கண்ணனுக்கு வந்த புது பிரச்சனை..நெஞ்சுவலியில் தவிக்கும் தனம்..ஜனார்த்தனனை எதிர்த்து பேசும் ஜீவா
சென்னை: ஜனார்த்தனன் இடம் விஷயத்தில் எடுக்கும் முடிவு தவறு என்று ஜீவா சொல்லி கடைசியில் அவமானப்படுகிறார்.
தனத்திற்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறுகிறார்.
ஐஸ்வர்யா தனக்கு பிரம்மாண்டமாக வளகாப்பு நடத்த வேண்டும் என்று கண்ணனிடம் புது பிரச்சனையை கிளப்புகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மே 12ஆம் தேதி எபிசோட்டின் ஆரம்பத்தில் மீனா வீட்டில் கயல் பாப்பாவோடு அனைவரும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜீவா அங்கே வர ஜனார்த்தனனுக்கு ஒரு போன் கால் வருகிறது. அதில் இடம் விஷயமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

பிறகு நம்முடைய குடோன் பக்கத்தில் கிடக்கும் இடத்தை நான் விற்க போகிறேன் என்று சொல்ல, அந்த இடம் நல்ல இடம் அதை விற்க வேண்டாம் நம்ம குடோனுக்கு தேவைப்படும் என்று சொல்ல அதுவெல்லாம் வேண்டாம். என்னால் நிறைய வேலை பார்க்க முடியவில்லை. இப்போதைக்கு வித்து விடலாம் என்று சொல்ல, அந்த முடிவு தவறு என்று ஜீவா சொல்லியும் ஜனார்த்தனன் கேட்காமல் அவருடைய முடிவில் உறுதியாக இருக்கிறார். அதனால் ஜீவா கோபத்தில் அந்த இடத்தில் இருந்து எழுந்து போய் விடுகிறார்.
பிறகு முல்லை தன்னுடைய வயிற்றில் குழந்தை உதைப்பதாக கூறிக் கொண்டிருக்க, குழந்தை தூங்காதா என பேசிக் கொண்டிருக்கிறார் .அப்போது தனம் உனக்கு நெஞ்சு வலி இருக்கிறதா? எனக்கு இப்போ எல்லாம் அடிக்கடி நெஞ்சு வலிக்கிறது என்று சொல்ல, எனக்கு அப்படியெல்லாம் இல்லை என்று முல்லை கூறிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மூர்த்தி வந்து எப்ப பார்த்தாலும் நம்ம வீட்ல சாம்பார் தானா என்று கேட்டுக் கொண்டு கறி வாங்கிக் கொண்டு வருகிறார்.
பிறகு தான் வாங்கி வந்த கறியை மூர்த்தியே சமையல் செய்து கொண்டிருக்க தனம் இவர் சமைக்கிறது கூட பிரச்சனை இல்ல ஆனா அந்த கிச்சனை சுத்தம் பண்றது தான் பெரிய வேலை என்று பயப்படுகிறார். அடுத்ததாக ஐஸ்வர்யா யூடியூப் வீடியோவில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கண்ணன் வேலைக்கு போய்விட்டு வீட்டுக்கு சோகமாக வருகிறார்.

நான் சொன்ன மாதிரி பணம் கிடைச்சுச்சா என்று ஐஸ்வர்யா கண்ணனிடம் கேட்க ஆமா ஆனா இப்படி அடுத்தடுத்து அண்ணன் கிட்ட போய் பணம் கேக்குறதுக்கு கஷ்டமா இருக்கு என்று கண்ணன் சொல்ல, நாம எப்பவுமா கேக்கப்போறோம் இப்போதைக்கு தேவை இருக்கிறது, அதுபோல கதிர் மாமா கடையில் நல்ல வியாபாரம் இருக்கு அதனால அவர்கிட்ட பணம் இருக்கு அதனால நம்ம கேக்குறது தப்பு இல்ல என்று ஐஸ்வர்யா சமாதானப்படுத்துகிறார்.
வளைகாப்பு வைக்க போறேன்னு சொன்ன அதை பத்தி எதுவும் பேசல என்று சொல்ல கண்ணன் அமைதியாக கையில் பணம் இல்லையே என்று சொல்ல உங்க ஆபீஸில் லோன் எதாவது போடலாமான்னு பாரு நாம வளைகாப்பு பிரமாண்டமா எடுத்து நம்முடைய youtube சேனலில் போட்டோம்னா அதுக்கு பிறகு நம்மளுக்கு நிறைய ப்ரமோஷன் கிடைக்க ஆரம்பித்துவிடும். அப்படியே குழந்தைகளை வளர்த்தெடுப்பது வரைக்கும் போய்விடலாம் என்று கூறிக் கொண்டு இருக்கிறார்.

அதைத் தொடர்ந்து ஜீவா தனியாக நின்று கொண்டு பீல் பண்ணிக் கொண்டிருக்க மீனா வந்து என்ன ஆச்சு என்று கேட்க, உங்க அப்பா முடிவு எடுத்துட்டு வந்து என்கிட்ட பேசுறது எதுக்காக? நம்ம என்ன சொன்னாலும் கேட்க போறது கிடையாது. பிறகு எதுக்கு அத பத்தி என்கிட்ட பேசணும் என்று கோபமாக பேசுகிறார். அதற்கு மீனா அவர் எப்பவுமே அப்படித்தான் தனி ஆளாகவே முடிவு எடுத்து பழகிட்டார்.
அதனால இப்படி இருக்கிறார் என்று சமாதானம் படுத்த, அப்ப அதை எதுக்கு என்னை கூப்பிட்டு பேசணும். மாப்பிள்ளை எதுவும் பண்ணல நானே தனியா எல்லாம் கஷ்டப்படுதேனு என்கிட்டயே சொல்லணுமா? என்று கேட்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications