Pandian Stores Serial: ரூமுக்குள்ள வந்தா மட்டும்.. இல்லாட்டி.. என்னத்தா இப்படி சொல்லிட்டே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்ன இருந்தாலும் இது தப்புத்தானே.. பொண்டாட்டியை கொஞ்சுறதை விட வேற என்ன வேலை இருக்கு.. செய்யாட்டி பொண்டாட்டிக்கு கோபம் வரத்தானே செய்யும்.

அதுக்காக இந்த மீனா இப்படி ஊரைக் கூட்டி எல்லோரும் கேட்பது போலவே கத்திக் கேட்கும்.. பாண்டியன் ஸ்டோர்ஸில்தான் இந்த களேபரம். ஆனந்தம், எம் மகன் என பற்பல பல சரக்குக் கடை கதைகளை உல்டா அடித்து உருவாகி பட்டையைக் கிளப்பும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

முன்கதையை விடுங்க.. இன்னிக்கு வீட்டுல ஒரு காமெடி கலாட்டா.. அதுதான் இப்ப மேட்டர். அதுக்குப் போகலாம் வாங்க.

கதிர் முல்லை

கதிர் முல்லை

வீட்டில் எல்லோரும் மும்முரமாக உட்கார்ந்து பாலிதீன் கவரை ரெடி செய்து சாமான்களை அதில் ரொப்பிக் கொண்டுள்ளனர்.. ஜீவாவும், மீனாவும், கதிரும், முல்லையுமாக வீடே பிசியாக இருக்கிறது. மூத்தவர் டீ சாப்பிட்டபடி இதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கதிர் முல்லை

கதிர் முல்லை

தம்பி கதிரும், அவன் பொண்டாட்டியும் கொஞ்சம் ரொமான்ஸாக இருக்கட்டுமே என்று ஜீவா சில பல வேலைகளைச் செய்கிறான். அது ஜீவா பொண்டாட்டிக்குப் பிடிக்கலை.. முகத்தை சுள்ளென்று வைத்துக் கொள்கிறாள்.. மோவாக் கட்டையிலும் இடித்துக் கொள்கிறாள். அதைக் கண்டுகொள்ளலை ஜீவா.

ரொமான்ஸ் லுக்

ரொமான்ஸ் லுக்

தம்பியும், தம்பி பொண்டாட்டியும் ரொமான்ஸ் செய்தை லுக் விட்டு மகிழ்ச்சி அடைகிறான். இதைப் பார்த்த மீனாவுக்கு எரிச்சல் பிடுங்கித் தள்ளுகிறது.. ஜீவா. இங்க வா என்று கூப்பிடுகிறாள்.. நீ அடிப்ப என்று ஜீவா பதறுகிறான்.. வாடா என்று கூப்பிடும் அவள், என்ன தம்பிக்கு ஹெல்ப்பா என்று கேட்கிறாள்.. ஆமா என்கிறான் ஜீவா.

ரூமுக்குள்ள மட்டும்

ரூமுக்குள்ள மட்டும்

அவ்வளவுதான், வீட்டுல எல்லாரோட ரொமான்ஸுக்கும் ஹெல்ப் பண்ணு.. ரூமுக்குள்ள வந்தா மட்டும் கணக்குப் பாரு இல்லாட்டி தூங்கிரு என்று சத்தமாக சொல்லி விடுகிறாள். அதைக் கேட்டு வீடே ஆஃப் ஆகி விடுகிறது.. ஜீவாவுக்கு வெட்கம் பிடுங்கித் திண்கிறது.. மானத்தை வாங்கிட்டாளே என்று.. அதே நிலைதான் மீனாவுக்கும்.. அடடா ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு விட்டோமே என்று நெளிகிறாள். இப்படியே வாய் பாத்திருட்டிருக்காதீங்க.. இவ்வளவுதான் புரோமாவில் இருக்கு.. மிச்சம் மீதியை இன்னிக்கு நைட் போய்ப் பாருங்க. .நல்லாத்தான்யா இருக்கு ரொமான்ஸு!

இப்படியே வாய் பாத்திருட்டிருக்காதீங்க.. இவ்வளவுதான் புரோமாவில் இருக்கு.. மிச்சம் மீதியை இன்னிக்கு நைட் போய்ப் பாருங்க. .நல்லாத்தாய்யா இருக்கு ரொமான்ஸு!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+