Pandian Stores Serial: ஒரு வீட்டுக்குள்ள புருஷன் பொண்டாட்டி இப்படியும் காதலிக்க முடியுமா?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Pandian Stores Week In Short full episode | Kathir Mulla Romantic Song

    சென்னை:ஒரு வீட்டுக்குள்ள புருஷன் பொண்டாட்டி இப்படியும் காதலிக்க முடியுமா என்று, கூட்டு குடும்பத்தினர் ஆசைப்படும் அளவுக்கு விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருக்குது. இதில் கதிர் முல்லை இருவரும்தான் பார்ப்பவரை இப்படி வியக்க வைத்து இருக்கிறார்கள்.

    கூட்டு குடும்பம் அரிதாகிவிட்ட இந்த காலத்தில், கூட்டு குடும்பம் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்னு ஏக்கத்தை வரவழைக்கும் கதை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். திரைப்படத்தை கூட 4 பாட்டு, ரெண்டு சண்டை என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதையை எடுத்துவிடலாம், எடுத்தும் இருக்கிறார்கள்... சுட்டிக்காட்ட வேண்டாம்,

    ஆனால், தொலைக்காட்சி சீரியல்களில் தொடர்ந்து இதே மாதிரி கூட்டு குடும்பத்தின் மகிமையை அச்சு பிசகாமல் அனைவரையும் சோர்வடைய வைக்காமல், போரடிக்க வைக்காமல் என்று எத்தனையோ ரெஸ்பான்சிபிலிட்டியை எடுத்துக்கொண்டு ஹிட் சீரியலாக கொடுத்து வருவது நல்ல பாராட்டாக கூடிய முயற்சிதான்.

    துள்ளுவதே காதல்

    துள்ளுவதே காதல்

    வீட்டில் அனைவரும் இருந்தாலும் கண்ணால் பேசிக்கொள்ளும் கதிர் முல்லையின் கண்களில் துள்ளுவதுதான் காதல். கதிர் குரல் வெளியில் வராமல் மெதுவாக முல்லை என்று அழைத்தாலும், அதை இதமாக காதில் வாங்கி கூப்பிட்ட குரலுக்கு அதிராமல் அவசரமாக வந்து என்னங்க..கூப்பிட்டீயளா என்று முல்லை வந்து நிற்கும்போது என்று கண்ணுக்கு தெரியாமல் உணரும்படி துள்ளுவதே காதல்!

    உன் பேர் சொல்ல

    உன் பேர் சொல்ல

    உன் பேர் சொல்ல ஆசைதான்.. உள்ளம் உருக ஆசைதான் என்று நினைத்து இருக்கும் கணவன் எப்போது தனக்கானவளை பெயர் சொல்லி அழைக்கலாம் என்று காத்திருந்து அழைக்க, முல்லையின் பேர் சொல்ல... கண்ணில் கடைக் கண்ணில் நீயும் பார்த்தால் போதுமே என்று இருந்தவளுக்கு அவன் தனது பேரை சொல்லி அழைத்தது ஆனந்த பெருவெள்ளத்தை மனசுக்குள் ஆர்ப்பரிக்க விட்டது போன்ற நெகிழ்ச்சி. நீங்க பேர் சொல்லி கூப்பிட்டது ரொம்ப பிடிச்சுருக்குங்க என்று மனைவியானவள் காதலியாகவும் மனதைத் திறக்கிறான்.

    போன் பண்ணியிருந்தாக

    போன் பண்ணியிருந்தாக

    அறைக்குள் வரும்போதே அழகாய் கட்டிலில் அமர்ந்து என்ன பேசலாம்.. அவுக என்ன பேசுவாக என்கிற எதிர்பார்ப்பில் கட்டிலில் உட்கார்ந்து இருக்கும் முல்லை. அவன் வந்தவுடன் பூவாய் மலரும் அவள் முகம். அதில் கண்கள் அப்படியும் இப்படியும் அசைய குட்டி குட்டி எக்ஸ்பிரஷன்ஸ் என்று அசத்துகிறாள் முல்லை. அம்மா போன் பண்ணி இருந்தாக என்று கூறி அவன் என்ன சொல்லப் போகிறான் என்று அவன் முகத்தை பார்க்கும் முல்லை அந்த சின்ன அறைக்குள் நிலவும் சூழ்நிலையை ரசிக்க வைத்துவிடுகிறாள். பின்னர் ஓரிரு வார்த்தையில் இனிமையான உரையாடல்கள்.

    கூட்டு குடும்பத்தில் ரொமான்ஸ்

    கூட்டு குடும்பத்தில் ரொமான்ஸ்

    கூட்டு குடும்பத்தில் தம்பதியர் ரொமான்ஸ் பண்ணமுடியாது என்று பலரும் சொன்னதை பொய்யாக்கி இருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், தம்பதியருக்கு என்று தனி இடத்தை தங்களது நடவடிக்கை மூலமே இந்த சீரியல் குடும்பத்தார் உருவாக்கி வாழ்ந்து வருகிறார்கள். இதை போல கூட்டு குடும்பத்தில் எல்லாரும் அவரவருக்கான இடத்தை மட்டுமே புரிந்து எடுத்துக்கொண்டு வாழ்ந்தால் இந்த சீரியல் போலவே கூட்டு குடும்பம் மகிழ்ச்சிதான்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+