pandian stores serial: ஏமாந்துட்டீங்களே தனம் அக்கா...உங்களுக்கா இப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சண்டை சச்சரவு என்று பார்ப்பவர்கள் நொந்து போகும் அளவுக்கு குடும்ப பிரச்சனை. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலா இப்படின்னு போன் போட்டு பெண்கள் அங்கலாய்க்கறாங்க.

வில்லி இல்லை... சண்டை இல்லை ரொம்ப மென்மையா குடும்ப கதை என்று நம்பி உட்கார்ந்து பார்க்கும்படி இருந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.

மீனாவின் அப்பா அம்மா சமாதானம் ஆகி வீட்டுக்குள் வந்துட்டு போனாங்க. அப்போ ஸ்டார்ட் ஆகிருச்சு பிரச்சனை. அண்ணன் தம்பி ஒற்றுமை...ஓர்படிகள் ஒற்றுமையை குலைக்கும் இது போன்ற காட்சிகளை பாண்டியன் ஸ்டோர்ஸில் பார்க்க ரசிகர்களுக்கு மனம் இல்லை.

 அரைத்த மாவையே

அரைத்த மாவையே

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பெரிதாக ஒன்றும் இல்லை. வீட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை அரைத்த மாவை அரைப்பது போலத்தான் காட்சிகளும் வசனங்களும் இருக்கு. ஆனால், அரைத்த மாவை கிரைண்டரில் அரைக்காமல் ஒரு வேளை ஆட்டுக்கல்லில் அரைப்பார்களோ எனும் அளவுக்கு காட்சிகள் போரடிக்காமல் ஜில்லுன்னு இருக்கு.

 ரொமான்ஸ் டயலாக்

ரொமான்ஸ் டயலாக்

ரொமான்ஸ் காட்சிகள், அப்போது பேசப்படும் வசனங்கள் கூட ஏற்கனவே அவரவர் குடும்பத்தில் மனதுக்கு பிடித்தவர் கணவன், மனைவி என்று பேசிக்கொள்வதுதான். அதையே இவர்கள் ரொம்ப ஃபீல் பண்ணி கொஞ்சி பேசும்போது வித்தியாசமா தெரியுது.இப்படி மக்களை ரசிக்க வைக்கும் அளவுக்கு சீரியல் குழு மெனக்கெடுகிறது. அந்த மெனக்கெடல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் சக்ஸஸ்.

 ஏமாந்த தனம்

ஏமாந்த தனம்

நகை பாலீஷ் போட்டுத் தருகிறேன்.. நகை பாலீஷ் போட்டுத் தருகிறேன் என்று தெருவில் ஒருத்தன் வர, அவனை வீட்டுக்குள் அழைத்து வந்து செயினை கழட்டிக் குடுத்து பாலீஷ் போட தருகிறாள் தனம். அவனும் நடு வீட்டில் உட்கார்ந்து கண்முன்னே பாலீஷ் போடுகிறான். இப்படி பாலீஷ் போடுறவன் ஏமாத்திடுவான்னு சொல்லுவாக என்று முல்லை சொல்ல.. என்னை யாரும் ஏமாத்த முடியாதுன்னு சொல்றா தனம்.

 இந்த கறுத்த செயினையா

இந்த கறுத்த செயினையா

செயினை வாங்கியும் வச்சாச்சு.. அவனும் போயிட்டான். கண்ணன் உட்கார்ந்து இருக்க.. இந்தாடா இந்த செயினைப் போட்டுக்கோ என்று கையில் வைத்து இருந்த செயினை தனம் கண்ணனிடம் தருகிறாள். எது.. இந்த கறுத்த செயினையா என்று கண்ணன் நக்கலாக கேட்க.. அட ஆமாம்... செயின் கருத்துப் போச்சு. ... இப்போ என்ன செய்ய ...மாமா வேற திட்டுவாரே..பயத்தில் தனம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+