Web Series: அட.. புஷ்கர் காயத்ரி வெப் சீரீஸில் கலக்கல் மன்னன் நம்ம பார்த்திபன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் ஓரம் போ திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்கள். இவர்கள் விக்ரம் வேதா படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்றனர்.

அமேசான் பிரைம் வீடியோ போன்ற புகழ்பெற்ற இணைய தளங்கள் வெப்சீரீஸ், மற்ற நிகழ்ச்சிகள் என்று தயாரிப்பு நிறுவனங்களுடன் கைக்கோர்த்து பயணிக்கும் நிலையில், திரை இயக்குநர்கள் கவனம் வெப் சீரீஸ் பக்கம் வெகுவாக திரும்பி உள்ளது.

தமிழ் திரையுலகின் இயக்குநர்கள் கவுதம் மேனன், வெற்றி மாறன், வெங்கட் பிரபு இவர்களும் இதில் களம் இறங்கி உள்ளனர். இந்த நிலையில்தான் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் ஆர். பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடிக்கும் வெப் சீரீஸ் சுடச் சுட தயாரிக்கப்பட்டு ஷூட்டிங் நடைப்பெற்று வருகிறது.

அமேசான் பிரைம் வீடியோ

அமேசான் பிரைம் வீடியோ

புஷ்கர் காயத்ரி இணைந்து அமேசான் பிரைம் வீடியோ இணைய தளத்துடன் கைக்கோர்த்து வெப் சீரீஸ் ஒன்றை இயக்கி வருகின்றனர். இதன் படப்பிடிப்பு கோவை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தற்போது நடைப்பெற்று வருகிறது. நடிகர் பார்த்திபன், கதிர் ஆகியோர் முக்கிய வேடமேற்று நடித்து வருகின்றனர். பார்த்திபன் என்றாலே கதை சுருக்கம் சுருக்கமான வாக்கியங்களில் பேச்சை முடிப்பார். வெப் சீரிஸும் சுருக்கமாக இருக்கும் நிலையில்... இந்த தொடர் கலக்கல் மன்னா.பாணியில் இருக்கும்!

ஒத்த செருப்பு

ஒத்த செருப்பு

இயக்குநர் பார்த்திபன் எப்போதும் வித்தியாசமாக சிந்திக்க கூடிய இயக்குநர். இவர் கடைசியாக இயக்கி வெளிவந்த ஒத்த செருப்பு படம் ஆஸ்கர் விருதுகளுக்கான படங்களின் பெயர் பட்டியலில் இடம்பெற்று இவருக்கு பாராட்டை பெற்றுத் தந்துள்ளது..அந்த வகையில் இந்த வெப் சீரிஸில் நடிக்கும் பார்த்திபன், வெப் சீரிஸ் பார்க்கும் ஆர்வலர்களை மிகவும் எதிர்பார்க்க வைத்து இருக்கிறார்.

காயத்ரி புஷ்கர்

காயத்ரி புஷ்கர்

காயத்ரி புஷ்கர் இருவரும் இணைந்து இயக்கிய விக்ரம் வேதா படம் இவர்கள் இயக்கத்தை சிலாகித்து பேச வைத்தது. மாதவன், விஜய் சேதுபதி இணைந்து நடித்து ஆட்டத்தை மேலும் மெருகூட்டி இருந்தார்கள். இந்த ஜோடி இளம் இயக்குநர்கள் என்பதாலும், ஹிட் படங்களை இயக்கியவர்கள் என்பதாலும் இருவரும் இயக்கி வரும் வெப் சீரிஸ் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டி இருக்கிறது.

சினிமா தயாரிப்பு நிறுவனம்

சினிமா தயாரிப்பு நிறுவனம்

இளம் ஜோடியான காயத்ரி புஷ்கர் இருவரும் சேர்ந்து சினிமா தயாரிப்பு நிறுவனமும் தொடங்கி உள்ளனர். என்றாலும் வெப் சீரீஸ் தயாரிக்க அமேசான் பிரைம் வீடியோவுடன் இணைத்து உள்ளார்கள். அமேசான் பிரைம் வீடியோ, தமிழ் மொழியில் இப்படி புகழ்பெற்ற இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகளை குறிவைத்து வெப்சீரீஸ் களத்தில் இறங்கி இருக்கிறது.அதே சமயம். ஆர். பார்த்திபன் போன்ற அபாரமான கலைஞர்களையும் பயன்படுத்திக்கொள்ள ஆலோசனையும் தருகிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+