கஷ்டப்படுற போது யாருமே உதவல.. 100, 500 தான்.. பருத்திவீரன் சின்ன வயது முத்தழகுவின் உருக்கமான பேட்டி
சென்னை: 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் சின்ன வயது முத்தழகு கேரக்டரில் நடித்த நடிகை கார்த்திகா தேவி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
இந்த திரைப்படத்திற்கு பிறகு சில வாய்ப்புகள் வந்தாலும் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்று கூறி இருக்கிறார்.

அத்தோடு இந்த திரைப்படத்தில் வாங்கிய சம்பளம் அதற்குப் பிறகு இந்த திரைப்பட தரப்பிலிருந்து தனக்கு செய்த செயல் குறித்தும் அந்த பேட்டியில் அந்த நடிகை பேசியிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பருத்திவீரன் திரைப்படம் நடிகர் கார்த்தியின் நடிப்பில் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் நடிகர் கார்த்தியின் முதல் திரைப்படமாக இருந்தாலும் அதில் தன்னுடைய நடிப்பை வேற லெவலில் காட்டி ரசிகர்களை மிரட்டி இருப்பார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டது.
இந்த திரைப்படம் இரண்டு வருட தயாரிப்புக்கு பிறகு 2007 பிப்ரவரி 23ஆம் தேதி வெளியாகி பட்டி தொட்டி எல்லாம் கலக்கி இருந்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் நடிகர் கார்த்திக்கு அடுத்தடுத்த பல திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. அதுபோல இந்த திரைப்படத்தில் நடிகை பிரியாமணி கதாநாயகியாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் கார்த்தி போலவே நடிகை பிரியா மணி நடித்த முத்தழகு கேரக்டரும் பெரிய அளவில் அழுத்தமானது.
துறுதுறு வென்ற திமிர் பிடித்த கேரக்டராக முத்தழகு அனைவருடைய மனதை கவர்ந்திருப்பார். அதுவும் கடைசி சீன் சொல்லவே வேண்டாம். அதுபோல முத்தழகுவாக சின்ன வயது குழந்தையும் பலருடைய மனதை கவர்ந்து இருந்தது. அந்த கேரக்டரில் நடித்தது மதுரையை சார்ந்த கார்த்திகா தேவி தானம்.. அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய நடிப்பு மற்றும் தற்போதைய நிலை குறித்து பேசி இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
மதுரை பக்கத்தில் இருக்கும் சின்ன கிராமத்தில் பிறந்த கார்த்திகா தேவி நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது தன்னுடைய ஊரில் இருந்து சிலர் திரைப்படங்களில் நடிப்பதற்காக போய்க்கொண்டிருந்ததை பார்த்திருக்கிறார். அதே நேரத்தில் தான் படிக்கும் பள்ளியிலும் பருத்தி வீரன் திரைப்படத்திற்காக நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளை புகைப்படம் எடுத்து இருக்கிறார்கள். அதில் கார்த்திகா தேவியும் ஒருவராம்.
ஸ்கூல் படிக்கும்போதே கார்த்திகா தேவி டான்ஸ் நன்றாக ஆடுவாராம். அப்போது ஆடிசனுக்காக இவரை டான்ஸ் ஆட சொல்லி இருக்கிறார். இவரும் டான்ஸ் ஆட பிறகு இவரை இந்த திரைப்படத்தில் நடிக்க வைப்பதற்கு செலக்ட் செய்து விட்டார்களாம். பிறகு கார்த்திகா தேவியை தேனி பக்கத்தில் சூட்டிங் நடக்கும் இடத்திற்கு கூட்டிக்கொண்டு போயிருக்கிறார்கள். அங்கு பட குழுவினர் சொன்னபடியே கார்த்திகா தேவியும் நடித்துக் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் அவருக்கு எவ்வளவு சம்பளம் என்று தெரியாதாம்.
ஆனால் அது குறித்து அவருடைய அம்மா பேசுகையில் என்னுடைய மகள் இந்த திரைப்படத்தில் நடித்ததற்கு பெரிய அளவில் சம்பளம் எல்லாம் தரவில்லை. என்னுடைய கணவரிடம் 100 அல்லது 500 ரூபாய் தான் கொடுத்து அனுப்புவார்கள். அதுதான் சம்பளமாக கொடுத்து அனுப்புவார்கள் என்று கூறியிருக்கிறார். அதுபோல இந்த திரைப்படத்திற்காக கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கார்த்திகா தேவி நடித்திருந்தாராம்.

சின்ன வயது பிரியாமணி அதாவது சின்ன வயது முத்தழகு கேரக்டரில் கார்த்திகா தேவி நடித்து முடித்த பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதிலும் நடித்திருக்கிறார். ஆனால் சம்பளம் சொற்ப பணமாக தான் கிடைத்திருக்கிறது. அதற்கு பிறகு சில வருடங்கள் கழித்து கார்த்திகா தேவியின் அப்பா இறந்து போன பிறகு இவருடைய வீட்டில் மூன்று பெண் குழந்தைகள் என்பதால் குடும்பம் ரொம்பவே கஷ்டத்திற்கு ஆளானதாம்.
கடன் பிரச்சனையால் இவர்களுடைய குடும்பம் தவித்த போது இவர்களை பருத்திவீரன் திரைப்படத்திற்கு நடிக்க வைப்பதற்காக கூட்டிக்கொண்டு போனவர்களிடம் தங்களுடைய நிலைமையை கூறி இருக்கிறார்கள். அமீர் மற்றும் இந்த திரைப்பட பிரபலங்களிடம் தங்களுடைய நிலைமையை எடுத்து சொல்ல சொன்னார்களாம். ஆனால் அவர்கள் சொன்னார்களா என்று தெரியவில்லை... இப்ப வரைக்கும் எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று கார்த்திகா தேவி கூறியிருக்கிறார்.
அதோடு பருத்திவீரன் திரைப்படம் எங்கள் ஊரில் 20 நாட்கள் ஷூட்டிங் நடந்தது. அப்போது என்னுடைய அம்மா தான் அமீர், பிரியாமணிக்கு எல்லாம் சாப்பாடு செய்து கொடுத்தார். நாங்க நல்லாவே அவர்களை பார்த்துக் கொண்டோம். எங்களிடம் ரொம்பவே பாசமாக அமீர் நடந்து கொண்டார் ஆனால் பிறகு தான் இப்போது எங்களை வந்து பார்ப்பது இல்லை. எங்களுடைய நிலைமை பற்றி அவருக்கு தெரியுமா? என்பது கூட தெரியாது என்று அந்த பேட்டியில் கார்த்திகா தேவி அதாவது பருத்திவீரன் சின்ன வயது "முத்தழகு" பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications