோரில் நடித்துக்கொண்டிருக்கும் தனம் என்கிற சுஜிதாவும் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படம் இப்பொழுது இணையதளத்தில வைரலாக போய்கிட்டு இருக்கு...

குழந்தையாக நடிக்க வந்தவர்
சுஜிதா திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானவர். இவரோட சொந்த ஊர் கேரள மாநிலம். இவர் கைக்குழந்தையாக இருக்கும்போது தமிழ்ல நடிக்க வந்து இருக்காங்க. இவர் பிறந்து 45 வது நாளிலேயே திரைப்படங்களில் தோன்றியிருக்கிறார். 1985 மூன்றாமாண்டு அப்பாஸ், முந்தானை முடிச்சு ஆகிய திரைப்படங்களில் தோன்றியுள்ளார். நடிப்புன்னா என்னன்னு தெரியாத வயசுலேயே நடிக்க ஆரம்பித்தார் இன்னமும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பல மொழித் திறமை
இவர் இப்பொழுது தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகை ஆவார். தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு என தென்னிந்திய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் என பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் முதலில் மலையாள தொலைக்காட்சி தொடரில் நடிக்கத் தொடங்கினார். இதுவரைக்கும் இவர் 40க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் இவங்க தான் அந்த வீட்டின் மூத்த மருமகள் தனமாக நடித்திருக்கிறார்.

தனம் என்ற தவம்
இதற்கு முன்பு பல சீரியலில் நடித்து இருந்தாலும் இந்த சீரியலில் இவருடைய நடிப்பு வேற லெவலில் இருக்கும் . குடும்பபாங்கான முக அமைப்பு இவருக்கு ஒரு பிளஸ் பாயிண்ட். இவர் அந்த குடும்பத்தை கட்டிக் காத்துக் கொண்டு போகும் குடும்பத்தலைவியாக நடித்திருக்கிறார். இதனால் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இந்த தொடரில் இவர் கூட நடித்தவர்கள் எல்லாம் ஒரு குடும்பமா தான் வாழ்ந்துட்டு இருக்காங்களாம்.

சத்யராஜ் படத்தில்
கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிறந்த இவர் இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் . அதன்பிறகு சத்யராஜின் பூவிழி வாசலிலே ரஜினியின் மனிதன் மம்முட்டியுடன் அழகன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
வாலி படத்தில் நடிகர் அஜித்குமாரின் தங்கையாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு இன்று வரையிலும் அஜீத் குமாரை இவர் அண்ணன் என்றுதான் கூப்பிடுவார். அதன் பிறகு பள்ளிக்கூடம் தாண்டவம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

மாதவன் பாலகிருஷ்ணா
இவர் முன்னணி நடிகர்களான மாதவன், மம்முட்டி, மோகன்லால், நாகர்ஜுனா, நந்தமூரி பாலகிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். சுஜிதா விளம்பரத் துறையில் சேர்ந்த தனுஷ் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. மறைந்த மூத்த பாடகர் பி பி ஸ்ரீனிவாஸ் சுஜாதாவுக்கு மிகவும் நெருக்கமானவர். அடிக்கடி ஸ்ரீனிவாசை சுஜிதாவும் அவரது கணவரும் சென்று பார்ப்பார்களாம்.

சுஜிதாவின் ஏக்கம்
ஸ்ரீனிவாஸ் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாராம். அதனால் இவர்களால் அவரை பார்க்க முடியல்லையாம். அவருக்கு தனது இறுதி மரியாதையை கூட செலுத்த முடியவில்லையாம். தன் மகனை அவரிடம் காட்டி ஆசீர்வாதம் வாங்க நினைத்து முடியாமல் போய்விட்டது என்று மிகுந்த வருத்தப்பட்டிருக்கிறார். இருப்பினும் பாடகர் ஸ்ரீநிவாஸை தன்னுடைய மகன் தன்வீன் ரூபத்தில் பார்க்கிறார்களாம் சுஜாதாவும் அவரது கணவர் தனுஷ்சும்.

நல்லா பாடுவாங்க
சுஜிதா ஒரு பின்னணி பாடகியும் கூட. மேலும் அவர் சமையலும் அருமையாக பண்ணுவாராம். விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்குபெற்று இருக்கும்போது இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இவருடைய திறமைகளை பார்த்து புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள். இவர் இப்பொழுது வீட்டில் இருக்கும்போது அனைத்து வேலைகளையும் செய்து ஸ்லிம்மா மாறி புதுப்புது புடவைகளில் போட்டோ எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அழகா, அமைதியா, ஹோம்லியா பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்கிற இவரை யாருக்குதான் பிடிக்காது. எல்லா ரசிகர்களும் இவர் மீது ஒரு நல்ல மரியாதை வைத்துள்ளனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications