Pandian stores serial: ரெண்டு பேரும் சரியா ஒரு மணிக்கு எங்கே போறாங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அண்ணன், தம்பிகள் ஒற்றுமையை காண்பிப்பதாக இருக்கிறது. அதோடு, கூட்டு குடும்பம், வீட்டில் முடியாத பெரியவர்கள் இருந்தால் அவர்களை எப்படி கவனித்துக் கொள்வது போன்ற விஷயங்களை வலியுறுத்துகிறார்கள்.

ஊரில் நல்ல பெயர் எடுத்த மளிகைக் கடை பாண்டியன் ஸ்டோர்ஸ். தரமான சாமான்கள், நியாயமான விலையில் கொடுக்கும் மளிகைக் கடை என்று பெயர் வாங்கி இருக்கும் கடை இது.

இந்த கடையை மூத்த அண்ணன் தம்பி ஜீவா, இன்னொரு தம்பி கதிர் என்று மூவரும் பார்த்துக்கறாங்க. கடைசி தம்பி கண்ணன் கல்லூரியில் படிச்சுக்கிட்டு இருக்கான்.

ஜீவா மீனா

ஜீவா மீனா

முல்லை இந்த குடும்பத்துக்கு அத்தை பெண். இவளுக்கு ஜீவாவை கல்யாணம் செய்து வைக்க வீட்டில் எல்லாரும் முடிவு எடுக்கறாங்க. ஆனால், ஜீவா பணக்கார வீட்டு பெண் மீனாவை காதலிக்கிறான். ஆனால், வீட்டில் இதை சொல்லாமல் முல்லையை கல்யாணம் செய்துக்க சம்மதிக்கிறான். ஆனால் தம்பி கதிருக்கு ஜீவா காதலிப்பது தெரியும். கடைசி நேரத்தில் மீனாவை ஜீவா கல்யாணம் செய்துக்க நேர்ந்துருது.

கதிர் முல்லை

கதிர் முல்லை

கல்யாணம் செய்ய மணமேடை வரைக்கும் வந்துவிட முல்லையை என்ன செய்வது.உடனே இன்னொரு தம்பி கதிருக்கும், முல்லைக்கும் கல்யாணம் செய்து வச்சுடறாங்க. ஏற்கனவே முல்லைக்கும் கதிருக்கும் கொஞ்சமும் ஆகாது. இப்போது இருவருக்கும் கல்யாணம் செய்து வச்சு, மேலும் விரிசல்தான் இருக்குது..இருவரும் நெருக்கமாகட்டும் என்று ஒரு ஒரு நாள் தனியாக விட்டுட்டு கோயிலுக்கு போயிட்டு வருவதற்குள் வீடே தலைகீழாக மாறிக் கிடக்குது.அவ்ளோ பெரிய சண்டை இருவருக்குள்ளும்.

ராசியாகி வர்றாங்க

ராசியாகி வர்றாங்க

இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ராசியாகி வர்றாங்க. இந்த நேரத்தில் கதிரும் அவளிடம் அன்பாக பேச ஆரம்பிக்கிறான். இவர்களுக்குள் இன்னும் நெருக்கமாக இருக்கமாட்டார்களா என்று குடும்பத்தில் ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு நாள் கடைக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு போய் வண்டியில் கொடுத்துட்டு வான்னு மூத்தவரின் மனைவி தனம் அக்கா சொல்றாங்க.

பேசாமல் முல்லை

பேசாமல் முல்லை

முல்லை எதுவும் பேசாமல் வண்டியைத் தள்ளிக் கொண்டே போயிட்டு தள்ளிக்கொண்டே வந்துடறா. எதுக்கு வண்டியைத் தள்ளிக்கிட்டு போனீங்கன்னு கேட்டு, முல்லை பதில் பேசாமல் நிற்க, வண்டி ஓட்ட தெரியாதான்னு முல்லையை ஒட்டு ஓட்டுன்னு ஓட்டறாங்க குடும்பமே சேர்ந்து. இவள் அன்று முழுக்க மூட் அவுட்டிலிருக்கா. அப்போதுதான் எனக்கு வண்டி ஓட்ட கத்து தரியாளான்னு நெருங்கி வர்றா முல்லை.

ஒரு மணிக்கு தினமும்

ஒரு மணிக்கு தினமும்

தினமும் ஒரு மணிக்கு முல்லை வீட்டை விட்டு கிளம்ப, அதே ஒரு மணிக்கு கதிரும் கடையை விட்டுட்டு போறான்.எங்கடான்னு கேட்டா இவன் நண்பரை பார்க்க போறேன்னு சொல்றான்.முல்லை கோயிலுக்கு போறேன்னு சொல்றா. என்னடா ரகசியம்னு கடையில் இருந்து அண்னனும், வீட்டில் இருந்து இரண்டு பெண்களும் என்று போய் பார்த்தால், முல்லைக்கு கதிர் வண்டி ஓட்ட கத்து கொடுத்துக்கிட்டு இருக்கான்.

நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்தாண்டா நாங்க ஆசைப்படறோம். உண்மையை சொல்றதுக்கு என்னன்னு கேட்கறார் அண்ணன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+