Pandian Stores Serial;: பாண்டியன் ஸ்டோர்ஸை உடைக்கவே முடியாது போலிருக்கே!
சென்னை: பிரபல நகைக்கடைகளை கூட உடைச்சு திருடர்கள் நகையை எடுத்துடறாங்க. இந்த பாண்டியன் ஸ்டோர்ஸை இரண்டா உடைக்க முடியலைங்க.
கூட்டு குடும்பம் எத்தனை சுகம் என்பதை உணர்த்தும் பல கதைகள் சினிமாவிலும் சரி, சீரியல்களிலும் சரி சக்கை போடு போட்டு ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இது போல நமது வீடுகளின் வரவேற்பறைக்கே வந்து கூட்டு குடும்பத்தின் இனிய நினைவுகளை உண்டாக்கி வருகிறது.

வேலை கடையில்
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், மூத்த அண்ணன், மூன்று தம்பிகள். கடைக்குட்டி மட்டும் காலேஜில் படித்து வருகிறான். ஆனந்தம் படம் கதை போலத்தான். ஆனால், இதில் வரும் பிரச்சனைகள் வேறாக இருக்கிறது. அதனால், கொஞ்சம் விரும்பி பார்க்க முடிகிறது.

குடும்பமே பிரதானம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நிறைய நடிகர்கள் இல்லை. ஒரு குடும்பத்தை மட்டுமே மையமாக வைத்து கதையை நகர்த்தி வருவது சாமர்த்தியம் தான். முல்லையும் கதிரும் இன்னும் ஒன்று சேரவில்லை என்று குடும்பமே அவர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள். ஒரு படி மேல போய், சின்ன அண்ணன் ஜீவா ரொமான்ஸுக்கு கூட உதவி செய்கிறான்.

இரண்டு நாட்கள்
ரெண்டு நாள் கடையில் வேலை செய்து இருக்கோம்.. பெரிய அண்ணன் நிறைய பணம் தருவார். அதில் இது வாங்கலாம் அது வாங்கலாம் என்று முல்லை, மீனா இருவரும் கணக்கு போட்டு கொண்டு இருக்கிறார்கள்.பெரியவர் கூப்பிட்டு ஆளுக்கு நூறு ரூபாய் மட்டும் தருகிறார். இருவருக்கும் சப்பென்று ஆகிவிடுகிறது.

இரண்டாக கடையை
மீனாவுக்கு கோவம் கன்னா பின்னாவென்று எகிறிவிடுகிறது. உங்க அண்ணன் கடையில ரெண்டு நாள் வேலை செய்ததுக்கு மனசாட்சியே இல்லாமல் நூறு ரூபாய் குடுக்கறாரே இதெல்லாம் சரி வராது ஜீவான்னு கத்தறா. மெதுவா பேசுடின்னு இவன் சொல்ல, கேட்கட்டுமே.. உனக்கு சம்பளம் தர்றதில்லை.. என் கிட்டே காசு எப்படி வரும்னு கேட்கிறாள்.

இதுவும் கனவா
ஒரு குச்சி மிட்டாய் வாங்கணும்னாலும் உன்கிட்டே காசு கேட்டா நீ இல்லன்னு சொல்வேன்னு சொல்றா கடையில எடுத்துக்கோன்னு இவன் சொல்ல, இல்லை ஜீவா,அந்த கடையை ரெண்டா பிரிக்கணும்னு சொல்றா மீனா. எழுந்து பார்த்தால் இது கனவா இருக்குது. கனவான்னு நினைச்சுகிட்டு, இன்னிக்கு எப்படியாவது பிரச்சனையை கிளப்பணும்னு பெரியவர்கிட்டே பேசப் போறா.
நான் வேலைக்கு போகணும்னு கேட்க ஆரம்பிச்சா பிரச்சனை ஆகிரும்னு சொல்லி, மாமா நான் வேலைக்கு போகலாம்னு இருக்கேன்னு ஆரம்பிக்க,

படு ஸ்மூத்தாக
பெரிய மாமா, நீ நினைக்கிறது சரிதான் மீனா. படிச்ச பொண்ணுங்களை வேலைக்கு போக கூடாதுன்னு சொல்ற அளவுக்கு இந்த வீட்டில் மனசு இல்லாதவங்க யாருமில்லைன்னு சொல்கிறார். கூடவே, நான் கூட சொல்லி வைக்கிறேன்னு சொல்ல, இது என்னடா புது ட்விஸ்ட்டுன்னு சொல்லிக்கறா மீனா. இப்படி கதை அதிகமில்லை கொஞ்சம்கூட வன்முறை பழிவாங்குதல் என்று இல்லாமல் படு ஸ்மூத்தாக சென்று கொண்டு இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications