Pandian stores serial: அந்த ரூம்லேர்ந்து இங்கே வரதுக்கு என்ன வசதி வேணும்?
சென்னை: பண்டிகை, பூஜை என்று வீடே கொண்டாட்டத்தில் இருக்க, ஒருத்தர் மட்டும் அந்த இடத்தில் இல்லை என்றால் எப்படி இருக்கும். அதுவும் அவளை கட்டின புருஷனுக்கு!
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எல்லாத்தையும் கவர் பண்ணியது போல பெண்களுக்கான மாதவிடாய் குறித்தும் பேசி இருக்கிறார்கள்.
இதை ஒரு புருஷனாக கதிர் உணர்ந்து முல்லையுடன் சேர்ந்து ஆறுதலாக இருப்பது ஆண்கள் அறிய வேண்டிய ஒன்று. இந்த கஷ்டம் எல்லா பெண்களுக்கும் இருப்பது.

முல்லை தனியாக
வீட்டில் நோன்பு பூஜை என்று ஒரே அமர்க்களப்படுது. எங்கே பொண்டாட்டியை காணலியேன்னு தேடிகிட்டு ரூமுக்குள்ள வர்றான் கதிர். என்னாச்சுன்னு கேட்க, வயித்து வலின்னு படுத்து கிடக்கா முல்லை.ஏதாச்சும் ஒத்துக்காதது சாப்டுட்டுயான்னு கேட்கறான் கதிர்.

மூணு நாள்
இல்லைங்க ..நான் வீட்டுக்கு தூரம்..அதான்னு இவள் சொல்ல..அப்படியா..இதை சொல்றதுக்கு என்ன? இப்படி வலிச்சுக்கிட்டேத்தான் இருக்குமான்னு கேட்கறான்.ஆமாங்க வயிறு இடுப்பு வலி பின்னி எடுத்துரும்.என்ன செய்தாலும் சரியாகாதுன்னு சொல்றா. மாத்திரை இருக்குமே அதை கேட்டு வாங்கினா வாங்கி வச்சு சாப்பிடலாம்ல.. மாசாமாசம் இப்படி வலி வந்தா என்ன பண்றதுன்னு துடிச்சு போறான் கதிர்.

இன்னிக்கு வலிக்கும்
இன்னிக்கு முழுக்க அப்படித்தாங்க வலிக்கும். வீட்டுல அம்மா அடிக்கடி வெந்நீர் வச்சு தருவாக .. அது மட்டும்தான் குடிப்பேன்..வேற ஒண்ணும் மாத்திரை சாப்பிட்டது இல்லீங்கன்னு சொல்றா முல்லை. இப்படியே வலியோட இருப்பியா.. எனக்கு கஷ்டமா இருக்குன்னு சொல்றான் முல்லை.ஏங்க அழறீங்களான்னு கேட்க..இல்லை கஷ்டமா இருக்குன்னு சொல்லிட்டு, படுத்துக்கோ.. இங்கேதான் இருப்பேன் ஏதாவதுன்னா கூப்பிடுன்னு சொல்லிட்டு போறான்.

முல்லை எங்கே
முல்லை அப்பா பூஜைக்கு வந்திருந்தவர் எங்கே தனம் முல்லையை காணோம்னு கேட்க, அவளுக்கு வரதுக்கு வசதி இல்லை அப்பான்னு நாசூக்கா சொல்ல, இதைக் கேட்டுக்கொண்டு இருந்த கடைக்குட்டி தம்பி கண்ணன் கதிரிடம், அண்ணா அண்ணி உள்ளே ரூமில்தான் இருக்காங்க. ரூமிலிருந்து இங்கே வர என்ன வசதி பத்தலைன்னு கேட்கறான்.பேசாம இருடான்னு அடக்கறான் கதிர்.
இதெல்லாம் கிராமத்து வீடுகளில் மட்டுமே நடக்கும் இயல்பான நிகழ்வுகள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications