ஹேமா கர்ப்பமா இருக்காராம்.. பாண்டியன் ஸ்டோர்ஸில் ஒரே கொண்டாட்டம்தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறதாம். ரசிகர்களுக்கு அடுத்தடுத்து கொண்டாட்டம்தான் என்று சொல்கிறார்கள்.

சின்னத் திரை படப்பிடிப்புகள் அரசின் அறிவுறுத்தலின் பாதுகாப்பு முறைப்படி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சில சீரியல்கள் சீக்கிரமாகவே ஒளிபரப்பப்படும் வகையில் ஷூட்டிங்கை முடுக்கி விட்டுள்ளன. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பும் ஆரம்பித்து விறுவிறுப்பாக போய்ட்டிருக்காம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் அண்ணன் தம்பி குடும்ப கதையை மையமாகக் கொண்டு மிக அழகான தொடர். இதே கருத்தை வைத்து எத்தனையோ படங்கள் வந்தாலும் சீரியல்களும் வந்தாலும் இந்த சீரியலுக்கு தனி மதிப்பு இருக்கத்தான் செய்கிறது.

 மூத்த மருமகள் தனம்

மூத்த மருமகள் தனம்

இந்த சீரியலில் மூத்த மருமகள் தனம் கேரக்டரில் சுஜிதா நடிச்சிருக்காங்க. இவங்களுக்கு நடிக்க சொல்லியா கொடுக்கனும். இவர் பிறந்து கைக்குழந்தையாக இருக்கும்போது திரைப்படங்களில் நடித்தவ.ர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் தமிழ் தெலுங்கு என எல்லா மொழிகளிலும் நடித்திருக்கிறார். இவர் இந்த சீரியலில் மூத்த மருமகளாக தன் மைத்துனர்களை குழந்தைகள் போல் கவனித்துக் கொள்ளும் ஒரு குடும்பத் தலைவியாக வருகிறார்.

 பொத்திப் பொத்தி பாதுகாக்கும் தனம்

பொத்திப் பொத்தி பாதுகாக்கும் தனம்

எவ்வளவுதான் குடும்பத்தை பொத்தி பொத்தி பாதுகாத்தாலும் அதன் பிறகு வரும் மற்றவர்களின் மனைவிகளும் வாழ்க்கையின் பிரச்சனைகளையும் மையமாகக் கொண்டு இந்த சீரியல் ஓடிகிட்டு இருக்கு. இதில் வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன் ,விஜே சித்ரா, சரவணன் விக்ரம் அப்படி பலர் நடித்திருக்கிறார்கள். இருந்தாலும் இது ஒரு கூட்டு குடும்பம் போல தான் இருக்கிறது.

 நிஜமான குடும்பம் போல

நிஜமான குடும்பம் போல

இவங்க உண்மையிலேயே ஒரு குடும்ப மாதிரிதான் பழகிவிட்டு இருக்காங்களாம் .இந்த டைம்ல சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்த நேரத்துல எல்லாரும் டப்ஸ்மாஷ் டிக் டாக் ல கலக்கிக் கொண்டு இருந்தாங்க. இப்போ டிக் டாக் தடை செஞ்சிருந்த நேரத்துல இவங்க என்ன செய்யணும் யோசிச்சிட்டு இருக்கும்போதுதான் இவங்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைச்சிருக்கு. மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கி விட்டது. இவங்களும் ஹேப்பி ஆயிட்டாங்க.

குதூகலம்

குதூகலம்

படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு நடிகர் நடிகைகள் எல்லாம் ரொம்ப குதூகலமாக சூட்டிங் பாட்டுக்கு வந்திருக்கிறார்கள். நீண்ட நாட்களாக பார்க்காமல் போனதால் பிரேக் விடும் சமயமெல்லாம் நிறைய அரட்டைதானாம். அரட்டை அடித்து அதை வீடியோக்களாக சமூக வலைதளத்தில் அப்லோட் பண்ணி இருக்கிறார்கள். அது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமா ராஜ்குமார் தற்போது கர்ப்பமாக இருக்கிறாராம்.

 வாழ்த்துகள் ஹேமா

வாழ்த்துகள் ஹேமா

கதைப்படியும் இவர் கர்ப்பம், நிஜத்திலும் கர்ப்பம் என்பதால் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரே கலகலப்புதானாம். அவரும் இன்று சூட்டிங் வந்திருக்கிறார். நிறைமாத நிலவாக வந்து போட்டோ எடுத்து இணையதளத்தில் அப்லோட் பண்ணி இருக்கிறார். அவரைப் பார்த்து அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் சீரியல் சீக்கிரமாக போடுங்கம்மா சஸ்பென்ஸ் தாங்க முடியலன்னும் சொல்லி இருக்காங்க. எப்படியோ கடை கலகலப்பா கல்லா கட்டினால் சரித்தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+