Pandian stores serial: கடைசியில அவுக ஒரு தோசை கூட சாப்பிடலையா? முல்லை வருத்தம்!
சென்னை: முல்லை கை வலிக்க தோசை சுட்டும் கதிர் ஒரு தோசை கூட சாப்பிடலையாமே... இதைத்தான் கேள்விப்பட்டு முல்லை மனசுக்குள் நொந்து போகிறாள்.
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கூட்டு குடும்பமா வாழறாங்க நாலு அண்ணன் தம்பிகள். கடைக்குட்டி கண்ணனுக்கு மட்டும்தான் இன்னும் கல்யாணம் ஆகலை.
ஆனாலும், சின்ன சின்ன சண்டைகள் குடும்பத்தில் வழக்கமானதுதான். அதனால் இந்த சீரியலை கொஞ்சம் நிதானமாக விருந்தாளியாக ஒரு குடும்பத்துக்கு போனது போல ரசிச்சு பார்க்க முடிகிறது.

பகிர்ந்து செய்வது
தனம், மீனா, முல்லை என்று மூன்று மருமகள்கள் வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்வது, ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து போவது என்று எல்லாமே மிக நன்றாக இருக்கிறது. இப்படிப்பட்ட குடும்பங்களை பார்ப்பதுதான் இப்போது அரிதாகி இருக்கிறது.

தோசை வேணாம்
இரவு சாப்பாட்டுக்கு தோசை வேணாம் முல்லைன்னு தனம் எவ்வளவு சொல்லியும் முல்லை கேட்கலை. நான் தோசை சுடறேன்க்கா.. நீங்க ரெண்டு பேரும் பரிமாருங்கன்னு முல்லை கண்டிப்பா சொல்லிடறா. தொட்டுக்க கறிக்குழம்பு வேற...விடுவாங்களா வீட்டு ஆண்கள்?

சுட்டுகிட்டே இருக்கா
முல்லை அடுப்படியில் மிக மெல்லியதாக தோசை சுட்டுக்கொண்டே இருக்கா... இங்கே பரிமாறிக்கிட்டே இருக்காங்க. யாரும் போதும்னு சொன்னபாடில்லை. முல்லைக்கு கை வலிக்குது.கதிர் தோசை வாங்க அடுப்படிக்கு வருகையில் முல்லை கை வலி தாங்காமல் அழுதுகிட்டே தோசை சுட்டுகிட்டு இருக்கா.

போதுமா தோசை
ஏங்க தோசை போதுமா? இதோடவாவது நிறுத்திக்குவீங்களான்னு முல்லை தாங்க முடியாம கேட்டுடறா. கதிர் மனசு வலிக்க தோசையை வாங்கிட்டு வர அதையும் கடைக்குட்டி கண்ணன் எடுத்துக்கறான். மறுநாள் தனம், என்ன முல்லை இன்னிக்கு நைட்டும் தோசை போடலாமான்னு கேட்க..ஐயோ அக்கா இன்னும் என் தோள்பட்டை வலிக்குதுன்னு சொல்றா முல்லை.

அவுக சாப்பிடலையா?
அதுக்குத்தான் சொன்னா கேட்கணும்.. தோசைன்னா நம்ம வீட்டில் எல்லாரும் நிறைய கணக்கில்லாம சாப்பிடுவாங்க.நான் இந்த வீட்டில் தோசை சுட்டு எட்டு வருஷம் ஆகுதுன்னு தனம் சொல்றா. அதை முதலில் சொல்லி இருக்கலாம்ல அக்கான்னு முல்லை கேட்க, என்ன சொல்ல சொல்ற முல்லை.. எல்லாரும் நிறைய சாப்பிடுவாங்க. அதனால தோசை வேணாம்னு சொன்னால் நல்லாவா இருக்கும்?.கண்ணு வச்ச மாதிரி இருக்காதுன்னு சொல்றா.

பதினஞ்சு தோசை
நானே கதிர் அண்ணன் தட்டுல இருந்த எல்லா தோசையையும் எடுத்து . சாப்பிட்டுட்டேன். எப்படியும் ஒரு பதினஞ்சு தோசை சாப்பிட்டு இருப்பேன்னு அப்போதுதான் கண்ணன் சொல்றான். அப்போ அவுக தோசை சாப்பிடலையாடான்னு முல்லை கேட்க, எங்க..அதுக்குத்தான் உங்ககிட்ட வந்து வாங்கிக்கலாம்னு வந்தாரு..அதையும் நான் எடுத்துகிட்டேன்னு சொல்ல..

இப்படி கேட்டுபுட்டேன்
அப்படியா? அந்த நேரத்துல போயி அவுக கிட்டே இப்படி கேட்டுபுட்டேன்.. கடைசியில் நான் தோசை சுட்டு அவுக சாப்பிடலையேன்னு முல்லை சொல்ல..எங்கே சொன்னா கேட்டாத்தானே.. தோசை சுடறேன்னு கதிரை பட்டினி போட்டுட்டேன்னு சொல்லிட்டு போறா தனம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications