பாண்டியன் ஸ்டோர்ஸ்.. தனத்துக்கும், 2வது மருமகளுக்கும் பிறந்த நாள்.. ஒரே ஜாலிதான்!
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தொடர்கின்றன.
இப்ப இருக்க சூழ்நிலையில கொரோனாவின் தாக்கம் ஒரு புறம் என்றாலும் லாக்டோன் கஷ்டம் மக்களுக்கு இன்னொரு புறம். வேலை வெட்டி இல்லாம மக்கள் எல்லாரும் கஷ்டப்பட்டு இருக்கும் இந்த நிலையில் அரசு சில தளர்வுகள் மூலமாக சில வேலைகள் மட்டும் நடைபெற அனுமதி அளித்துள்ளது .
அந்தவகையில் இவ்வளவு நாளா சீரியல் படபடப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இப்போ அதற்கும் அனுமதி கிடைத்திருக்கிறது. இது ரசிகர்களுக்கு மட்டுமல்ல சின்னத்திரை நடிகர்களுக்கும் ஒரு நல்ல செய்திதான்.

ஷூட்டிங் ஸ்டார்ட்
இவ்வளவு நாளா படப்பிடிப்பு இல்லாம வீட்டுக்குள்ளே இருந்ததனால் நடிகர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கும் பண கஷ்டத்திற்கும் ஆளானார்கள். இந்தத் தளர்வு அவர்களுக்கும் மகிழ்ச்சி கொண்டாட்டமாக தான் இருக்கிறது. அந்த வகையில் சில சீரியல்கள்தான் சூட்டிங் ஆரம்பிச்சிருக்காங்க. அதில் பாண்டியன் ஸ்டோர் ஒன்று. பாண்டியன் ஸ்டோர் சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி தொடராகும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்
இந்த சீரியலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதே கதை மையத்தைக் கொண்டு சீரியலும் திரைப்படங்களும் வந்தாலும் மக்களிடம் கூட்டுக் குடும்பமும் அண்ணன்-தம்பி ஒற்றுமையும் மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. இதில் ஒரு மளிகைக் கடையின் பெயரை வைத்து அண்ணன் தம்பி 4 பேர் அவர்களின் மனைவி இதை சுற்றித்தான் கதை இருக்கிறது. இந்த சீரியலில் மூத்த அண்ணி தனம் கேரக்டரில் சுஜிதா நடித்திருக்கிறார்
அதுபோல 2வது தம்பியின் மனைவியாக ஹேமா நடித்திருக்கிறார். இவரின் நடிப்பு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் சூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரும் செம கொண்டாட்டம்தான் கொண்டாடிக் கொண்டு இருக்காங்களாம். இந்த சீரியலில் தனம் சுஜிதா வீட்டில் மூத்த மருமகள் என்றாலும் அனைவருக்கும் ஒரு அம்மாவைப் போல நடந்து கொள்வார். இதில்தான் மைத்துனர்களுக்காக குழந்தை கூட வேண்டாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜீவாவுடன் மோதும் ஹேமா
ஹேமா எப்போதும் ஒரு சின்ன குழந்தை போல் எதற்கும் போட்டி போட்டுக்கொண்டு ஜீவாவிடம் சண்டை போட்டுக்கொண்டும் இருக்கிறார். இது முதலில் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் இப்போ ஹேமாவையும் ரசிகர்கள் ரசிக்கத் தொடங்கி விட்டார்கள். அந்த சீரியலில் இப்ப அவர் மாசமாக இருக்கிறாராம் .அதனால் வீட்டில் அனைவரும் அவருக்கு பார்த்து பார்த்து ஓவ்வொன்றாக செஞ்சுகிட்டு இருக்காங்க.

2 பிறந்த நாள்
சூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் சூட்டிங் முடிந்ததும் அனைவரும் செம கொண்டாட்டம்தான். ஏனென்றால் இங்கு இருவருக்கு பிறந்தநாளாம். அதாவது தனத்துக்கும், ஹேமாவுக்கும். அதனால் சூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி ஆரவாரம் பண்ணிருக்காங்க. இந்த மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் ஹேமா இப்போ மாசமா வேற இருக்காங்க அவங்களுக்கு கூடுதல் ஒரு மகிழ்ச்சி தான். அவங்களுக்கு மட்டுல்ல அவரோட ரசிகர்களுக்கும் இது மகிழ்ச்சிதான்.

ரசிகர்கள் ஹேப்பிதான்
சூட்டிங்கில் அனைவரும் கலந்துகொண்டு படப்பிடிப்பு ஆரம்பித்த உடனேயே அங்கே பிறந்த நாள் கொண்டாட்டங்களும் கொண்டாடி மகிழ்கிறார்கள். அதுமட்டுமல்ல அந்த கொண்டாட்டங்களை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் அப்லோட் பண்ணி இருக்கிறார்கள். இது அவர்களின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக தான் இருக்கிறது அனைவரும் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications