இதைவிட அதிகமா சம்பாதிப்பேன்.... அப்ப உங்களுக்கு தர மாட்டேன்... பாண்டியராஜன் கலகல!
சென்னை: சன் டிவியின் லொள்ளுப்பா நிகழ்ச்சியில் நடிகரும் இயக்குநருமான பாண்டிய ராஜன் சிறப்பு நடுவராக கலந்துகொண்டார்.
இவருடன் நடிகை மீனாவும் கலந்துகொண்டார். ஸ்டேண்டப் காமெடி, கான்செப்ட் காமெடின்னு வாராவாரம் நிகழ்ச்சி களைக்கட்டும்.
தான் இயக்குனர் என்பதை விட, அசிஸ்டெண்ட்னு சொல்லிக்கவே ரொம்ப பெருமைப் படுவதாக சொன்னார். காரணம் உதவி இயக்குநரா சேர்ந்ததே மறக்க முடியாத சம்பவம் .. அதனாலதான்னு சொன்னார்.

நான் தூயவன் சார் கம்பெனியில டீ, வடை போண்டா வாங்கித்தரும் பையனா இருந்தேன். குருநாதர் பாக்கியராஜ் சார் அங்க வந்தப்போ, ஒரு பக்கம் காப்பிரைட் எழுதி குடுத்தேன்.
எழுத்து கொட்டை கொட்டையா அழகா இருக்கேன்னு சொன்னார். ஆமா.. சார் எனக்கு டைரக்ஷனில் ஆசை. உங்களுக்கு அசிஸ்டெண்டா வந்துடறேன்னு சொன்னேன்.

எனக்கு நிறைய பேர் இருக்காங்கப்பான்னு சொல்லிட்டார். அப்பவும் நான் விடலை.. அவங்க ஷூட்டிங் ஸ்பாட்லேயே சுத்திகிட்டு, எல்லாரையும் காக்கா புடிச்சுக்கிட்டேன்.
ஒரு நாள் கிளாப் சொல்லி கிளாப் அடிச்சேன். யாரது கிளாப் அடிச்சது புது குரலா இருக்குன்னு சொன்னார். நான்தான்னு எல்லாரும் சொல்ல, சட்டுன்னு கால்ல விழுந்துட்டேன்.
அப்பா இல்லாத பையன்.. என்னை அசிஸ்டென்டா சேர்த்துக்கங்கன்னு கெஞ்சினேன். உடனே சரின்னு சொல்லிட்டார்.
ஒரு நாள் ஒரு புரடியூசர் தந்த பணத்தை எண்ணிக்கிட்டு இருந்தேன் 'என்ன பாண்டியராஜன் இவ்ளோ பணம் வருது.. நமக்கு தர மாட்டேங்கிறாரேன்னு யோசிக்கிறியா?"ன்னு கேட்டார்.
இல்லை சார் இதைவிட அதிகமா நான் சம்பாதிப்பேன்.. அப்போ உங்களுக்கு தர மாட்டேன்னு சொன்னேன்.. அவரும் சிரிச்சுட்டார். என்றார். .
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications