அம்மாவை அம்போன்னு விட்ட மீனா.. ஐஸ்வர்யா மீது கோபத்தை காட்டும் முல்லை.. வெளிவரும் “உண்மை”

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனத்திற்கு உடலில் பிரச்சனை இருப்பது தெரிந்து மீனா வீட்டிற்கே சென்று தனத்தை ஹாஸ்பிடல் கூப்பிட்டு போகிறார்.

மீனா மற்றும் தனத்தின் நடவடிக்கையை பார்த்து ஐஸ்வர்யாவும் முல்லையும் சந்தேகப்படுகின்றனர்.

அதைத் தொடர்ந்து இன்று என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Pandian Stores serial 2023 June 24th promo and Episode full update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜூன் 24 ஆம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் தனத்திற்கு நெஞ்சில் கட்டி இருக்கும் விஷயத்தை தெரிந்து கொண்ட மீனா தன்னுடைய அம்மாவை ஹாஸ்பிடலில் விட்டபடி நான் அக்காவை போய் பார்க்க போகிறேன் என்று வந்துவிடுகிறார்.

அதனால் மீனாவின் அம்மா கோபத்தில் மீனாவை ஹாஸ்பிடலில் வைத்து திட்டிக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து மீனா வீட்டிற்கு வர அங்கே ஐஸ்வர்யாவும் முல்லையும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனாவை பார்த்ததும் ஐஸ்வர்யா எனக்கு இப்பதான் ஜூஸ் குடிக்கணும் போல இருந்துச்சு கரெக்டா வந்துட்டீங்க என்று சொல்ல ஆமா நான் இப்போ உனக்கு ஜூஸ் போடறதுக்காக தான் வந்து இருக்கேன் என்று திட்டி விட்டு தனத்தை பார்க்க போகிறார்.

Pandian Stores serial 2023 June 24th promo and Episode full update

அங்கு தனத்திடம் நான் ஹாஸ்பிட்டலில் டாக்டரிடம் எல்லாம் கேட்டுவிட்டேன். அவங்க எல்லாத்தையும் சொல்லிட்டாங்க. நீங்க இன்னும் வீட்ல யாரு கிட்டயும் எதுவும் சொல்லல அப்படி தானே? என்று கேட்க, தனம் ஏற்கனவே நேத்து கொஞ்சம் நெஞ்சு வலிக்கேன்னு சொன்னதுக்கே மாமா ரொம்ப பயந்துட்டாரு. அதுல இப்போ இதை சொன்னா ரொம்ப பயந்துருவாரு. அதனால வேண்டாம் என்று சொல்ல, அப்போ வாங்க ஹாஸ்பிடல் போய் செக் பண்ணி பார்க்கலாம் என்று மீனா தனத்தை கூப்பிட்டு வருகிறார்.

இவர்கள் இருவரும் வெளியே போவதை பார்த்த ஐஸ்வர்யாவும், முல்லையும் எங்கே போறீங்க என்று கேட்க, எங்க வீட்டுக்கு தான் போறோம் என்று மீனா சொல்கிறார். அதற்கு இப்பதானே வந்தீங்க அதற்குள்ளேயா என்று கேட்க, ஆமாம் கயல் அழுதுகிட்டு இருக்கான்னு சொன்னேன் உடனே நானும் பார்க்க வரேன்னு அக்கா கிளம்புறாங்க என்று சமாளித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்புகின்றனர். அதைக் கேட்டு ஐஸ்வர்யாவும் முல்லையும் இவங்க நடவடிக்கை நம்பற மாதிரி இல்லையே என்று சந்தேகப்படுகின்றனர்.

Pandian Stores serial 2023 June 24th promo and Episode full update

பிறகு ஹாஸ்பிடலில் மீனாவும் தனமும் பேசிக் கொண்டிருக்கின்றனர். தனம் பயந்தபடியே இருக்க மீனா ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார். பிறகு டெஸ்ட் எடுக்கப் போகும் முன்பு அங்கு இருக்கும் சாமி முன்பு இருவரும் சாமி கும்பிடுகின்றனர். பிறகு தனம் டெஸ்ட் எடுத்துட்டு வெளியே வந்த பிறகு மீனா கண்டிப்பா எதுவும் இருக்காது என்று தனத்திற்கு ஆறுதல் கூறுகிறார்.

அதைத்தொடர்ந்து இருவரும் வீட்டிற்கு வர அங்கே மூர்த்தி வந்து அமர்ந்து இருக்கிறார். பிறகு எங்க போயிட்டு வர என்று விசாரிக்கிறார் பிறகு மூர்த்தியிடம் தனமும் மீனாவும் மாறி மாறி பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஐஸ்வர்யாவும் முல்லையும் நீங்க ரெண்டு பேரும் பேசுறத பாத்தா எங்களுக்கு ஏதோ சந்தேகமாய் இருக்கிறது. உண்மை பேசுற மாதிரி தெரியல என்று சொல்கின்றனர்.

அதற்கு மூர்த்தியும் ஆமா காலையில உங்க சித்தியை பார்க்க போறேன்னு போன இப்போ மீனா கூட போயிட்டு வர உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லலா? நேத்து நைட்டு நெஞ்சு வலிக்குதுன்ன சொன்ன இப்ப பரவாயில்லையா என்று கேட்க, அதான் நான் காலையிலேயே சொன்னேன்லா எல்லாம் சரியாகிட்டு என்று கோபமாக அந்த இடத்தை விட்டு தனம் கிளம்பி போகிறார்.

அதைத்தொடர்ந்து தனத்திடம் மீனா இப்ப கூட ஒன்னும் இல்லக்கா வீட்டுல சொல்லிருங்க என்று சொல்ல, வேண்டாம் நீ தான் எனக்கு ஒன்னும் ஆகாதுன்னு சொல்லி இருக்க இல்ல, நாளைக்கு இந்நேரத்துக்கு ரிப்போர்ட் நம்ம கையில கிடைச்சிடும். அதுக்கு பிறகு பாத்துக்கலாம் என்று கூறிக் கொண்டிருக்கிறார். பிறகு மீனாவை சமாதானப்படுத்தி தனம் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு சோகமாக பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+