நடத்துவது ஆட்சியும் இல்லை.. செய்வது நிர்வாகமும் இல்லை.. ஆனால் கான்ஃபிடன்டா! தவெக அரசை விளாசிய உதயநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக அரசு டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரையிலான கூடுதல் மின் தேவையை சமாளிக்க வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41.50க்கு வாங்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப் பாடம் புகட்டுவார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மின்சாரத் தேவை அதிகரித்து வரும் நிலையில், டிசம்பர் முதல் மே மாதம் வரை பீக் நேரத்தில் தேவைப்படும் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.41.50-க்கு கொள்முதல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. மின்வாரியம் கடனில் மூழ்கி நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், ஒரு யூனிட் மின்சாரம் 37.50 வாங்க முடிவு செய்ததற்கே கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

Udhayanidhi Stalin

உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

இந்த சூழலில், ரூ. 41.50 வாங்க உள்ளதாக தகவல் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:-

Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக் கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா?

நடத்துவது ஆட்சியும் இல்லை..

நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா? இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள்.

இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

நிர்மல் குமார் மறுப்பு

இதற்கிடையே, ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41.50க்கு வாங்கப்போவது இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ள டெண்டரை ரத்து செய்யுமாறு ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளேன் என்றும் மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+