பரிதாபங்கள் கோபி, சுதாகர் வெச்சு செஞ்சிட்டாங்க.. "லட்டு" வீடியோ போல டெலிட் ஆகுமா? பிரபலம் சொல்வதென்ன
சென்னை: சோஷியல் மீடியாவில் நல்ல கருத்துக்களை சொல்லி வீடியோக்களை பதிவிடுவோர்களுக்கு பலமுறை மிரட்டல்கள் வருகின்றன.. அவர்களது கருத்துக்கள் எதுவாக இருந்தாலும், அதே கருத்தால்தான் பதிலடி தரவேண்டும். அல்லது நீதிமன்றத்துக்கு செல்லவேண்டுமே தவிர, வீடியோ பதிவிட்டவர்களை மிரட்டக்கூடாது என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.. அத்துடன் பரிதாபங்கள் கோபி, சுதாகர் வெளியிட்டிருக்கும் சோஷியல் பரிதாபங்கள் வீடியோவுக்கு பெரும் வரவேற்பும், பாராட்டையும் சேகுவேரா தெரிவித்துள்ளார்,.
நெல்லை கவின் படுகொலை சம்பவமானது தமிழகத்தை உலுக்கி எடுத்து வருகிறது.. ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் கோரிக்கை வலுப்பெற்று வருவதுடன், ஜாதி ஆணவக் கொலையை தூண்டிவிடும் சக்திகளுக்கு எதிராக நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றன.

சபாஷ் கோபி - சுதாகர்
இந்த நிலையில் கவின் ஆணவப் படுகொலை குறித்து பிரபல யூடியூபர்களான 'பரிதாபங்கள்' கோபி- சுதாகர் டீம், தற்போது வெளியிட்டுள்ள நையாண்டி வீடியோவானது, பெரும்பாலானோரின் வரவேற்பை பெற்று வருகிறது. இதனை பலரும் ஷேர் செய்தும் வருகின்றனர்.
இதுகுறித்து Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, நியாயமான கருத்தக்களை பேசுவோர்களுக்கு மிரட்டல்கள் வருவது வாடிக்கையாகும்.. குறிப்பிட்ட ஒரு நபரை, அல்லது கட்சியை, அல்லது இயக்கத்தை வன்மத்தோடு பேசக்கூடிய நபர்கள் தங்களுக்கு வரக்கூடிய மிரட்டல்களை சந்திக்கலாம்.
உள்நோக்கமில்லை
ஆனால், உள்நோக்கமில்லாமல், வன்மம் இல்லாமல், எதேச்சையாக கருத்து சொல்லும்போது, அந்த கருத்துக்கு மாற்றுக்கருத்தை தெரிவிக்காமல், நேரடியாகவே போனை போட்டு மிரட்டிவிடுவார்கள்.
இங்கே சுதாகர் , கோபியை பொறுத்தவரை தம்பிகள் இருவருமே இதுவரை பல வீடியோக்களை பதிவிட்டுள்ளனர்.. பெரும்பாலான வீடியோக்கள் சிரிக்கக்கூடியதாக இருந்தாலும் சிந்திக்கக் கூடியதாகவே இருக்கும்.. கண்டிப்பாக மெசேஜ் சொல்லக்கூடிய வகையில்தான் அந்த வீடியோக்கள் இருக்கும்.
லட்டு பரிதாபங்கள்
லட்டு பரிதாபங்கள் போல, தற்போது வெளியான சோஷியல் பரிதாபங்களும் வைரலாகி கொண்டிருக்கிறது.. நையாண்டி, காமெடியுடன் சேர்ந்து செருப்பால அடித்த மாதிரி கருத்தை சொல்லியிருப்பதற்கு, என்னுடைய அபார பாராட்டுக்கள்..
அந்த வீடியோவை டெலிட் செய்வதும், செய்யாமல் போவதும் அவர்களது விருப்பம் என்றாலும், டெலிட் பண்ணிவிடக்கூடாது என்பதுதான் என்னுடைய விருப்பமாக உள்ளது.
ஆனால், இந்த வீடியோவை பதிவிட்டதற்கு மிரட்டல்கள் கண்டிப்பாக வரும்.. நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக வரக்கூடும்.. ஆனால், யாரையுமே குறிப்பிட்டோ அல்லது எந்த சாதியையும், குறிப்பிட்டோ பேசவில்லை.. நுணுக்கமாக, எடிட்டிங் செய்து, வீடியோவை வெளியிட்டாலும், சரியான கருத்தையே பதிவு செய்துள்ளனர்.
சப்போர்ட் செய்ய வேண்டும்
வீடியோக்களை பதிவிடுவோர்களின் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும், அதே கருத்தால்தான் பதிலடி தரவேண்டும். அல்லது நீதிமன்றத்துக்கு செல்லவேண்டுமே தவிர, வீடியோ பதிவிட்டவர்களை மிரட்டக்கூடாது..
எனவே, செய்தி சேனல்களில் உள்ளவர்கள், இந்த விஷயத்துககு சப்போர்ட் செய்ய வேண்டும்.. இதுபோன்ற யூடியூபர்களுக்கு அமைப்புகள் எதுவும் இல்லை.. அமைப்பு ரீதியாக சப்போர்ட் இருந்தால்தான், ஆதரவு தர முடியும்..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications