Agni Natchathiram Serial: இந்த சாமியாருங்க பரிகாரம் செய்யறது செம ஜாலியா இருக்கு!
சென்னை: சன் டிவியின் அக்னி நட்சத்திரம் சீரியல், முற்பகல் நேரத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.இதில் நடிகை மவுனிகா ஹீரோயின் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு இந்த சீரியலில் மீரா அகிலா என்று இரட்டை பெண் பிள்ளைகள்.
மீராவை கட்டிக்கொடுத்த வீட்டில் பிரச்சனை என்றுதான் பரிகாரம் செய்ய ஜோதிடம் பார்க்கும் மூன்று சாமியார்கள் மீரா வீட்டுக்கு வர்றாங்க. இவங்க செய்த பரிகாரம்தான் பார்க்க ஜாலியா இருந்துச்சு என்று பலரும் கலாய்க்கிறார்கள்.
வீட்டில் தீய சக்திகள் அதிகமா இருக்குதுன்னு வந்த சாமியார்கள் சொல்றாங்க. அந்த தீய சக்தியை மூன்று சாமியார்களும் வெறும் வீட்டில் ஒரு அக்னி குண்டம் ஹோமம் வளர்க்காமல் கூட கண்டுபிடித்து சொல்கிறார்கள்.

ஏகப்பட்ட பிரச்சனை
வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனை என்று மீராவின் மாமியார் மற்றும் சொந்த பந்தங்கள் ஜோதிடரை பார்க்க போறாங்க. அவர் மார்ச் மாசம்தான் உங்க வீட்டுக்கு வந்து நாங்க பரிகாரம் என்னன்னு சொல்ல முடியும்னு சொல்றார். அவ்ளோ நாளா, முடியாது சாமி.. வீட்டில் ரொம்ப பிரச்சனைன்னு சொல்றாங்க மீரா மாமியார்.இல்லை, உங்களை போல பல வீடுகளுக்கு நாங்க தேதி குறிச்சு குடுத்து அதனால மார்ச் மாசம்தான் வர முடியும்னு சொல்றார் ஜோதிடர்.சரி சம்மதம் மார்ச் மாசமே வாங்கன்னு சொல்லிட்டு போறாங்க.

அடுத்த சீனில்
கட் செய்தால் அடுத்த சீனில் மார்ச் மாசம் வந்துருச்சு.மூன்று ஜோதிடர்கள் சாமியார் மாதிரி வீட்டுக்கு வந்து பரிகாரம் செய்கிறேன் என்று சொல்றாங்க. ஒரு சொம்பில் தண்ணி வச்சுக்கிட்டு, மாவிலையால் வீடு முழுக்கத் தெளிக்கிறார்கள். பின்னர் மூன்று பேரும் நடு ஹாலில் நின்று வெறும் கையை அங்கு இங்கு என்று தூக்கி தீய சக்திகளை பிடித்து கீழே போட்டார்கள். கடைசியாக ஓம் நம சிவாய சொல்லி சாமி கும்பிட்டார்கள்.

தீய சக்தி
வீட்டில் நிறைய தீய சக்திகள் இருக்கிறது என்று சொல்லிவிட்டு, இந்த சக்திகளை அடக்க இன்னொரு நாள் பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு கிளம்ப போகையில் மீரா கஷ்டப்பட்டு சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு போக வேண்டும் சாமி என்று கேட்டுக்கொள்ள, அவர்களும் சாப்பிட உட்காருகிறார்கள். உண்மையில் தீய சக்தி மீராவின் தங்கை அகிலா அண்ட் கோ தான்.
அதோடு, இவள் இருப்பதால்தான் இந்த குடும்பத்தில் கெடுதல் நடக்குது. இவளுக்கு தாலி தோஷம் இருக்கு என்றும் சொல்கிறார். எல்லாமே பார்க்க வேடிக்கையாத்தான் இருக்கு.

சாப்பாட்டை முகத்தில்
மூவரும் சாப்பாட்டில் கை வைக்கப் போக, ஷாக் அடிச்சது போல கையை வெடுக்கென்று இழுக்கிறார்கள். அனைவரும் பதறிப் போக, மறுபடியும் சாப்பாட்டில் மூவரும் கை வைத்து, மீண்டு ஷாக் அடிப்பது போல இழுத்துக் கொள்கிறார்கள். அதில் ஒரு சிறிய வயது சாமியார் சாப்பாட்டை இலையோடு சுருட்டி, மீராவின் முகத்தில் அடிக்கிறார். ஒரு ஜோதிடராக இருக்கும் சீடர் சாமியார் இப்படி செய்யலாமா?
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications