Pandian Stores Serial: முல்லை வண்டி ஓட்டறதை குடும்பமே பார்த்து ரசிக்கறாங்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடை மற்றும் வீடு இப்படித்தான் கதையின் ஓட்டமிருக்கிறது.என்றாலும், சீரியலை பார்க்கும் மக்களுக்கு மனதில் ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது.

கூட்டு குடும்பம், அண்ணன் தம்பிகள் ஒற்றுமை, வீட்டுக்கு வந்த மருமகள்கள் பழகிக் கொள்ளும் விதம் என்று, ஒரு நல்ல குடும்பத்தை பார்க்கும் போது சீரியல் ஆர்வலர்களுக்கு சந்தோஷமாகத்தான் இருக்கும்.

வில்லி மிரட்டல், யார் குடும்பத்தை யார் எப்போது கெடுப்பார்களோ என்கிற பயம் எல்லாம் இல்லாமல் இந்த சீரியலை பார்க்கும்போது இருப்பதில்லை என்பது கூடுதல் பிளஸ்.

கதிர் வண்டி

கதிர் வண்டி

கதிருக்கும் ,அவனது மாமா பெண்ணான முல்லைக்கும் எதிர்பாராமல்தான் கல்யாணம் நடக்குது. எப்போதும் முல்லையை கண்டாலே பிடிக்காத கதிர். அண்ணன் ஜீவாவுக்கு முல்லையை கலயாணம் நிச்சயம் செய்திருந்த வேளையில், ஜீவா மீனாவை காதலிச்சது தெரிஞ்ச கதிர் அண்ணனுக்காக முல்லையை கல்யாணம் செய்துக்க நேர்ந்துருது. முல்லைக்கு எப்போதுமே தன்னை பிடிக்காத கதிருக்கு இப்போது மட்டும் எப்படி பிடிக்கும்னு உள்ளுக்குள்ள அழுத்தமா எண்ணம் பதிஞ்சு போகுது.

இரு வேறு திசையில்

இரு வேறு திசையில்

வாழ்க்கையில் இருவரும் ஒன்று சேராமல், இரு வேறு திசையில் இருப்பதைப் பார்த்து, வீட்டில் இருப்பவர்கள், அதுவும் மூத்த அண்ணன் தப்பா கல்யாணம் செய்து வச்சுட்டோமோன்னு கவலைப் படறார். ஒரு முறை இருவரையும் தனியா விட்டுட்டு குல தெய்வம் கோயிலுக்கு போயிட்டு, இரவு தங்கிட்டு வந்தா, இங்கே வீடே தலை கீழா மாறிக் கிடக்கு. முல்லை எதுக்கு எங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு போனீங்கன்னு அழறா.

ஹனி மூன் டிரிப்

ஹனி மூன் டிரிப்

இப்படி இருக்கையில் ஹனி மூன் டிரிப் போகணும்னு ஜீவாவும், மீனாவும் ஆசைப்பட எல்லாரையும் அனுப்பி வச்சுட்டு, மூத்தவர் மட்டும் வீட்டில் இருக்கார். அப்போது கொஞ்சம் ஆசையாக பேச ஆரம்பிக்கிறார்கள் முல்லையும், கதிரும். இப்படி பேசசு வார்த்தை மட்டும் இவர்களுக்குள் இருக்கையில் முல்லைக்கு வண்டிஓட்ட தெரியவில்லை என்று வீட்டில் எல்லாரும் கேலி செய்கிறார்கள். அவமானப்பட்ட முல்லைக்கு புருஷன் கதிர் வண்டி ஓட்ட கற்றுத் தருவது வீட்டுக்கே சர்பிரைசா தெரிஞ்சு, இப்போ எல்லார் முன்னாலும் வண்டி ஓட்டி காட்டுன்னு சொல்றாங்க.

முல்லையை சுற்றி

முல்லையை சுற்றி

முல்லையை சுற்றி எல்லாரும் நிற்க முல்லை வண்டி ஒட்டி காட்டணும்னு ஒரே ஆர்ப்பாட்டம் பண்றாங்க குடும்பத்தில், இதைப் பார்க்க முல்லையின் அப்பாவை வேறு வரவழைச்சு, ஓட்டு ஓட்டுன்னு எல்லாரும் சந்தோஷமா கேட்கறாங்க.முல்லை வண்டியை ஸ்டார்ட் செய்ய, அது ஸ்டார்ட் ஆகலை. என்னன்னு பார்த்துட்டு, மறுபடியும் பார்த்தால் பெட்ரோல் இல்லை. பெட்ரோல் போட்டும் அவள் பார்த்து நிற்க, இப்போ என்னன்னு கேட்கறான் புருஷன் கதிர். கல்லுங்கன்னு முல்லை சொல்ல, குனிஞ்சு கல்லை எடுத்த கதிர் ,இத்துனூண்டு கல்லு... இதுக்கான்னு சொல்லிட்டு, தைரியமா ஓட்டுன்னு சொல்றான்.

ஓட்ட குடும்பமே

ஓட்ட குடும்பமே

முல்லை வண்டி ஓட்ட குடும்பமே குதூகலிக்குது. ஒருத்தர் மாத்தி ஓ ஒருத்தர் டபுள்ஸ் போறாங்க. உடனே முல்லை அப்பா மகளுக்கு வண்டி வாங்கித் தரணும்னு ஆசைப்படறார். மூத்த அண்ணனும் முல்லைக்கு மட்டும் இல்லாமல் வீ ட்டு உபயோகத்துக்கு பொம்பளை பிள்ளைங்க வண்டி ஓட்டற மாதிரி வாங்கணும்னு முடிவு பண்றாங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+