மொட்டை மாடியில் குத்தாட்டம்.. மாடர்னாக கலக்கிய பாண்டியன் ஸ்டோர் மீனா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கைகால் ஷேக் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு என்று கூறி ஒரு கலக்கல் ஆட்டம் போட்டுள்ளார் பாண்டின் ஸ்டோர்ஸ் மீனா.

இப்படி மொட்டை மாடியில் நல்ல ஒரு குத்தாட்டம் போட்டாச்சு என லேட்டஸ்டாக ஹேமா வெளியிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் பாண்டியன் ஸ்டோர் ஜீவாவும் கலாய்த்து வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விருவிருப்பான கதைகளத்தோடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது .

தனி ரசிகர் பட்டாளம்

தனி ரசிகர் பட்டாளம்

இந்த கதை பல சீரியல், திரைப்படங்களையும் போல சுட்ட கதையாக இருந்தாலும் இந்த சீரியலுக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது .அதிலும் அந்த சீரியலில் மீனா கேரக்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது .இவர்தான் இந்த வீட்டின் வில்லி கதாபாத்திரம் என நினைத்திருந்த ரசிகர்கள் ஆனால் அப்படியெல்லாம் நான் இல்லை .

முழு சப்போர்ட்

முழு சப்போர்ட்

வீட்டில் கொஞ்சம் செல்லம் கொஞ்சி சண்டை இழுப்பேன். ஆனால் வீட்டிற்கு ஒரு பிரச்சனை என வந்து விட்டால் என் புருஷன் வீட்டுக்கு தான் என்னுடைய முழு சப்போர்ட் என பெத்த அப்பாவை எதிர்த்து நிற்கும் இவருடைய கேரக்டரை பார்த்து இவரை திட்டி தீர்த்த ரசிகர்கள் கூட கொஞ்சம் தற்போது இவரை கொஞ்சி வருகின்றனர். பொதுவாக பல வீட்டில் நடக்கும் குடும்ப பிரச்சனைகளை அப்படியே கண்முன் காட்டி இந்த சீரியல் கிராமம் முதல் நகரம் வரை பல பேர் மதிப்பைப் பெற்று விட்டது .

படப்பிடிப்பு இல்லை

படப்பிடிப்பு இல்லை

ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக பல சீரியல்கள் முடிக்கப்பட்டு பழைய சீசன்கள் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் இந்த சீரியலில் தற்போது மீனாவை காணாமல் அவருடைய ரசிகர்கள் தவித்து வருகின்றனர் .சீரியலில் கல்யாண வைபோகம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இந்த சீரியல் விருவிருப்பாக இருந்தாலும் இவருடைய ரசிகர்கள் இவரை காணாமலும் இவருடைய சின்னச்சின்ன சேட்டைகளை இல்லை என்று புலம்பி வருகின்றனர்.

கலக்கல் போட்டோஷூட்

கலக்கல் போட்டோஷூட்

ஆனால் அவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் வகையாக இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் நடத்தி வந்து கொண்டிருக்கிறார். போன ஊரடங்கு நேரத்தில் இவர் வயிற்றில் குழந்தையோடு இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார் .தற்போது குழந்தை பிறந்த பிறகு இந்த ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருப்பது போர் அடிக்கிறது என மொட்டை மாடியில் செமயான ஒரு குத்தாட்டம் போட்டிருக்கிறார் .

கலாய்த்த வெங்கட்

கலாய்த்த வெங்கட்

இவருடைய ஆட்டத்தை பார்த்து அவருடைய ரசிகர்கள் ஷாக்காகி இருக்கும் நேரத்தில் அவருடன் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜோடியாக நடிக்கும் வெங்கட் ரங்கநாதன் கலாய்த்திருக்கிறார் .அதில் அவர் என்னப்பா கை கால்ல செக் பண்ணி ரொம்ப டேஸ் ஆச்சுன்னு மொட்டைமாடிக்கு வந்துட்டீங்களா என கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு ஹேமா ஆமாம் தல ஊரடங்கு என்கிறதால் வெளியே வர வேலை இல்லை.

ரொம்ப பீலிங் போல

ரொம்ப பீலிங் போல

அதான் மொட்டை மாடிக்கு போய் கை கால் உதறலாம் என்று வந்தேன் என கூறியிருக்கிறார். இந்த வீடியோக்கள் வைரலாக பரவி வந்த நிலையில் தற்போது காலைவேளையில் பக்திப் பழமாக புடவையில் அதே மொட்டை மாடியில் கலக்கலாக போட்டோ ஷூட்டை எடுத்திருக்கிறார் .இதில் இவருடைய போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் என்ன சூட்டிங் இல்லாம ரொம்ப பீல் பண்றீங்க போல .மேக்கப் போடாமல் இருக்க முடியலயா என கலாய்த்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+