பாண்டியன் ஸ்டோர்ஸ் நஷ்டத்துல போவுதாம்ல... வீட்ல கூட வெறும் தயிர் சாதம்தேன்!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இப்போ ரொம்ப நஷ்டத்துல போவுதாம்ல.. அவுக வீட்டுல தினம் தயிர்சாதம்.. உப்புமா..சாம்பார் இல்லாம இட்லி சட்னி மட்டும்தான்னு பேசிக்கிடுதாக.
அண்ணன், தம்பிங்க நாலு பேரும் சேர்ந்து அந்த ஊருலே பெரிய மளிகை கடையை வச்சு ஜோராத்தான் நடத்திக்கிட்டு வந்தாக. திடீர்னு பகையிலை சரக்கு வராம நின்னு போக.. ஏ...படிப்படியா கஷ்டம் வந்து இப்போ கடையே நஷ்டத்துல போவுதாம்ல..

கல்யாணத்துக்கு ஒருத்தர் பெரிய ஆர்டர் குடுத்தாவலாம்.. இதுல கொஞ்சமா கூட மத்த கஸ்டமரை நினைக்காம ரெண்டாவது தம்பி மொத்த சரக்கையும் அவுக வூட்டுல எறக்கிப் புட்டாக..
இப்போ, அண்ணன் சரக்கு கேட்க போனவரு இன்னும் நல்ல சேதியோட வர்லையாம்ல...வீட்டுல ஒரு நாளைக்கு வெறும் உப்புமாவும், சக்கரையும்.. ஒரு நாளைக்கு சாம்பார் இல்லாத இட்லி, சட்னி ஒரு நாளைக்கு தயிர் சாதம் மட்டும்தானாம்.
எல்லாம் நல்லா சாப்புட்டு வளர்ந்த புள்ளையளாச்சா.. மூஞ்சை சுழிச்சுகிட்டு கடைசி தம்பி சாப்பிடுறானாம். ரெண்டாவது மருமக மீனா பணக்காரி.. அவளுக்கு சுத்தமா இந்த சாப்பாடு புடிக்கிலியாம்ல..

பக்கவாத மாமியாருக்கு தயிர்சாதம் ஊட்டி விடுதாக தனம். முல்லை, மீனா ரெண்டு பேருமே தயிர் சாதம் சாப்பிட்டுக்கிட்டு இருக்காக. அத்த.. எனக்கு மட்டும்தான் தயிர் சாதம் ஊட்டறேன்னு நினைச்சேன்.. எல்லாருக்குமே தயிர்சாதம் தானான்னு கேட்கறாக.
ஆமா, அத்தைன்னு தனம் சொல்லுதாக.. அப்போ கடைக்குன்னு அத்தை கேட்க.. அவுகளுக்கும்தான் அத்தை..தயிர்சாதம்தான் வேணும்னு கேட்டாக நிறைய குடுத்திவிட்டேன் அத்தைன்னு சொல்றாக..

அவனுங்க சொன்னா அப்படியே விட்டுடறதா.. முட்டை, பொரியல், சாம்பார், ரசம், அப்பளம்னு குடுத்து விட்டாத்தானே வேலை செய்யறவங்களுக்கு சத்துன்னு மாமியார் சொல்ல மருமகளுக மூஞ்சை பார்த்துக்கறாக..

வீட்டு கஷ்டம் அத்தைக்கு தெரிய கூடாதாம்..அதுக்காவ.. நாளைக்கு குடுத்து விடறேன் அத்தைன்னு சொல்றாக மூத்த மருமக தனம். நஷ்டத்துல போற பாண்டியன் ஸ்டோர்ஸை தூக்கி நிறுத்திடுவாகளா..பார்ப்புமே...
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications