Pandian Stores Serial: கிடக்கறது எல்லாம் கிடக்கட்டும்...இவிங்கள பாருங்க!
சென்னை: கொரோனாவைரஸ் பயத்தில் ஊரடங்கு உத்தரவு ஒரு புறம் இருக்க இதுல குளிர் காயும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீனா.. மீனாவை வெறுப்பேத்தும் ஜீவா இவிங்க அக்கப்போரை கொஞ்சம் பார்க்கலாமா?
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிரின் நண்பன் கதிரையும், முல்லையையும் சென்னைக்கு வர சொல்லி அழைப்பு விடுத்தாலும் விடுத்தான்...மீனாவுக்கு வயிறு பத்திகிட்டு எரியுது.
சென்னைக்கு அவங்க மட்டும் தனியா போகணுமா.. கூட நாமும் போனா என்னன்னு கேட்டு கேட்டு அலுத்து போயிட்டா. கூடவே கடைக்குட்டி கண்ணனும் ஜீவா அண்ணன் ஃபிரண்டு கொடைக்கானல் கூப்பிட்டப்போ நாம எல்லாரும் போனோமே.. இப்போ மட்டும் என்ன அவங்க மட்டும் தனியான்னு கேட்டு நொந்து போயிட்டான்.

பாவம் ஜீவா.. முல்லையும் கதிரும் சென்னைக்கு போறேன்னு சொல்லி கிளம்பினாங்க. போக முடியாம திரும்பி வந்துட்டாங்க என்று மீனா ஜீவாவிடம் சொல்ல, சும்மா சொல்லாதடி...அவங்க சென்னைக்கு போகலேன்னு திரும்பி வந்ததும் உன் முகம் எம்புட்டு பிரகாசம் ஆச்சு தெரியுமான்னு ஜீவா பொண்டாட்டியை கலாய்க்கிறான்.

நீ நம்ப மாட்டே ஜீவா...இருந்தாலும்...இனிமே எப்போ நிலைமை சீராகுமோ...அப்படியே சீரானாலும், மாமா முல்லையையும் கதிரையும் சென்னைக்கு அனுப்பி வைப்பாரோ மாட்டாரோ...அப்படியே மாமா அனுப்பி வச்சாலும் தனம் அக்கா சரின்னு சொல்வாங்களோ என்னவோ...அக்கா சரின்னு சொன்னாலும் கதிர் போகலாம்னு முடிவு எடுப்பாரா என்னவோ என்று மீனா இழுத்துக்கொண்டே போறா.

உன்னை பத்தி எனக்கு தெரியும் மீனா..அண்ணன் அவங்க ரெண்டு பேரையும் நிலைமை சரியானது சென்னைக்கு அனுப்பி வைப்பார்.. அண்ணி அதுக்கு சரின்னு சொல்லுவாங்க.. கதிரும் முல்லையை அழைச்சுக்கிட்டு போக சம்மதிப்பான்.. அட அப்படியே எல்லாரும் மறந்தாலும் சென்னைக்கு போக நான் நினைவு படுத்தி அவங்களை போக வைப்பேன்னு சொல்றான் ஜீவா...ம்ம் சொல்வீங்க சொல்வீங்கன்னு மறுபடியும் வயிறு எரிகிறாள் மீனா...
இன்னும் கொரோனாவைரஸ் பயமே போகலை.. நிலைமை இன்னும் எப்போ சீராக்கும்னும் தெரியலை.. அதுக்குள்ளே இவிங்க அக்கப்போர் இது!
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications