ஓ இதுக்குத்தான் ராஜா ராணி சீசன் 2 வில் நடிக்க மாட்டேனு சொன்னாரா ஆலியா மானசா?
சென்னை: ராஜா ராணி சீசன் 2 வில் ஆலியா மானசா நடிக்க மறுத்ததற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் சீரியல் டிஆர்பி ரேட்டில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலில் 4 அண்ணன் தம்பிகள், அவர்களுடைய மனைவிகளுக்கிடையே நடைபெறும் பாச பிணைப்பு, சண்டை சச்சரவுகள்தான் இந்த நாடகத்தின் கதை களமாகும்.
தங்கள் வீட்டில் நடப்பது போன்றே இருப்பதால் இந்த சீரியலை பொதுமக்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த சீரியலில் பெரிதும் விரும்பப்பட்ட கேரக்டர் என்றால் அது முல்லை கேரக்டர்.

விஜே சித்ரா
இந்த கேரக்டரில் நடித்து வந்த விஜே சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவருக்கு பதிலாக யார் முல்லையாக நடிப்பார்கள் என பல போட்டோஷூட்டுக்கு பிறகு காவியா அறிவுமணி என்பவர் தேர்வு செய்யப்பட்டு இவருக்கு பதில் இனி இவர் என போடப்பட்டு நடித்து வந்தார்.

முல்லை கேரக்டர்
இரு ஆண்டுகளாக முல்லை கேரக்டரில் நடித்து வந்த காவியாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் கனவாம். ஆனால் சீரியலில் நடித்து வருவதால் அவரது சினிமா வாய்ப்பு இல்லாமல் போகிறதாம். இதனால் சீரியலில் இருந்து விலக காவியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இவருக்கு பதில் இனி இவரா
இதனால் இவருக்கு பதில் யார் முல்லையாக நடிப்பார்கள் என பேச்சு நடந்து வரும் நிலையில் காவியாவுக்கு பதில் ஆலியா மானஸா முல்லை கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முல்லையாக ஆலியா
ஏற்கெனவே ராஜா ராணி சீரியலில் நடித்த ஆலியா, தன்னுடன் நடித்த சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகள் இருந்த நிலையில் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா எனும் கேரக்டரில் நடித்து வந்தார். பின்னர் இரண்டாவது முறை ஆலியா கர்ப்பம் தரித்ததால் அந்த சீரியலில் இருந்து விலகினார்.

ராஜா ராணி சீசன் 2 வை மறுத்த ஆலியா
அவருக்கு பதிலாக ரியா விஸ்வநாதன் சந்தியா கேரக்டரில் நடித்து வருகிறார். இதையடுத்து அவருக்கு கடந்த மார்ச் மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் ராஜா ராணி சீசன் 2 வில் நடிப்பீர்களா என ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஆலியா நிச்சயமாக இல்லை என தெரிவித்திருந்தது
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications