Pani Movie OTT Review: மனைவியை "சிதைத்து" சில்மிஷம்.. மாட்டியவர்களுக்கு உப்புகண்டம்! "பணி" விமர்சனம்
சென்னை: ஜோஜு ஜார்ஜின் இயக்கத்தில் வெளிவந்த "பணி" திரைப்படம் (Pani Movie), திருச்சூரைப் பின்னணியாகக் கொண்டு, வன்முறை மற்றும் பழிவாங்கல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட திரில்லர். சோனி லிவ் (Sony Liv OTT) தளத்தில் பல மொழிகளில் கிடைக்கும் இப்படம், கதைக்களத்தின் வலுவான அம்சங்களுடன் கூடவே, சில விமர்சனங்களையும் சேர்த்தே எழுப்புகிறது. இந்த வார ஓடிடி பரிந்துரையாக இந்த படத்தை நாங்கள் முன்வைக்கிறோம். ஆனால் பார்க்கலாமா வேண்டாமா என்பதை முழுவதாக படித்துவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்.
கதைக்களம்: அரசியல், ரவுடிகளை கைக்குள் வைத்திருக்கும் செல்வாக்கு மிக்க குடும்பத்தின் ரியல் எஸ்டேட் டான், கிரி (ஜோஜு ஜார்ஜ்) மற்றும் அவரது மனைவி அபிநயா ஆகியோரின் வாழ்க்கை, இரண்டு இளைஞர்களின் (சாகர் சூர்யா, ஜுனைஸ்) பழிவாங்கும் எண்ணத்தால் தலைகீழாக மாறுகிறது. சபலத்தால் ஆரம்பித்த ஒரு தவறு, பெரும் பழிவாங்கலுக்கு வழிவகுக்கும் விதத்தில் கதை நகர்கிறது.

ஷாப்பிங் செல்லும் இடத்தில் அபிநயாவின் இடுப்பை பிடித்து வில்லன் கிள்ள, இதை அறிந்து கிரி போட்டு பின்னி எடுக்கிறார். மனைவிக்காகத்தானே எங்களை அடித்தாய், அந்த மனைவியை எப்படி அணு அணுவாக ரசிக்கிறோம் பார் என்ற வகையில் கொடுமையான சபதத்தை எடுத்து வில்லன்கள் செய்யும் விஷயங்களும், கிரியின் பதிலடியுமாக ஆக்ஷன் படமாக அமைந்துள்ளது பணி.
பணி படத்தின் பலங்கள்
வலுவான வில்லன் கதாபாத்திரங்கள்: சாகர் சூர்யா மற்றும் ஜுனைஸ் ஆகியோர் தங்கள் நடிப்பால் படத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர். அவர்களின் காட்சிகள், பார்வையாளர்களை வெறுப்படையச் செய்யும் வகையில் விறுவிறுப்பாக அமைந்துள்ளன. வேட்டையாடு விளையாடு இரட்டை வில்லன்களை போலவே கொடூரமான, அறுவெறுப்பான வில்லன்களாக இவர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஜோஜு ஜார்ஜின் முதிர்ச்சியான நடிப்பு: வசனங்களைக் காட்டிலும், உடல் மொழி மற்றும் பார்வையின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தில் ஜோஜு ஜார்ஜ் தனது நடிப்பில் முதிர்ச்சியைக் காட்டியுள்ளார்.
தொழில்நுட்ப அம்சங்கள்: ஒளிப்பதிவு மற்றும் இசை படத்திற்கு வலு சேர்க்கின்றன. சண்டைக் காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளன.

சீமா மற்றும் அபிநயாவின் நடிப்பு: இருவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். அதேபோல கிளைமேக்ஸ் காட்சியின் விறுவிறுப்பான துரத்தல் காட்சியமைப்பை பலரும் சிலாகித்துள்ளனர்.
படத்தின் குறைகள்:
வன்முறையின் காட்சிப்படுத்தல்: மனைவியை வீடு புகுந்து இரண்டு வாலிபர்கள் துன்புறுத்தும் காட்சி, மிகவும் வன்முறையாகவும், குடும்பத்துடன் பார்க்க முடியாத வகையிலும் அமைந்துள்ளது. இத்தகைய காட்சிகள், கதையின் நோக்கத்தை விட அதிகமாக வன்முறையை மையமாகக் கொண்டுள்ளதாகத் தோன்றுகிறது. உதட்டை கடித்து இழுப்பது, புடவையை உருவுவது, ஜாக்கெட்டை பிய்த்து இழுப்பது, அங்கங்களை வர்ணிப்பது என சின்ன ஜமீன் படத்து பலாத்கார காட்சிக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு கொடூரப்படுத்தியுள்ளனர். அபிநயாவும் இயக்குநர் சொன்னாரே என நடித்துக்கொடுத்துள்ளார். நடுங்கியபடியே, அவர் நடிப்பு அருமைதான் என்றபோதிலும் இந்த காட்சியையும், இடுப்பை கிள்ளும் முந்தைய காட்சியையும் இயக்குநர் இலைமறை காயாக கொண்டு சென்றிருக்க வேண்டும்.

கதாபாத்திரங்களின் பாதுகாப்பு: பணக்கார குடும்பம் என்ற போதிலும், முக்கிய கதாபாத்திரங்களின் பாதுகாப்பு பலவீனமாக இருப்பது ஒரு கேள்விக்குறியை எழுப்புகிறது.
மலையாள சினிமாவின் பொதுவான பிரச்சனை: புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற காட்சிகள் இப்படத்திலும் அதிகம் உள்ளன.
முடிவு
"பணி" திரைப்படம், வன்முறை மற்றும் பழிவாங்கல் கதைகளை விரும்பும் ரசிகர்களை ஈர்க்கும். ஆனால், அதிகப்படியான வன்முறை மற்றும் சில கதாபாத்திரங்களின் பாத்திர சித்தரிப்பில் ஏற்படும் குறைபாடுகள், படத்தின் தரத்தை குறைக்கின்றது. பலாத்காரம் செய்தாலும் அதை மறந்துவிட்டு வேறு வேலையை பார்க்க வேண்டும் என்று பெண்ணுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் காட்சியமைப்புகள் இருந்தாலும், வன்முறையின் காட்சிப்படுத்தலை குறைத்திருந்தால், "பணி" இன்னும் சிறப்பான திரைப்படமாக அமைந்திருக்கும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications