பாண்டியன் ஸ்டோர்ஸ் டுவிஸ்ட்.. ஜெயிலிலிருந்து வந்த கண்ணனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் ஜெயிலில் இருக்கும் நிலையில் அவரை வெளியில் எடுப்பதற்காக கதிரும் ஜீவாவும் தீவிரமாக முயற்சி செய்கின்றனர்.
ஒரு வழியாக கண்ணனுக்கு ஜாமீன் கிடைத்து விடுகிறது. வீட்டிற்கு வந்த கண்ணனுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.
இந்த நிலையில் இனி மூர்த்தி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதே நேரத்தில் தனத்திற்கு என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கிறார். அதே நேரத்தில் கண்ணனுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஐஸ்வர்யா நான் எப்படியாவது கண்ணனை பார்க்க வேண்டும் என்று கதறி அழுது கொண்டிருக்க மூர்த்தி முதலில் கண்ணனுக்கு ஜாமீன் எடுக்க யாரும் முயற்சி செய்யக் கூடாது என்று கூறி விடுகிறார்.
ஆனால் தனம் கண்ணன் இந்த தப்பு பண்ணி இருக்கவே மாட்டான். அவனுக்கு நிரூபிப்பதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அவனுடைய குழந்தையை அவன் பார்க்க வேண்டாமா? அதுக்காகவாவது அவன் வெளியே வந்தாகணும் என்று மூர்த்தியை சமாதானம் செய்கிறார். இந்த நிலையில் ஜீவாவும் கதிரும் கண்ணனை ஜாமினில் எடுப்பதற்கான முயற்சியில் இறங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது வெளியான பிரமோவில் கண்ணனுக்கு ஜாமின் கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில் அவருடைய வக்கீல் இப்போதைக்கு ஜாமினில் தான் எடுத்திருக்கோம். அவர் தப்பு பண்ணலன்னு ப்ரூவ் பண்ணா தான் இந்த கேஸிலிருந்து வெளியாக முடியும் என்று கூறுகிறார். பிறகு வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருகின்றனர்.
அந்த நேரத்தில் ஐஸ்வர்யா கண்ணனை பார்த்து ஏன் கண்ணா இப்படி பண்ணிட்ட என்று கேட்க, தனம் முல்லை என அனைவரும் அழுகின்றனர். அப்போது மூர்த்தி ரூமில் இருந்து வெளியே வர கண்ணன் மூர்த்தி காலில் விழுந்து அண்ணே நான் எந்த தப்பும் பண்ணல என்ன மன்னிச்சிடுங்க அண்ணே என்று கதறுகிறார். ஆனால் கண்ணனை மன்னிக்காமல் மூர்த்தி போய்விடுகிறார்.
இந்த நிலையில் குழந்தையை மீனா கொண்டு வந்து கண்ணனிடம் கொடுக்க, கண்ணன் அழுதபடியே உன் நீ பிறக்கும் போது கூட அப்பா கூட இல்லாம போயிட்டனே என்று அழுது கொண்டிருக்கிறார். தற்போது இந்த பரபரப்பான பிரமோ வைரல் ஆகி வரும் நிலையில், இது youtubeபில் ட்ரெண்டிங்கில் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.
ஆனாலும் அதிகமான ரசிகர்கள் கண்ணன் இன்னும் சில நாட்கள் சிறையில் இருந்திருக்கலாம் என்று கருத்து கூறி வருகின்றனர். அதே நேரத்தில் கண்ணனுக்கு அதிகமாக தனம் சப்போர்ட் பண்ணிக் கொண்டிருப்பதால் தனம் மற்றும் கதிரையும் அதிகமான ரசிகர்கள் திட்டிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவரால் தான் இந்த மாதிரி வீட்டிற்கு ஒரு உருப்படாத கேரக்டர் உருவாகிக் கொண்டிருக்கிறது அதுதான் இந்த சீரியல் வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்றும் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் சித்தியிடம் ஐஸ்வர்யாவும் கண்ணனும் பணம் வாங்கிய விஷயம் இப்ப வரைக்கும் மூர்த்திக்கு தெரியாது. ஏற்கனவே கண்ணன் மீது கோபத்தில் இருக்கும் மூர்த்தி இந்த விஷயம் தெரிந்ததும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை மீண்டும் வீட்டை விட்டு துரத்த போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேலை அப்படி நடக்கும் போது தான் தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருப்பது கூட குடும்பத்திற்கு தெரிய வரலாம்..? அதை வைத்து தனம் கண்ணன் ஐஸ்வர்யாவை தன் வீட்டில் இருக்க வேண்டும் என்றும் கூறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..
-
“குக் வித் கோமாளி” போட்டியாளர் மனைவியிடம் திவாகர் ஆபாசமாக அப்படி பேசினாரு! அதனால் தான் பிரச்சனை! மாகாபா விளக்கம் -
சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு நடந்த நிச்சயதார்த்தம்.. விஜயாவை சிக்க வைத்த ஸ்ருதி.. முத்துக்கு தெரிந்த விஷயம் -
பரிதாப நிலையில் “எங்கேயும் காதல்” பட பாடகர்.. கேபிஒய் பாலா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.. கலங்க வைத்த காட்சி -
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
சூப்பர் சிங்கர் அருணா கல்யாணத்தில் சுவாரசியம்! ஒன்று சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள்.. அதுவும் யாரெல்லாம்னு பாருங்க -
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி போட்ட பிளான்.. செக் வைத்த ரோகிணி! அடித்து விரட்டிய மீனா! சந்தோஷத்தில் முத்து -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு












Click it and Unblock the Notifications