Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுத்தி போடுங்க மேடம்.. கண்ணு பட போகுது ... ஹேமாவை வாழ்த்தும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனாவாக நடித்துக்கொண்டிருக்கும் ஹேமாவுக்கு வளைகாப்பு முடிஞ்சாச்சு.

தாய்மையின் பூரிப்போடு, கொள்ளை அழகோடு அவரது போட்டோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு இந்த பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த சீரியலில் நடிக்க ஆரம்பித்த பிறகு இவருக்கு ஒரு வாழ்க்கையில் மறக்க முடியாத சந்தோஷமும் கிடைத்திருக்கிறதாம்.

நிறைமாத கர்ப்பம்

நிறைமாத கர்ப்பம்

இந்த சீரியலில் இவர் கர்ப்பமாக இருப்பது போலவே உண்மையாகவும் கர்ப்பமாக இருக்கிறார். இந்த லாக்டோன் டைம்லயும் இவர் இந்த சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது நிறைமாதமாக இருப்பதால் இவருக்கு வீட்டில் வளைகாப்பு பண்ணுவதற்கு முடிவு பண்ணி இருக்கிறார்கள் அதேபோல சீரியலிலும் இவருக்கு அழகாக பண்ணப் போகிறார்கள்.

சந்தோஷ வளைகாப்பு

சந்தோஷ வளைகாப்பு

நேற்று வீட்டில் எளிமையான முறையில் வளைகாப்பு பண்ணி அதை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். அவருடைய வளர்ப்பிற்கு சீரியலில் கூட நடித்தவர்கள் சென்று வாழ்த்தி இருக்கிறார்கள். இந்த சீரியலில் இவருடன் கண்ணனாக நடிப்பவர் நேரில் சென்று பல செல்பிகளையும் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

குட்டி அண்ணி

குட்டி அண்ணி

சீரியலில் குட்டி அண்ணி என்று கலாய்த்து கொண்டிருப்பவர் நேரில் சென்று வாழ்த்துக்களை கூறி வந்திருக்கிறார். வளைகாப்பு போட்டோக்களை பார்த்ததும் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் பல ரசிகர்கள் பார்த்து கவனமாக இருந்து கொள்ளுங்கள் இந்த நேரத்தில் என்று அன்பு கட்டளை வேறு போட்டிருக்கிறார்கள்.

பையன் வேணுமா

பையன் வேணுமா

பலர் இவரிடம் உங்களுக்கு பாப்பா வேணுமா பையன் வேணுமா என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் எனக்கு எந்த குழந்தை என்றாலும் ரொம்பவும் பிடிக்கும். நம்மளோட உயிர் பூமிக்கு வரும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று சந்தோஷமாக கூறியிருக்கிறார். ஏற்கனவே இவர் பிறந்த நாளன்று அவருடைய உறவினர்கள் இவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இவர் கண்கலங்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வந்தது.

தாய்மையின் பூரிப்பில் ஹேமா

தாய்மையின் பூரிப்பில் ஹேமா

தற்போது இவரின் வளைகாப்பு போட்டோக்களும் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே நேற்று இவருடன் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்கும் சித்து விற்கு எங்கேஜ்மெண்ட் முடிந்திருக்கும் நிலையில் இவரது வழகாப்பு ஒரே நாளில் நடந்திருப்பது பாண்டியன் ஸ்டோர் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறதாம். பல ரசிகர்கள் இவருக்கு திருஷ்டி சுத்தி போடுங்கள் நீங்கள் அவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

Recommended Video

    Pandian Stores Fun at Shoot • Mulla Kathir, Meena Jeeva
    சந்தோஷமா இருங்க

    சந்தோஷமா இருங்க

    முன்னாடி காலங்களில் எல்லாம் மாசமாக இருக்கும் போது போட்டோ கூட எடுக்க மாட்டார்கள். ஆனால் தற்போது சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டே வருகிறார்கள். அதுவும் இந்த மாதிரி சூழ்நிலையில் நடிப்பது மிகவும் கஷ்டமாக இருந்தாலும் பல ரசிகர்கள் இவரது மேல் பாசத்தினால் இவர் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறாராம். அவரது உறவினர்கள் போலவே அவருடைய ரசிகர்களும் இவர் மேலும் இவருடைய குழந்தையின் மேலும் ரொம்பவும் அக்கறையாக இருக்கிறார்கள் அதற்கு ஹேமாவும் நான் முழு பாதுகாப்போடும் எச்சரிக்கையோடும் தான் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+