என்னாது பஞ்சு மிட்டாய் பேரு இனிமே தங்க மிட்டாயா?..செல்லாது...செல்லாது!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல்,லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் ரெண்டும் இணைந்து ஒளிபரப்பாகிட்டு வருது. இன்றோடு இந்த சங்கமம் முடியுது.
ரோஜா சீரியலில் ரோஜா அர்ஜுன்,லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலின் ரவி,பாக்கியலட்சுமி என்று இரு ஜோடிகளின் ரொமான்ஸ் களைக்கட்டுது.
ரொம்ப ஓவர் ரொமான்ஸ் இல்லாம புரிஞ்சுக்கறவங்க புரிஞ்சுக்கற மாதிரிதான் இருக்கு.இப்படி பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் இருந்தா குடும்பத்துக்கு நல்லது.

தங்க மிட்டாய்
கோயில் திருவிழாவில் பஞ்சு மிட்டாயை தங்க மிட்டாய்னு சொல்லி ஒருத்தன் வித்துக்கிட்டு இருக்கான்.அங்க வந்த பாக்கியலட்சுமி, யோவ் இது பேரு பஞ்சு மிட்டாய்தானே.. தங்கமிட்டாய்னு விக்கறேன்னு கேட்கறா.

தங்க மிட்டாய்தான்
இல்லைங்க இது பேரு தங்க மிட்டாய்தான்னு சொல்றான் விக்கறவன். என்ன அநியாயமா இருக்குன்னு சொல்லிட்டு, அங்க வந்த ஒருத்தர்கிட்ட ஏங்க இது பேரு என்னனு கேட்கறா பாக்கியலட்சுமி. பஞ்சு மிட்டாய்னு அவர் சொல்லிட்டு போக.. பார்த்தியா இது பேரு பஞ்சு மிட்டாய்தான்.. யாரை ஏமாத்த பார்க்கறேன்னு சொல்றா.

மொத்த ரைட்ஸ்
அம்மா..அங்க ஒருத்தர் நிக்கறாரு பாருங்க.. அவர்தான் பஞ்சு மிட்டாய்னு சொல்லி விக்க கூடாதுன்னு சொல்லிட்டார்னு சொல்றார். பார்த்தா அங்க ரவி நிக்கறான். ஹாய் பஞ்சு நான்தான் பஞ்சு மிட்டாய்க்கு மொத்த ரைட்ஸும் வாங்கி இருக்கேன்னு சொல்றான்.பாக்கிய லட்சுமி வெட்கப்படறா.

ஆளை விடுங்க சாமி
பஞ்சு மிட்டாய்னு சொல்லி விக்கணும்னு இவ அடம் பிடிக்க, ஆளை விடுங்க சாமி..இனிமே நான் பஞ்சு மிட்டாய் விக்கலைன்னு சொல்லிட்டு ஓடிடறான். ரவி வந்து பாக்கிய லட்சுமிக்கு பஞ்சு மிட்டாய் சுத்தி தர்றான்.ரெண்டு பேரும் சுவைச்சு சாப்பிடறாங்க.

ரவி பாக்கிய லட்சுமி
ரவியையும் பாக்கிய லட்சுமியையும் பார்த்த அர்ஜுன் ரொமான்ஸ் மூடுக்கு வந்துடறான்.ரோஜா அவங்க இரண்டு பேரையும் பாரு எவ்ளோ ஜாலியா கடைக்காரனை கலாய்க்கறாங்கன்னு சொல்றான். ரவி குடுத்து வச்சவன்னு சொல்ல... ஏன் சார் உங்களுக்கு என்ன குறைச்சல்.. நாமளும் யாரையாவது கலாய்க்கலாம் சார்னு ரோஜா சொல்றா.

உனக்கு செல்லப்பேர்
அதில்லை ரோஜா...நானும் ரவி பாக்கியாவுக்கு செல்லப் பேர் வச்ச மாதிரி, நானும் உனக்கு பேர் வைக்கபோறேன்னு சொல்றான். என்ன பேரு சார் வைக்கப் போறீங்கன்னு கேட்கறா. ரோஸ் மில்க்ன்னு வைக்க போறேன்னு சொல்றான்.

ஏன் ரோஸ் மில்க்
என்ன சார் பேரு இது...எனக்கு பிடிக்கலை சார்னு சொல்றா. ரோஜா நீ ரோஜாப்பூ மாதிரி இருக்கே.. வெட்கப்படும் போது உன் கன்னம் மில்க் மாதிரி ஆகுது. அதனாலதான் ரோஸ்மில்க்னு வைக்கலாம்னு இருக்கேன்னு சொல்றான். ரோஜா வெட்கப்பட... பாரு உன் கன்னம் சிவக்குதுன்னு சொல்றான்..
இப்படி ரெண்டு சீரியல்கள் குடும்பமும் சிறப்பா ஒளிபரப்பாகிட்டு இருக்கு.இன்றோடு இந்த சங்கமம் முடிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications