பாண்டியன் ஸ்டோர்ஸ் கொடுமை.. இதற்கு முடிவே இல்லையா? இதை கவனிச்சீங்களா..? தவறான வழிகாட்டல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சில எபிசோடுகள் தவறாக கருத்து சொல்வதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனத்திற்கு மார்பக புற்றுநோய் வந்தது போல கதை கொண்டு போய்க் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அந்த கதையை பல வாரங்களாக தொடர்ந்து கொண்டிருப்பதால் ரசிகர்கள் பலர் மனதளவில் பாதிக்கப்படுவதாக பலர் தொடர்ச்சியாக கருத்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கென்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தாலும் தொடர்ச்சியாக டிஆர்பியில் முன்னணி இடத்தை கொண்டு பிடித்துக் கொண்டிருக்கிறது. இது பெரிய சாதனை தான். பல சீரியல்கள் 1000 எபிசோடுகளை தாண்டிவிட்டால் கதையில் ஆட்டம் கண்டு டிஆர்பியில் அடி வாங்கி விடுவது வழக்கம்தான்.

ஆனால் இந்த சீரியலில் ஒவ்வொரு முறையும் திடீர் ட்விஸ்ட் வைத்து கதை நகர்ந்து கொண்டு வருவதால் ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியல் தொடர்ச்சியாக டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சில வாரங்களாக இந்த சீரியலில் கதை பலருடைய மனதை ரணமாக்குவதாக ரசிகர்கள் பீல் பண்ணி கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு மருத்துவமனை சீனுக்கும் அதிகமான நெருக்கம் உண்டு. அடிக்கடி ஒவ்வொருவருக்கும் திடீர் உடல்நிலை பிரச்சனைகளை கொடுத்து மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக காட்டி ரசிகர்களின் அனுதாபத்தை பெற வைத்து டிஆர்பி யில் முன்னேறி கொண்டிருக்கின்றனர்.
அது போல தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முல்லைக்கு திடீரென எதிரியால் வயிற்றில் அடிபட வைத்து பிறகு மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக காட்டி அதனால் ஏழு மாதத்திலேயே குழந்தை பிறந்தது போன்று கூறி இருந்தனர். இந்த நிலையில் அதை தொடர்ந்து தனத்திற்கு நெஞ்சு வலிக்கிறது என்று கதையை கொண்டு போயி பிறகு தனத்திற்கு மார்பக புற்றுநோய் என்று இப்போது கூறி இருக்கின்றனர்.

இந்த நிலையில் தனம் தனக்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரிந்தும் ஆபரேஷன் செய்வதற்கு காலதாமதம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அதோடு ஏற்கனவே இவர் கர்ப்பமாக இருப்பதால் ஆபரேஷன் செய்வதற்கு முன்பு குழந்தையை ஆபரேஷன் செய்து எடுத்துவிட்டு தான் இவருக்கு புற்று நோய்க்கான ஆபரேஷன் செய்ய முடியும் என்று டாக்டர் கூறியிருக்கிறார். இப்படி அதுவும் இரண்டாவது கட்டத்தில் இவர் இருக்கிறார் என்று கூறிய பிறகும் கூட இவர் தனக்கு சில கடமைகள் இருக்கிறது என்று கூறிக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே இந்த சீரியலில் தனம் தான் "தியாகி" என்று நிருபிப்பதற்காக ஒவ்வொரு முறையும் யாருக்கும் எந்த இடத்திலும் உரிமையை கொடுக்காமல் எல்லாவற்றிலும் இவரே மூக்கை நுழைத்துக் கொண்டு இருக்கிறார் என்று ரசிகர்கள் திட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இப்போதும் கூட தொடர்ச்சியாக வீட்டை கட்ட வேண்டும் ஐஸ்வர்யா வளைகாப்பு நடத்த வேண்டும் என்று சாக்குப் போக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதிலும் ஒவ்வொரு நாளும் கதிர் நீதான் இந்த குடும்பத்தை பார்த்துக்கணும், மாமா சீக்கிரமா வீட்ட கட்டணும், மீனா எனக்கு ஏதாவது ஆகிட்டா குழந்தையை பார்த்துக்கணும் என்று சென்டிமென்ட் வசனங்கள் பேசிக் கொண்டிருப்பது பார்ப்பவர்களுக்கு மேலும் மன கஷ்டத்தை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கின்றனர். இதனால் இந்த புற்றுநோய் டிராக்கை சீக்கிரமாக முடிவுக்கு கொண்டு வந்து விட்டால் கதை வேகம் எடுக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
பொதுவாக பொழுதுபோக்குக்கு தான் சீரியலோ சினிமாவோ பார்ப்பார்கள் அப்படி பார்க்கும்போது தங்களுடைய மனம் சந்தோஷம் அடையும் என்று பார்த்தால் இந்த மாதிரி சீரியல்களில் அழுகாட்சி சீன்களை பார்த்துக் கொண்டிருந்தால்..? அதுவும் இந்த மாதிரி பல வாரங்களா தொடர்ச்சியா பார்த்துகிட்டு இருந்தா..? பார்க்கவரின் நிலைமை என்ன ஆகும்னு கொஞ்சமாவது சீரியல் தரப்பினர் யோசித்துப் பார்த்தால் இந்த கதையை சீக்கிரமாக முடித்துவிட்டு புதிய டிராக் தொடங்குவார்கள்.. ஆனால் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று..












Click it and Unblock the Notifications